Showing posts with label சுற்றுபுறசுழல். Show all posts
Showing posts with label சுற்றுபுறசுழல். Show all posts

Tuesday, March 6, 2012

அழகான போன்சாய் மரங்கள் பராமரிப்பது சுலபம்!

போன்சாய் என்பது இயற்கையான மரத்தைப் போலவே சிறியதாக உள்ள மரம். இதனை வீட்டில் அழகிற்காக வளர்க்கலாம். இதனை பராமரிப்பது என்பது மிகவும் கடினமான விஷயமல்ல. நீர் ஊற்றுவது, உரமிடுவது, தொட்டி மாற்றுவது போன்ற ஒரு சில விஷயங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது அழகான, ஆரோக்கியமான போன்சாய் மரங்களை வளர்க்கலாம்.

கோடை காலத்திலும், வசந்த காலத்திலும் போன்சாய் மரங்களை பால்கனி போன்ற இடங்களில் வளர்க்கலாம். அப்பொழுது சூரிய ஒளி செடிகளுக்கு நன்றாக கிடைக்கும். அதேசமயம் குளிர்காலத்தில் வீட்டிற்குள் தெற்குப் பகுதியில் வைத்து வளர்க்கவேண்டும். இல்லையெனில் கிழக்கு அல்லது மேற்குப் பகுதிகளில் வைக்கலாம். வடக்குப் பகுதி ஏற்றதல்ல என்கின்றனர் தோட்டக்கலை நிபுணர்கள். தினசரி போன்சாய் மரங்களுக்கு நான்கு முதல் 6 மணிநேரம் சூரிய ஒளி கிடைக்குமாறு வைக்கவேண்டும்.

நீர் ஊற்றுதல்

முதலில் நீர் ஊற்றுவது. நீர் ஊற்றுவது என்பது மரத்தில் வகையைப் பொறுத்து மாறுபடும். தினமும் குறிப்பிட்ட நேரத்தில் நீரூற்ற வேண்டியது இல்லை. நாம் விரலை மண்ணில் விட்டுப் பார்த்தால், ஒரு அரை இன்ச் ஆழம் வரை காய்ந்து போய் இருந்தால் நீர் ஊற்ற வேண்டும். தண்ணீர் ஊற்ற மதிய நேரம் ஏற்றதல்ல. காலையிலோ அல்லது மாலை நேரத்திலோ தண்ணீர் ஊற்ற வேண்டும்.

தண்ணீரை அப்படியே தொட்டியினுள் கொட்டக்கூடாது லேசாக தெளிப்பது போல சிறிது சிறிதாக ஊற்ற வேண்டும். இல்லாவிட்டால், நீரின் வேகத்தில் மண் அடித்து செல்லப்பட்டு விடும். அதே சமயம், நீரானது, எல்லா வேர்களும் நனையும் வகையில், அதிகப்படி நீர் வெளியேறும் ஓட்டை வழியாக வெளியேறும் வரை ஊற்ற வேண்டும். மழை நீரை சேகரித்து வைத்து ஊற்றினால் நல்லது.

உரமிடுதல்

இயற்கையாக வளரும் மரங்களில் வேர்கள் அதற்கான சத்து கிடைக்கும் இடம் நோக்கி வளர்ந்து கொள்ளும். ஆனால் போன்சாயானது, நாம் சிறு தொட்டியில் வளார்ப்பதால், உரமிடுவது மிக அவசியம். நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் என மூவகை உரங்கள் மரத்துக்கு முக்கியம். நைட்ரஜன் இலை, கிளை வளர்ச்சிக்கும், பாஸ்பரஸ் வேர்களின் ஆரோக்கியத்துக்கும், பொட்டாசியம் பூக்கள் காய்களின் காய்ப்புக்கும் மிக அவசியமானது. நாம் வருடத்தின் எக்காலத்தில் உரமிடுகிறோமோ, அதைப் பொறுத்து, நாம் உரமிடும் கலவை மாறுபடும்.

இலையுதிர் காலத்தில் நைட்ரஜன் அளவு குறைவாகவும், வசந்த காலத்தில் நைட்ரஜன் அளவு கூடுதலாகவும் இட வேண்டும். வெயில் காலத்தில் சரிவிகிதமாக உரமிட வேண்டும். மரம் சற்று முதிர்ந்து விட்டால், வளர்ச்சிக்கான நைட்ரஜன் விகிதத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம் பூப்பூக்கும் பருவத்தில் பொட்டாசியம் அளவைக் கூட்டிக் கொள்ளவேண்டும்.

தொட்டி மாற்றுதல்

போன்சாய் மரத்திற்கு ஒரு வருடத்திற்கு ஒருமுறை தொட்டி மாற்றுவது அவசியம். தொட்டி மாற்றுவதால், நம் போன்சாய் மரம் சிறியதாகாது, மாறாக, அது புது சத்துக்கள் கிடைக்க உதவுகிறது. ஆரம்பத்தில் வேகமாக வளரும் மரமாக இருந்தால், இரு வருடம், இன்னும் சொல்லப்போனால் ஒரு வருடத்துக்கொரு முறை தொட்டி மாற்ற வேண்டும். வசந்த காலம் ஆரம்பிக்கும் முன் தொட்டி மாற்றிவிட வேண்டும். அப்போ தான் அதனால் ஏதும் சேதம் ஏற்பட்டால் கூட விரைவில் வளர்ந்து விடும். மரத்திற்கு வயதாகி விட்டால் 3 அல்லது 5 வருடத்துக்கொரு முறை மாற்றினால் போதும்.

தொட்டி மாற்றும் போது, வேர்களில் இருக்கும் மண்ணை லேசாக உதிர்த்து விடவேண்டும். பின்னர் வேறொரு தொட்டியில் மக்கிய உரம், மணல், மற்றும் செம்மண் கலவையில் அதை ஊன்ற வேண்டும். மண் கலவை நீரை நன்கு உறிஞ்சும் தன்மையதாக இருக்க வேண்டும். சிறிது மண்ணை தொட்டியில் போட்டு, பின் அதில் மரத்தை வைத்து, அதன் மேல் மீதி மண்ணைப் போட வேண்டும். மண்ணில் ஊன்றும் முன், அதன் வேர்களை வெட்டிவிட வேண்டும். மிக நீளமான வேர்கள் மற்றும் அழுகிப் போன வேர்களை லேசாக நறுக்கிவிட வேண்டும். தொட்டி மாற்றிய பிறகு, இரு மாதங்களுக்கு, அம்மரத்தை கடுமையான காற்று மற்றும் கடுமையான வெப்பத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.

