Showing posts with label விளையாட்டு செய்திகள். Show all posts
Showing posts with label விளையாட்டு செய்திகள். Show all posts

Tuesday, January 20, 2015

டீம் இந்தியா! உலகக் கோப்பை ஸ்கேனிங்

ப்போதுதான் தோனி, லாங்-ஆனில் சிக்ஸ் தூக்கி இந்தியாவுக்கு உலகக் கோப்பையைப் பெற்றுத் தந்ததுபோல் இருக்கிறது. அதற்குள் நான்கு ஆண்டுகள் ஓடிவிட்டன. 2015-ம் ஆண்டு கிரிக்கெட் உலகக் கோப்பை இதோ... டி.வி-க்கு எட்டும் தூரத்தில்!

இந்தியா, உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் பிப்ரவரி 15-ம் தேதி பாகிஸ்தானுடன் மோதுகிறது. கடந்த முறை உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இருந்த சச்சின், ஷேவாக், யுவராஜ் சிங், கௌதம் காம்பீர், ஜாகீர் கான், ஹர்பஜன் சிங் போன்ற மேட்ச் வின்னிங் சீனியர்கள் யாருமே இந்த முறை இல்லை. அணியின் ஒரே சீனியரான தோனி தலைமையில் மீண்டும் உலகக் கோப்பையில் களம் இறங்கும் இந்திய அணி வெற்றி பெறுமா?

ஒரே சூப்பர் ஸ்டார் தோனி!

Tuesday, June 24, 2014

உலகக் கோப்பை 10 கில்லாடிகள்!

லகக் கோப்பை கால்பந்து போட்டிகள், கணிக்க முடியாத ஆச்சரியங்களையும் பரபரப்புகளையும் அள்ளி வழங்குபவை. தொடரின் முதல் போட்டியிலே நெதர்லாந்திடம் 5-1 என்று உலக சாம்பியன் ஸ்பெயின் மண்ணைக் கவ்வியது. உருகுவே, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா என முக்கிய அணிகள் தோல்வி முகத்தில் துவண்டுகிடக்கின்றன. இந்திய நேரப்படி நள்ளிரவுகளில் நடைபெறும் இந்தக் கால்பந்து திருவிழாவில், அலாரம் வைத்து எழுந்து பார்க்க வேண்டிய ஸ்டார் பிளேயர்களின் பட்டியல்... இதோ...

Monday, July 30, 2012

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்: துப்பாக்கி சுடுதலில் வெண்கலம் வென்றார் ககன் நரங்

லண்டன்: ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு இன்று முதல் பதக்கம் கிடைத்தது. 10 மீ., துப்பாக்கி சுடுதல் போட்டியில் ககன் நரங் மூன்றாவதாக வந்து வெண்கலம் வென்றார்.
லண்டனில் கடந்த வெள்ளிக்கிழமை கோலகலாமாக துவங்கியது. இந்த போட்டியில் தற்போது பதக்க பட்டியலில் சீனா முதலிடத்தில் உள்ளது. பல நாடுகள் பதக்க வேட்டையை துவக்கியுள்ள நிலையில் இந்திய அணி மட்டும் பதக்கம் பெறாமல் இருந்தது. இந்திய அணி சார்பில் கலந்து கொண்ட பல வீரர்கள் தோல்வியை தழுவினர். பேட்மின்டனில் ஜூவாலா கட்டா தோல்வியடைந்தார். டேபிள் டென்னிசில் இந்திய அணி தோல்விடைந்தது. இதனால் இந்திய ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
நேற்று செய்னா நேவல் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். இன்று வில்வித்தையில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட பொம்பல்யா காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார். பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றதால், இந்த முறையும் வெல்வார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபினவ் பிந்தரா, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற முடியாமல் வெறியேறினார்.
இன்று , இந்தியாவின் ககன் நரங் வெண்கலப்பதக்கம் வென்று இந்திய ரசிகர்களின் ஏக்கத்தை போக்கினார். அவர், துப்பாக்கி சுடுதல் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவு தகுதிச்சுற்றில் 598 புள்ளிகள் பெற்று 3வது இடம் பெற்று பைனலுக்கு முன்னேறினார்.பைனலில் அவர் 103.1 புள்ளிகள் பெண்ணு மொத்தம் 701.1 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார். இதன் மூலம் லண்டன் ஒலிம்பிக்கில் முதல் பதக்கம் வென்ற வீரர் என்ற சாதனை படைத்தார்.
ககன் சாதனைக்கு அவரது தந்தை பெருமிதம் தெரிவித்துள்ளார். ககன் , இந்திய கொடியை ஒலிம்பிக் கிராமத்தில் பறக்க விட்டுள்ளார் என பெருமையுடன் கூறினார்.
இன்று துகப்பாக்கி சுடுதலில் வெண்கல பதக்கம் வென்ற ககன் நரங் மூன்றாவது வீரர் ஆனார். முன்னாக கடந்த 2004ம் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர் வெள்ளிப்பதக்கம் வென்றார். கடந்த 2008ம் ஆண்டு 10.மீ., ஏர் ரைபிள் பிரிவில் அபினவ் பிந்தரா தங்கப்பதக்கம் வென்றார்.
இன்றைய போட்டியில் ருமேனியாவின் ஆலின் ஜார்ஜ் மோல்டோவியாயு தங்கப்பதக்கத்தையும், இத்தாலியின் நிக்கோலோ கேம்ப்ரியானி வெள்ளிப்பதக்கம் வென்றார்.
வெண்கலப்பதக்கம் வென்ற ககன் நரங், அரியானா மாநில அரசு ஒரு கோடி பரிசு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
ககன் நரங் பதக்கம் வென்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர், இன்னும் பல வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார். மேலும் அவர், அபினவ் பிந்தரா பதக்கம் வென்றிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்கும் என கூறினார். ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியும் ககன் நரங்கிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