மரங்களை அதிக அளவில் பெரியதாக விடக்கூடாது. அவ்வப்போது நறுக்கிவிடவேண்டும். அப்பொழுதுதான் கண்ணுக்கு அழகான மரம் கிடைக்கும். போன்சாய் மரங்களை பூச்சித்தாக்குதலில் இருந்தும் நோய் தாக்குதலில் இருந்து ம் பாதுகாத்து வளர்க்கவேண்டும். இம்முறைகளை பின்பற்றி நாம் பராமரித்தால், எவ்வகை மரத்தை வேண்டுமானால் போன்சாயாக வீடுகளில் வளர்க்கலாம்

Friday, February 10, 2012

பூமித்தாயின் அணிகலன்களை சேதமின்றி காப்போம்!

ந்த உலகம் அழகானது. அழகான இந்த உலகில் படைக்கப்பட்ட உயிர்கள் அனைத்தும் வாழ வழி இருக்கிறது. எல்லா உயிர்களுக்கும் மகிழ்ச்சியை அளிக்கக்கூடியது இந்த பூமி. அதனால்தான் பூமியை தாய் என்கிறோம். தாயாக இருப்பதால்தான் உயிர்கள் அனைத்திற்கும் பாகுபாடின்றி உணவளிக்கிறது, இந்த பூமி. உயிர்களுக்கு உறைவிடமாகவும், பாதுகாப்பு அரணாகவும் இயற்கை அமைந்துள்ளது.

இயற்கையை புரிந்து கொண்டு உயிரினங்கள் வாழ்கின்றன. அதனால் அவை இயற்கையை அழிக்க முற்படுவதில்லை. ஆனால் அந்த அறிவும், உணர்வும் மனிதனிடம் மிக குறைவாகவே இருக்கிறது. ஆறறிவு கொண்ட மனிதன் வாரி வழங்கும் இயற்கையை வறண்டு போகச்செய்கிறான். இதை ஒரு அழிவின் தொடக்கம் என்று சொல்லலாம்.

மாசுபட்ட இயற்கை மனிதனுக்கு உதவாது. காசுக்காக அழிக்கப்படும் இயற்கை, காசு கொடுத்தாலும் மீண்டும் திரும்பவராது. மனித மனங்களுக்குள் தேவைகள் திணிக்கப்படும்போது அவை ஆசைகளாக உருவாகி, விரைவாகவே பேராசையாகிவிடுகிறது. அந்த பேராசை தீயில் மெல்ல மெல்ல இயற்கை அழிக்கப்படுகிறது. அதை உணரும் நேரத்தில் நம்மை சுற்றி பேரிழப்புகள் பல நிகழ்ந்திருக்கும்.


மனிதனைத் தவிர இந்த பூமியில் வாழும் எந்த உயிரினமும் இயற்கையை அழிப்பதில்லை. கொடூரமான சிங்கம், புலி கூட பசிக்கும்போது மட்டுமே பிராணிகளை வேட்டையாடுகிறது. கண்ணில்படும் உயிரினங்களை எல்லாம் அது அழித்துவிட்டு செல்வதில்லை. தனது உடல் தேவைக்கு மட்டும் அது இயற்கையிடம் அனுமதிபெற்று அழிக்கிறது. மனிதன் மட்டும் பின் விளைவுகளை பற்றி சிந்திக்காமல் இயற்கையை சீண்டி பார்க்கிறான்.

கடலோர பகுதிகளில் இருக்கும் சவுக்கு காடுகளை கண்மண் தெரியாமல் அழித்ததன் விளைவு, சுனாமியால் நாம் பேரழிவை சந்தித்தோம். இயற்கைக்கு மனிதன்மேல் எந்த கோபமும் இல்லை. மனிதனின் இயற்கை மீதான முரட்டுத்தனம்தான் அவனுக்கு வினையாக முடிகிறது. விலங்குகளின் இருப்பிடமான காடுகளை அழிப்பதால் அது இருக்க இடமின்றி ஊருக்குள் புகுந்து விடுகிறது. மனிதன் காடுகளை அழிப்பது, அவனுக்கே அழிவாக மாறுகிறது.

நம்மை சுற்றி இருக்கும் இயற்கை நமக்கு சொந்தம். அதை நாம் சவுகரியங்களுக்காகவும், பணத்திற்காகவும் அழிப்பது, நம் வீட்டுக்கூரையில் நாமே தீ வைத்துக்கொள்வது போன்றதாகும். தற்போது நமது வீட்டுக்கு தீவைத்துக்கொண்டு நாமே குளிர் காய்வதுபோல் இயற்கையை அழித்துக்கொண்டிருக்கிறோம்.

அறிவியல் வளர்ச்சியும் இயற்கையை அழிக்கிறது. நவீன கண்டுபிடிப்பான பூச்சிக்கொல்லி மருந்துகள், இருதலைக்கொள்ளியாக இயற்கையையும் அழிக்கிறது. மனிதனையும் அழிக்கிறது. அறிவியலின் அசுர வளர்ச்சி பூமியின் மேற்பரப்பில் உள்ள ஓசோன் மண்டலத்தில் துளைகளை ஏற்படுத்தி புற ஊதாக்கதிர்களை பூமிக்கு அனுப்பி, பூமியை வெப்ப மண்டலமாக மாற்றி, இயற்கையை அழித்துக் கொண்டிருக்கிறது.

`பிக்கினி' என்னும் பவளத்தீவில் அணுகுண்டை வெடித்து சோதனை செய்தார்கள். அதனால் கடலில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு, பல கோடி டன் எடையுள்ள நீர் மேலே எழும்பியது. வானை நோக்கி சிதறிய அதன் அதிர்ச்சியில் மேகங்கள் குளிர்ந்து மாதக்கணக்கில் பேய் மழையாக கொட்டியது. அதனால் ஏற்பட்ட சீதோஷ்ண மாற்றத்தால் கடலடியில் வாழ்ந்த உயிரினங்கள் அழிந்தன.

அந்த பகுதியில் தொடர்ந்து எழும்பும் உயரமான அலைகள் அந்த கடற் பகுதியையே, ஆபத்தான இடமாக மாற்றிவிட்டது. ஆக மனிதனை அழிக்க பரிசோதிக்கப்படும் அணுகுண்டுகள் இயற்கையை துவம்சம் செய்துகொண்டிருக்கின்றன. இயற்கையை பேரழிவை நோக்கி இழுத்து செல்லும் விஷயங்களில் பிளாஸ்டிக்கும் ஒன்று. மட்காத இந்த பிளாஸ்டிக், கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்தாக முடிவது மட்டுமின்றி நிலப்பரப்பையே மாசுபடுத்தி நிலத்தடி நீரை பூமிக்கு செல்லவிடாமல் தடுக்கிறது.

இயற்கையின் அழிவால் இன்று பல உயிரின வகைகளே இல்லாமல் போய்விட்டன. இன்னும் பல மெல்ல மெல்ல அழிந்து கொண்டிருக்கின்றன.

இயற்கையை நேசித்த ரவீந்தரநாத் தாகூர் அதனை வரமாக நினைத்து பூஜித்தார். மனிதர்களை இயற்கையை நோக்கி பயணிக்க வைத்தார். இந்திய மண்ணின் இயற்கை வளங்களை பொக்கிஷமாக வர்ணித்தார். விந்திய, ஹிமாசல, யமுனா கங்கா... என்று இயற்கை போகும் பாதையில் எண்ணத்தை செலுத்தி இவையே தெய்வம் என்று குறிப்பிடுகிறார்.

கேட்கும் வரம் தரும் தெய்வமாக இயற்கை இருக்கும்போது அதை காக்கும் மனிதர்களாக நாம் உருவெடுக்கவேண்டும். அழகான இயற்கை நம்மை வாழ வைக்கிறது. பூமித்தாயின் அழகுமிக்க அணிகலன் இயற்கை. இதை மாசுபடுத்தாமல் வாழ்வதுதான் மனிதனுக்கு பெருமை.

Thursday, February 2, 2012

ஐ.நா. பருவநிலை மாற்றம் மாநாடு-2011

பூமியின் சுற்றுச்சூழலில் மனிதர்களால் பல்வேறு வகையில் வெளியேற்றப்படும் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட கார்பனின் அளவு தொடர்ந்து அதிகரித்தபடியே இருப்பதால், பூமியின் சுற்றுச்சூழலில் வெப்பத்தின் அளவு அதிகரித்தபடியே உள்ளது. இப்படி பூமியின் வெப்பம் தொடர்ந்து அதிகரித்தால், பூமியில் வாழும் உயிரினங்கள் பலவகையிலும் பாதிக்கப்படும். ஆகையால் வெளியிடப்படும் கார்பன் டை ஆக்சைடு உள்ளிட்ட கார்பனின் அளவை கடுமையாக குறைக்க வேண்டும். இதன் விளைவாக இந்த கார்பன் வெளியேற்றத்தை கட்டுப்படுத்து வதற்காக ஐ.நா. அமைப்பு சர்வதேச அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதன் மூலம் சர்வதேச மாநாடுகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் தென் ஆப்பிரிக்கா நாட்டில் டர்பன் நகரில் பருவநிலை மாற்றம் மாநாடு-2011 நடந்து முடிந்தது. உலக நாடுகள் வெளியிடும் கார்பனின் அளவை கட்டுப்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்ட கியோடோ ஒப்பந்தம் விரைவில் முடிவடைய இருக்கும் பின்னணியில் இந்த டர்பன் மாநாடு நடத்தப்பட்டது.



கார்பன் வெளியேற்ற கட்டுப்பாடு 










வளரும் பொருளாதாரங்களைக் கொண்ட சீனாவும், இந்தியாவும், புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களின் வெளியேற்றத்தை குறைப்பதற்காக தற்போது அமலிலில் இருக்கும் சர்வதேச ஒப்பந்தமே தொடர வேண்டும் என்று கூறின. அடுத்த வருடம் முடிவுக்கு வரவிருக்கும் கியோட்டோ உடன் பாடுதான், செல்வந்த நாடுகள் தமது கார்பன் வெளியேற்ற அளவை குறைப்பது தொடர்பில் அவற்றை சட்டப்படி கட்டுப் படுத்தக் கூடிய ஒரே ஆவணம் என்று அவை வாதிட்டன.


ஆனால், பல தொழில்வள நாடுகள் புதிய காலநிலை ஒப்பந்தம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டும் என்று கோருகின்றன. 11 வருடமாக அமலில் இருக்கும் கியோட்டோ ஒப்பந்தத்தில் அதி வேகமாக வளரும் பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகள் உள்ளடக்கப்படவில்லை. இந்த முரண்பாடான நிலைப்பாடுகள், தென்னாபிரிக்காவின் டர்பன் நகரில் நடந்த ஐ.நா.வின் வருடாந்த காலநிலை மாநாட்டில் ஒரு சுமூகமாக தீர்வு எட்டப் படவில்லை. இந்த இழுபறிநிலை காரணமாக கார்பன் வெளி யேற்றம் அதிகரித்து அதன் மூலமான அச்சுறுத்தல்களை தாம் அனுபவிக்க நேரிடும் என்று வளரும் நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கவலை வெளியிட்டனர்.


முன்னதாக காலநிலை மாற்றம் குறித்த புதிய ஒப்பந்தத்துக்கான எதிர்பார்ப்புக்கள் குறைந்து வந்தபோதிலும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி குறித்த பேச்சுவார்த்தைகள் பற்றி சிறிதளவாவது இருந்தது.