Friday, July 27, 2012

லண்டன் ஒலிம்பிக்: இன்று கோலாகல துவக்கம்!

லண்டன்:ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த லண்டன் ஒலிம்பிக் போட்டி இன்று கோலாகலமாக துவங்குகிறது. இதில், பங்கேற்று மகத்தான சாதனை படைக்க உலக விளையாட்டு நட்சத்திரங்கள் காத்திருக்கின்றனர்.பிரிட்டன் தலைநகர் லண்டனில், 30வது ஒலிம்பிக் போட்டி (ஜூலை 27-ஆக., 12) நடக்க உள்ளது. இதில், இந்தியா உட்பட 204 நாடுகளை சேர்ந்த 10,500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.இன்று ஒலிம்பிக் மைதானத்தில் துவக்க விழா (இந்திய நேரப்படி அதிகாலை 1.00 மணி) வண்ணமயமாக நடக்கிறது.

ஆஸ்கர் விருது வென்ற பிரிட்டனை சேர்ந்த டேனி பாய்ல், துவக்க விழாவின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரது கற்பனையில், மைதானமே ஒரு பசுமையான கிராமப்புறமாக மாற உள்ளது. தொடர்ந்து ஆயிரக்கணக்கான கலைஞர்கள், பங்வேறு சாகசங்களை நிகழ்த்திக் காட்ட உள்ளனர்.போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணிவகுப்பில் இந்திய மூவர்ணக் கொடியை ஏந்தி, மல்யுத்த வீரர் சுஷில் குமார் வர உள்ளார். பின் ஜோதி ஏற்றப்படும். இரண்டாம் ராணி எலிசபெத், ஒலிம்பிக் போட்டியை முறைப்படி துவக்கி வைக்கிறார்.

Friday, November 20, 2009

அகாசியின் கேசம் நிஜமானதல்ல!


முன்னாள் சாம்பியன் டென்னிஸ் வீரர் ஆந்ரே அகாசி, தான் போதைப்பொருள் பயன்படுத்தியது உண்டு என்று சமீபத்தில் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அவர் மனம் திறந்திருக்கும் மற்றொரு விஷயம், தனது `கேசம்' பற்றிய விஷயம்.

தான் 1990-களில் `வைத்திருந்த' சிங்கப் பிடரி பாணி கேசம் உண்மையில் ஒரு `டோப்பா' என்ற உண்மையைத் தெரிவித்திருக்கிறார் அகாசி.

அவர் எழுதியிருக்கும் சுயசரிதையின் சில பகுதிகள் இங்கிலாந்து பத்திரிகைகளில் அண்மையில் வெளிவந்திருக்கின்றன. அதில் மேற்கண்ட விஷயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது முதலாவது கிராண்ட்ஸ்லாம் போட்டியின்போது தன் தலைமுடியுடன் கூடுதலாகக் கொஞ்சம் முடியை `பின்'னைக் கொண்டு சேர்த்திருந்ததாக எழுதியுள்ளார் அகாசி. அது 1990-ம் ஆண்டு பிரெஞ்சு ஓபன் போட்டி. அப்போட்டியில் தான் தோற்றதற்கு தலைமுடியைப் பற்றிய தனது கவலையும் ஒரு காரணம் என்று அகாசி ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அந்தப் போட்டிக்கு முன்னதாக வெற்றிக்காக அல்லாமல், போட்டியின்போது தலைமுடி கீழே விழுந்துவிடக் கூடாது என்றே தான் பிரார்த்தித்ததாகக் கூறுகிறார் அகாசி.