ஆனால், கடந்துபோன சமரசப் பேச்சுக்களில் ஒரு பரந்துபட்ட பொது நிகழ்ச்சித் திட்டத்துக்கான உடன்பாடுகள் ஏற்படாததால்,தனிப்பட்ட விவகாரங்கள் முன்னிலைப்படுத்தப்படத் தொடங்கிவிட்டன. சில செல்வந்த நாடுகளைப் பொறுத்தவரை, இவையெல்லாவற்றையும் உள்ளடக்கியதாக ஒரு உடன்பாடு வரவேண்டும் இல்லாவிட்டால், எதுவும் இல்லை என்று கருத்தில் அவை இருக்கின்றன. கார்பன் வெட்டு தொடர்பில் சட்டரீதியாக அனைவரையும் கட்டுப்படுத்தக் கூடிய ஒரு உடன் படிக்கையை ஏற்க மறுக்கும் வளரும் நாடுகளுக்கு எதிராக செல்வந்த நாடுகளின் கருத்துக்கள் இருந்தன.


கார்பன் வெளியேற்ற குறைப்பு விவகாரத்தில் இருதரப்பும்  (வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள்)  இன்னமும் இழுபறியில் இருக்கும் நிலையில், அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய தான புதிய காலநிலை உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று மிகவும் வளரும் நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன. அது நடந்தால்கூட அடுத்த வருடம் நடக்கக்கூடிய ஐ.நா.வின் காலநிலை மாநாடு வரை அது தொடரரும்.


இந்த நிலையில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதி பற்றித்தான் தாம் மிகுந்த கவலை கொண்டிருப்பதாக வளரும் நாடுகள் கூறுகின்றன.


இருந்த போதிலும், காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராடுவதற்காக அண்மை வருடங்களில் வழங்கப்பட்ட சிறிய அளவிலான நிதியைக்கூட இந்த வளரும் நாடுகள் துஷ்பிர யோகம் செய்வதாகவும் பல வளரும் நாடுகள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.



மாநாட்டின் புதிய தீர்மானங்கள்


பருவநிலை மாற்றம் தொடர்பான புதிய ஒப்பந்தத்தை 2015-ஆம் ஆண்டுக்குள் மேற்கொள்ள வேண்டும் என டர்பன் நகரில் நடைபெற்ற மாநாட்டில் உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. இந்த ஒப்பந்தம் 2020-ஆம் ஆண்டிலிலிருந்து நடை முறைக்கு வரும் என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது.



அதன் விவரம்:










பருவநிலை மாற்றம் தொடர்பாக இப்போது நடைமுறையில் உள்ளது கியோட்டோ ஒப்பந்தம். 2008-ஆம் ஆண்டில் இருந்து 2012-ஆம் ஆண்டுக்குள் உலகின் வெப்பநிலையை 5 சதவீத அளவுக்கு குறைக்க இந்த ஒப்பந்தத்தின் மூலம் வகை செய்யப் பட்டது. இந்த அளவானது 1990-ஆம் ஆண்டுக்கும் முன்பிருந்த நிலையாகும். இதன்படி பசுமை இல்ல வாயுவை (கார்பன் டை ஆக்ஸைடு) அதிகம் வெளியிடும் நாடுகள் இந்த அளவை எட்ட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் 194 நாடுகளின் பிரதிநிதிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். விரைவாக முடிய வேண்டிய இந்த மாநாட்டின் பேச்சுவார்த்தை இந்தியா மற்றும் சீனாவின் எதிர்ப்பு காரணமாக 36 மணி நேரம் தாமதமாக முடிவுற்றது. இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளே பசுமை இல்ல வாயுவை அதிகளவு வெளியிடுவதாகவும், இந்நாடுகள்தான் புதிய கட்டுப்பாடுகளுக்கு உட்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு கருத்துத் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த இந்தியாவும், சீனாவும் புதிய கட்டுப்பாடுகளினால் தங்கள் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படுவதுடன், லட்சக்கணக்கான மக்கள் வறுமையை எதிர்நோக்க நேரிடும் என்றன.


இது குறித்துக் கருத்துத் தெரிவித்த இந்திய சுற்றுப்புறச் சூழல் அமைச்சர் ஜெயந்தி நடராஜன், ஐரோப்பிய கூட்டமைப்பு தெரிவிக்கும் திட்டத்தில் அடங்கியுள்ள விஷயங்கள் என்ன என்பது தெரியாமலே, லட்சக்கணக்கான மக்களின் வாழ்வை எங்கள் நாட்டினால் பணயம் வைக்க இயலாது என்று தெரிவித்தார். மேலும் தங்களைப் பிணையாக்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.


சுற்றுப்புறச் சூழல் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளுக்கான பொறுப்பு அனைவருக்கும் சமமானதே என்றும் அவர் தெரிவித்தார். தொழில்மயமாக்கப்பட்ட நாடு களைவிட, வளரும் நாடுகளின் பொறுப்புணர்ச்சி இவ் விஷயத்தில் குறைவு என்ற வாதத்தையும் அவர் நிராகரித்தார். ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணையர் கோனி ஹெடிகார்டு மற்றும் ஜெயந்தி நடராஜன் ஆகியோர் சந்தித்துப் பேசி ஓர் சமரச முடிவை எட்ட வேண்டும் என்றும் பேசப்பட்டது. இதையடுத்து இரு தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொடர்ந்து இருதரப்பினரும் 2015-ஆம் ஆண்டுக்குள் ஓர் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த ஒப்புக் கொண்டனர். மேலும் சுற்றுச் சூழல் மேம்பாட்டுக்கென வளரும் நாடுகளுக்கு நிதியளிக்கவும் ஒப்புக்கொள்ளப்பட்டது.  அதுவரை கியோட்டோ ஒப்பந்தத்தின் நிபந்தனைகளைப் பின் பற்றுவதாக ஐரோப்பிய கூட்டமைப்பு தெரிவித்தது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்த சீனப் பிரதி நிதிகளின் தலைவர் ஸிஸன்ஹுவா  அமையவுள்ள ஒப்பந்தம் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்றம் தொடர்பான அமைப்பின் விதிகளின்படியே அமையும் என்று தெரிவித்தார். இந்தியாவின் கருத்துகள் குறித்துத் தெரிவித்த ஐரோப்பிய கூட்டமைப்பின் ஆணையர் ஹெடிகார்டு, தனது பொருளா தாரத்துக்கு ஆபத்தான முடிவை எடுக்கும்படி இந்தியாவைத் தாங்கள் வலியுறுத்தவில்லை என்றும், அந்நாட்டின் வளர்ச்சியை முழுமையாக அங்கீகரிப்பதாகவும் தெரிவித்தார். அதேசமயம் ஒப்பந்தம் என்பது அனைத்து நாடுகளுக்கும் பொதுவானது என்பதையும் மறுப்பதற்கில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


மாநாட்டில் எந்த உறுதியான முடிவும் எட்டப்படாமல் அரைகுறையாக முடிந்துள்ளது. கார்பன் உமிழ்வை கட்டுப் படுத்தாத நிலையில் பூமியின் சராசரி வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் உயரும் என்று விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ள னர். அதனால் ஏற்படும் காலநிலை மாற்றத்தின் பயங்கரமான விளைவுகள் இந்தியாவில் மட்டும் எப்படியிருக்கும். சில எடுத்துக்காட்டுகள்:


 இந்தியா முழுவதும் 1 செ.மீ. கடல்மட்டம் சராசரியாக உயர்ந்து வருகிறது. கடல்மட்டம் ஒரு மீட்டர் உயர்ந்தால் இந்திய கடற்கரைப் பகுதியில் 1,700 சதுர கி.மீ. மூழ்கி விடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.


 மேற்குவங்கம் மாநிலத்தின் சுந்தரவனக் காடு பகுதியில் கடல்மட்ட உயர்வால் ஒரு தீவு முற்றிலும் மூழ்கிவிட்டது. 6000 குடும்பங்கள் வாழ்விழந்துள்ளன. 40 லட்சம் மக்கள் பாதிக்கப்படுவார்கள். கடல்மட்டம் உயரும் நகரங்கள்  பட்டியலிலில் சென்னை, நாகப்பட்டினம் உள்ளன.


 இந்திய விவசாயம் 65 சதவீத பாதிப்பை சந்திக்கலாம். ஏற்கனவே இந்த ஆண்டு பருவமழை பொய்த்தது.


 ஒவ்வொரு 0.5 டிகிரி செல்சியஸ் வெப்ப உயர்வுக்கும் 17 முதல் 30 சதவீத அரிசி, கோதுமை விளைச்சல் பாதிக்கப் படும். ஒரு டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்தால், 40-50 லட்சம் டன் கோதுமை விளைச்சல் குறையும்.


 50 சதவீத இந்தியக் காடுகள் பாதிக்கப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், நமது பருவநிலை காடுகளைச் சார்ந்து வாழும் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.


 2035-ஆம் ஆண்டுக்குள் வடக்கில் ஓடும் ஜீவநதிகளின் தாயான இமயமலை பனிச்சிகரங்கள் முற்றிலும் மறைந்து விட வாய்ப்புள்ளது.


 இந்திய மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜி.டி.பி) 27 சதவீதம் பாதிக்கப்படலாம்.


 கொசுக்களால் பரவும் மலேரியா, டெங்கு, சிக்குன் குன்யா போன்ற நோய்களின் தாக்குதல் அதிகரிக்கும்.


 இதுவரை 1998-ஆம் ஆண்டுதான் மிக வெப்பமான ஆண்டு. உலகின் மிக வெப்பமான 20 ஆண்டுகளில் 19 ஆண்டுகள், 1980-க்குப் பிறகே வந்துள்ளன. 2009 மிக வெப்பமான ஐந்தாவது ஆண்டு.


 20-ஆம் நூற்றாண்டில் பூமியின் சராசரி வெப்பநிலை 0.6 டிகிரி அதிகரித்திருக்கிறது. இந்தியாவில் 2050க்குள் குளிர்கால சராசரி வெப்பநிலை 3.2 டிகிரி வரை, கோடை காலத்தில் சராசரி வெப்பநிலை 2.2 டிகிரி வரை உயர்ந்து விடும். ஆகையால் வல்லரசு இந்தியா என்ற லட்சியத்தைவிட பசுமையான இந்தியா என்பதே இன்று அவசியமான லட்சியம் ஆகும்.

Monday, November 28, 2011

சிட்டுக்குருவியின் `சேதி' தெரியுமா?

ரம், செடி, கொடிகளும், எண்ணிலடங்கா தாவர இனங்களும், பிராணிகளும், பறவைகளும், பூச்சிகளும், புழுக்களும், பூக்களும், புல் பூண்டுகளும், மனிதனின் ரசனைக் குரிய எழிலார்ந்த காட்சி பொருட்கள் மட்டுமல்ல. அவைகள் ஒவ்வொன்றும் மற்றொன்றின் உயிர் வாழ்விற்கு அடிப்படை தேவையாக அமைந்துள்ளன.

உதாரணமாக, புறா இனத்தை சேர்ந்த சுமார் 25 கிலோ எடை கொண்ட ``டோடோ'' என்னும் பறவைகளை மனிதர்கள் வேட்டையாடி, வயிறு புடைக்க தின்று, அந்த பறவை இனத்தையே முற்றிலுமாய் அழித்துவிட்டார்கள். அதன் காரணத்தால் காடுகளில் செழித்து வாழ்ந்திருந்த ``கல்வாரியோ மேஜர்'' என்னும் மர இனம் முழுவதும் மண்ணில் இருந்து அழிந்து விட்டது.

அந்த மரத்தின் கனிகளை புசித்து ஜீரணித்து, அதன் கொட்டைகளை தனது ஜீரண நீரினால் மிருதுவாக்கி அதை கழிவாக வெளியேற்றி மண்ணிலே போட்டு கொண்டு இருந்த ``டோடோ' பறவைகள் பூமியில் இல்லாமல் போன காரணத்தால், அந்த கல்வாரியோ மேஜர் மர இனமும் இல்லாமல் போய்விட்டது. அதன் வித்துக்கள் இயற்கையின் இயக்கத்தால் செயல்பட்டு, மண்ணிலே புதைந்து மறு உரு எடுத்து கனி தரும் மரங்களாக காட்சியளிக்க வழியில்லாமல் போய்விட்டது.