தனது தலைமுடி இழப்பைச் சரிகட்டும் விதமாக `டோப்பா' அணியத் தொடங்கியதாகத் தெரிவிக்கும் அகாசி, ``ஒவ்வொரு நாள் காலையில் எழுந்ததும் நான் எனது வேறொரு அடையாளத்தைக் காண்பேன். முகம் பார்க்கும் கண்ணாடி... அங்கு இங்கு என்று. அப்போது என்னை நானே கேட்டுக்கொள்வேன். நீ ஒரு `டோப்பா'வை அணிய வேண்டுமா? அதிலும் டென்னிஸ் களத்தில்?' என்று. அதற்கு நானே, `வேறு என்ன செய்வது?' பதில் கேள்வியும் கேட்பேன்.

பிரெஞ்சு ஓபன் இறுதிப்போட்டிக்கு முந்தைய நாள் இரவு அகாசி `டோப்பா'வுடன் குளிக்க, அது சிதைய ஆரம்பித்தது. சிக்கலும் தொடங்கியது. அது குறித்து, ``அனேகமாக நான் அப்போது `டோப்பா'வை தவறாக அலசியிருக்கலாம்'' என்கிறார் அகாசி.

அந்த நேரத்தில் பயந்துபோன அவர், தனது சகோதரர் பில்லியை அறைக்கு அழைத்தார். இருவரும் சேர்ந்து `டோப்பா'வை `கிளிப்'கள், `பின்கள்' கொண்டு ஒரு மாதிரி அகாசியின் தலையில் பொருத்தினர்.

தற்போது 39 வயதாகும் அகாசி மேலும் இதுகுறித்து எழுதுகையில், ``நான் `டோப்பா' இல்லாமல் விளையாடியிருக்கலாம்தான். ஆனால் நான் ஆரம்பத்திலிருந்தே `டோப்பா'தான் அணிந்திருக்கிறேன் என்று அறிந்தால் பத்திரிகையாளர்கள் என்ன எழுதுவார்கள்? ஆட்டத்துக்கு முந்தைய சிறுபயிற்சியின்போது நான் பிரார்த்தனை செய்வேன். போட்டியில் வெல்ல வேண்டும் என்பதற்காக அல்ல, தலைமுடி பறந்துவிடக் கூடாது என்பதற்காக.

ஒவ்வொரு தாவலின்போதும் `டோப்பா' பறந்து தரையில் விழுவதாகக் கற்பனை செய்வேன். கோடிக்கணக்கான ரசிகர்கள் டிவிக்கு முன்னால் நன்றாக நகர்ந்து, கண்கள் விரியப் பார்த்து, எனது தலைமுடி எப்படி என் தலையிலிருந்து பறந்தது என்பதை ஆச்சரியத்துடன் பேசிக்கொள்வதை நான் மனக்கண்ணில் காண்பேன்.

`டோப்பா'வுடன் விளையாடும் போது...
அகாசியை முதலில் மொட்டைத் தலையுடன் தோன்ற வைத்தவர் அவரது முன்னாள் மனைவியான புரூக் ஷீல்ட்ஸ்தானாம். ``நான் எஞ்சியிருக்கும் எனது முடிகளை மொட்டையடித்துக்கொள்ள வேண்டும் என்று அவர்தான் கூறினார். அது, நான் எனது பற்களை எல்லாம் உதிர்த்துவிட வேண்டும் என்பதைப் போல இருந்தது. எப்படியோ, அதைப் பற்றி நான் சில நாட்கள் யோசித்தேன். அது எனக்கு ஏற்படுத்திய சங்கடங்கள், அதை நான் மறைத்தது, அதற்காக நான் கூறிய பொய்கள் எல்லாம் என் நினைவுக்கு வந்தன.

ஆனால் நான் ஒரு முடிவுக்கு வந்தபோது, மொட்டைத் தலையுடன் ஒரு `புதியவன்' என் முன் கண்ணாடியில் தோன்றி என்னைப் பார்த்துப் புன்னகைத்தான்'' என்று முடிக்கிறார் அகாசி.