`பல்லுயிர் சுழற்சி' என்னும் இயற்கையின் விதிமுறை இயக்கத்திற்கு இவ்வாறு ஏற்பட்டு வருகின்ற இடையூறுகளுக்கு மேற்கண்ட அழிவுகள் ஒரு அடையாளமாகும். மேலும் அதைப்போன்ற ஒரு சம்பவம் தான் சிட்டுக் குருவி இனத்தின் அழிவாகும். அதற்கு செல்போன் டவர்களில் இருந்து எழும்பும் ``எலெக்ட்ரோ மேக்னட்'' கதிர்வீச்சுகள் மட்டுமே காரணம் அல்ல. மனிதனின் உயிர் வாழ்விற்காக மண்ணில் விதைக்கப்படுகின்ற உணவு தானிய விதைகளின் அணுக்கரு மாற்ற செயல் திட்டங்களின் எதிர் விளைவுகளாலும் அந்த பல்லுயிர் சுழற்சிக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது.

இந்த காலத்தில் அப்படிப்பட்ட விஞ்ஞான தொழில் நுட்பங்களை கொண்டு உற்பத்தி செய்யப்படுகிற விதைகளை கொண்டு விவசாயம் செய்து பெறப்படுகின்ற தானியங்கள், மனிதனுக்கு மட்டுமின்றி சிட்டுக்குருவிகளுக்கும் உணவாகின்றன. அப்படிப்பட்ட விஞ்ஞான தொழில் நுட்பத்தின் எதிர்விளைவுகளை ஒரு வேளை, மனிதனால் ஏற்றுக்கொள்ள முடியும் என்று வைத்துக்கொள்வோம். அதேபோல் சிட்டுக்குருவிகளும், தேனீக்களும் அதை ஏற்றுக்கொள்ளும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கிறார்களா? அப்படி கணக்கு போட்டால் அது, தப்புக்கணக்கு ஆகி விடுமல்லவா? அந்த எதிர்பார்ப்பு, இலவு காத்த கிளியின் கதைக்கு ஒப்பாகி விடும்.

``பல்லுயிர் சுழற்சி'' என்ற இயற்கையின் விதிமுறையில் புல்லுக்கும் கூட முக்கிய பங்கு உண்டு. அப்படியிருக்க, அந்த கண்ணோட்டத்தின் அடிப்படையில் சிட்டுக்குருவி இனம் அழிவதை யாரும் அலட்சியம் செய்யக்கூடாது. விஞ்ஞானிகள் கூடி விவாதித்து, போர்க்கால நடவடிக்கையை மேற்கொண்டு அந்த அழிவை தடுத்திடவேண்டும். அத்தகைய அழிவுகளுக்கு எதிராக அறிவாயுத யுத்தம் செய்திட அணி திரளவேண்டியதும் அவசியமானதாகும். அதைப்போலவே, கதிர்வீச்சின் தாக்குதலை எதிர்த்து நிற்க இயலாத தேனீக்களுக்கு ஆதரவாகவும் பாதுகாப்பு படை அமைக்கப்படவேண்டும்.

Wednesday, October 19, 2011

குளோபல் வார்னிங்



குளோபல் வார்மிங்- அதாவது பூகோள சூடேற்றம் என்பது சமீப காலமாக உலகளாவிய பிரச்சனையாக முன்னிறுத்தப்பட்டு வருகிறது. Intergovernmental Panel on Climate Change என்ற ஐநா அமைப்பு தனது அறிக்கையில் மனித யத்தனத்தால்தான் இது நிகழ்கிறது என்று அறிவியல் சமூகம் ஒப்புக்கொள்வதாக அறிவித்திருக்கிறது. கார்பன் க்ரெடிட் என்று சொல்லப்படும் கார்பன் கடன் திட்டம் விரைவிலேயே அமெரிக்கா உட்பட பல நாடுகளிலும் அமல்படுத்தப்பட உள்ளது. ஜெர்மனி, ஃபிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகள் இந்த கார்பன் கடன் திட்டத்தில் தீவிரமாக இருக்கின்றன. ஒவ்வொரு நாட்டுக்குமான கார்பன் கால்தடம் (Carbon Footprint) என்ற கருத்தாக்கத்தை பிரேசில், இந்தியா, சீனா போன்ற வளரும் நாடுகளின் மீது கியோடா ஒப்பந்தம் மூலம் திணிக்கும் முனைப்பில் ஐரோப்பிய நாடுகளும் ஐநா சபையும் முன்னணி வகிக்கின்றன. இதற்காக பல வகையிலும் சர்வதேச அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அமெரிக்காவில் பராக் ஒபாமா ஆட்சிக்கு வந்தபின் பசுமைச்சக்தி (Green energy) அரசின் முக்கியக் கொள்கைகளில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு, பசுமைச்சக்தி துறைகளுக்கும், பொருட்களுக்கும் பல மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகங்களில் இதற்காக தனித்துறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பசுமைச்சக்தி தொடர்பான தொடக்க நிலை தொழில்நிறுவனங்களில் பண முதலீடு பெருமளது அதிகரித்துள்ளது. பன்னாட்டு பெரு நிறுவனங்களும், எண்ணெய்க்கம்பெனிகளும்கூட பசுமைச்சக்தியை அதிகரிப்பது பற்றியும், கார்பன் கால்தடத்தைக் குறைப்பது குறித்தும் முனைப்பில் உள்ளதாய் செய்திகள் வருகின்றன. ஆக குளோபல் வார்மிங் என்ற ரயில் வண்டி நகரத் தொடங்கி விட்டது போலத்தான் தெரிகிறது. ஆனால் எதை நோக்கி என்ற கேள்வி எழத்தான் செய்கிறது. ஏனெனில் குளோபல் வார்மிங் குறித்த பல ஆதாரக் கேள்விகள் இன்னமும் அப்படியேதான் இருக்கின்றன.

“என்ன பெருசா குளோபல் வார்மிங், உலகம் சூடாவுது அவ்ளோதான்”.

ஒரு சனிக்கிழமை, நீங்கள் உங்கள் நண்பர்களுடன் ஸ்பென்ஸர் ப்ளாசா செல்கிறீர்கள். உள்ள போய் அதே பிகர் அதே சமுசா அதே கிசுகிசு என்று பிடிக்காமல், “நான் கார்லயே இருக்கேன் நீங்க போய்ட்டு வாங்க” என்று சொல்லிவிட்டு  பாட்டு கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். கார் ஜன்னல் மூடியிருப்பதாலும் வெளியே வெயிலாக இருப்பதாலும், கொஞ்ச நேரத்திற்கு பிறகு உள்ளே வேர்த்துக் கொட்டுகிறது அல்லவா. அது தான் குளோபல் வார்மிங்.

கடந்த நூறு ஆண்டுகளில் உலகத்தில் ஆவரேஜ் தட்ப வெட்பம் ஒரு டிகிரி பாரன்ஹீட் ஏறியிருக்கிறது. ஏன் என்று விஞ்ஞானிகள் இன்னும்  விவாதித்து கொண்டிருக்கிறார்கள். இவ்வாறாக உலகம் சூடாவதால், தட்பவெட்ப நிலையில் பலவித மாற்றங்கள் வர வாய்ப்புண்டு. பனிப்பாறைகள் சீக்கிரம் உருகி வெள்ளம் வரலாம், மும்பையை போல நிறைய மழை பெய்யலாம், கடலின் மட்டம் அதிகமாகி மெரினாவில் வாக்கிங் போகிறவர்களை இழுத்துச் செல்லலாம்.  ஆவரேஜ் தட்ப வெட்பம் ஒரு டிகிரி பாரன்ஹீட் எறிய அதே நூறு ஆண்டுகளில் கடல் மட்டம் ஆறு முதல் எட்டு இன்சுகள் உயர்துள்ளன.

உலகம் சூடாகிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை. அது இயற்கையாக் நிகழ்கிறதா அல்லது மனிதனின் அலட்சியத்தின் விளைவா என்பது தான் விவாதமே. மனிதனால் induce செய்யப்படுவதை Anthropogenic Effect என்கிறார்கள்.

அப்படிப்பட்ட ஒரு ஆன்த்ரோபோஜெனிக் விளைவுதான் க்ரீன் ஹவுஸ் எஃபக்ட்(Green house effect). மேலை நாடுகளில் குளிர் காலத்தில், க்ரீன் ஹவுஸ் என்று ஒரு குட்டிக் கண்ணாடி வீட்டில் செடிகளை வளர்ப்பார்கள். நம் ஊட்டியில் கூட உண்டு. இதற்கு காரணம், கண்ணாடி வீட்டிற்க்குள் சூரியனின் கதிர்கள் பாய்ந்து உள்ளே உள்ள செடிகள், குளிரால் அழியாமல் கதகத என்று இருக்கும். உள்ளே இருந்து வெப்பம் அவ்வளவாக வெளியே போகாது. உலகம் அந்த மாதிரி ஒரு க்ரீன்ஹவுஸ்.

சூரிய கதிர்கள் அட்மாஸ்பியர்(beer அல்ல) முலமாக பாய்கின்றன. அந்த atmosphereல் உள்ள CO2, நைட்ரஸ் ஆக்ஸைட், மீத்தேன் போன்ற சில வாயுக்கள் அந்த கண்ணாடி வீட்டின் கண்ணாடி போல செயல்படுகின்றன. அட்மாஸ்பியர் இல்லாமல் போனால் உலகம் ஒரு அறுபது டிகிரி உஷ்ணம் கம்மியாக இருக்கும். நாம் குளுரில் மாண்டு விடிவோம். உலகத்தின் உள்ளே வரும் அந்த உஷ்ணத்தை உலகம் உள்வாங்கிக் கொள்கிறது. அந்த உஷ்ணம் மீண்டும் எனர்ஜியாக மேலே எழும்புகிறது. அப்படி செல்லும் எனர்ஜியை முழுவதும் வெளியே விடாமல் உலகத்தை கதகத என்று வைத்துக்கொண்டிருகின்றன greenhouse gases.

ஆனால் அட்மாஸ்பியர் கார்பன் டையாக்ஸைட் அதிகமாகி, எந்த உஷ்ணமும் உள்ளே வரலாம் ஆனால் வெளியே போக முடியாமல் போய் விட்டால், ஸ்பென்ஸர் ப்ளாசா கார் போல உலகத்திற்கு வேர்த்துக் கொட்டும். அதுதான் குளோபல் வார்மிங். இதற்க்கெல்லாம் காரணம் நீங்கள்தான். நானும்தான்.

இதை நீங்கள் படிக்கும் போதும், நீங்கள் பாட்டு கேட்கும் போதும், குளோபல் வார்மிங்கை ஆளுக்கு கொஞ்சூண்டு அதிகமாக்கி கொண்டிருக்கிறோம். இது மட்டும் அல்ல, மெகா சீரியல் பார்க்கும் போதும், குளோபல் வார்மிங் கவுண்டர் ஏறிக் கொண்டிருக்கிறது. இவை எல்லாவற்றிற்கும் தேவையாயிருப்பது மின்சாரம். அவை வருவதோ கரியை எரிப்பதால். கரி மற்றும் எண்ணெய் எரிக்கும் போது அவை இந்த க்ரீன்ஹவுஸ் வாயுக்களை உருவாக்குகின்றன.

50 வருடங்களுக்கு முன் இருந்த இரண்டு பில்லியன் உலக ஜனத்தொகை, 50 வருடங்களில் ஆறு பில்லியனானது என்ற கேள்வி . அதாவது கடந்த 50 வருடங்களில் நாம் 4 பில்லியன் பேர் பிறந்து இந்த உலகத்தின் population pressureஐ அதிகமாக்கி இருக்கிறோம். வேறெப்போதும் இல்லாத அளவுக்கு உலகில் உள்ள நீர் நிலம் ஆகியவற்றை உபயோகித்து வருகிறோம்.

டைம் பத்திரிக்கையும் சமீபத்தில் இந்த உஷ்ணத்தை தணிக்க 51 வழிகள் என்று  நோட்ஸ் போட்டுள்ளது. வீடுகளில் fluorescent bulbs போடுங்கள் என்பதில் ஆரம்பித்து, கார்பன் வரி கட்டுங்கள், ஸிந்தடிக் உடைகளுக்கு பதில் vintage துணிவகைகளை பயன்படுத்துங்கள், உங்கள் மாத பில்களை ஆன்லைனில் செலுத்துவதால் பேப்பர் மிச்சமாகும், ஜன்னல் கதவை திறந்தால் காற்று வரும் ஏசியின் பயன் குறையும், இரண்டு மூன்று பிளைட் பிடித்து சியாட்டலிருந்து நியுயார்க் சென்றால் பெட்ரோல் அதிகமாவதால் ஒரே ப்ளைட்டில் காசதிகமானாலும் செல்லுங்கள், உங்கள் ஊரின் உழவர் சந்தையில் காய்கறி வாங்கினால் மிச்சமாகும் பெட்ரோல் என்றெல்லாம் சொல்லுகிறார்கள். முக்கியமாக எல்லா நிறுவனங்களும் தனது தொழிலாளர்கள் ரொம்ப தூரம் பயணம் செய்ய விடாமல் அவர்களின் வீட்டின் அருகிலோ அல்லது வீட்டில் இருந்தபடியே வேலை செய்வதை ஊக்குவியுங்கள் என்கிறார்கள். கொஞ்சம் அபத்தமாய் இருந்தாலும் நமக்கு நன்மை இருப்பதால் அப்படி செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கலாம்.


வானவெளியிலே முடிவற்ற கோள்கள் இருக்கையிலே நமது பூமியில் மட்டும் உயிரினங்கள் எப்படி செழிப்பா வாழ முடிகிறது? அதுக்கு முக்கிய பதில் நமது பூமியின் தட்ப வெப்பநிலைதான். இந்த மாதிரி தட்ப வெப்பநிலை இருப்பதால்தான் நமது பூமியின் தண்ணீர் எல்லாம் வற்றி போகாமல் நம் வாழ்வுக்கு வசதியாக இருக்கிறது. நீர் இல்லாத பூமியை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அதே போல் அளவுக்கு அதிகமாக உலகம் முழுவதும் குளிரா போய் நாங்கள் இங்கே இருக்க முடியாமல் போக முடியாதபடி ஒரு மிதமான தட்ப வெப்பநிலை இருக்கு.


இப்படி நம்ம பூமியின் தட்ப வெப்பநிலை நாங்க வாழகூடிய அளவுக்கு இருக்குதுன்னு பார்த்தா அதுக்கு முக்கிய கரணம் நம்மை சுற்றி இருக்கும் கற்று வெளிதான். ஆக்ஸிஜன், ஹைட்ரஜன், கார்பன் டையாக்ஸைட் எனப் பல வாயுக்குள் எல்லாம் கலந்து செய்த கலவை இந்த காற்றுவெளி. இதில கரியமில வாயு மற்றும் சில வாயுக்கள் (கார்பன் டையாக்சைடு, மீத்தேன்)சேர்ந்து சூரியக் கதிர்களால் நம் பூமி சூடு ஆகாமல், மற்றும் அந்த சூடு மொத்தமும் அப்படியே போய்விடாமல் இருக்க உதவுகின்றன. இவை பூமியின் மேற்பரப்பில் இயற்கையாக உருவாகும் தன்மை கொண்டவை. இவை போதிய அளவு வெப்பத்தை உருவாக்கி, பாதுகாப்பு கவசம் போல, பூமி உறைந்து போகாமல் பாதுகாக்கின்றன.


இயற்கையாக ஏற்படும் மாற்றங்களினால் காற்றுவெளியில் இந்த வாயுக்களின் சதவிகிதம் மாறுகிறது. அதனால் நம் புவியின் தட்பவெட்ப நிலையும் மாறுகின்றது. பல முறை நீண்ட உறைபனிக்காலமும் (Ice Age) அதன் பின் உண்டாகும் மாற்றங்கள் எல்லாம் இதனால்தான். இது போன்ற சுழற்சி இயற்கையாக ஏற்படுவதுதான். ஆனால் இப்பொழுது மனிதன் அதிக அளவில் நிலக்கரி, கச்சா எண்ணெய் போன்ற, பூமியிலிருந்து எடுக்கப்படும் படிம எரிபொருள்களை பயன்படுத்துவதால் மற்றும் காடுவெளிகளை அழிப்பதாலும் குளிர்சாதனப் பெட்டி, ஏர்கண்டிஷனர் போன்றவற்றில் உபயோகப்படுத்தும் நவீன இரசாயனங்களாலும் காற்றில் நாம் முன் சொன்ன வாயுக்களின் சதவிகிதம் அதிகமாகிக் கொண்டு இருக்கிறது. இதனால் இன்று பூமியில் சராசரி வெப்பநிலை அதிகமாகிக் கொண்டே போகிறது. இதைத்தான் புவிவெட்பநிலை அதிகரிப்பு எனச் சொல்கின்றனர். இதனால் இன்று என்ன நடக்கிறது? கடந்த நூறு ஆண்டுகளில் நம்ம பூமியின் சராசரி வெப்பம் உயர்ந்திருக்கும் அளவு 0.74 ± 0.18 °C (1.3 ± 0.32 °F). கடந்த 30 ஆண்டுகளாக ஒவ்வொரு 10 ஆண்டுகளிலும் பூமியில் 0.36 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் அதிகரித்து வருவதாக நியூயார்க்கில் உள்ள நாசாவின் கோடார்ட் வளி ஆய்வுக் குழு தலைவர் ஜேம்ஸ் ஹான்சென் தெரிவித்துள்ளார். கடந்த பத்தாண்டுகளில் க்ரீன்லாந்தில் உருகிய பனிப்பாறைகளின் அளவு இரு மடங்காகிவிட்டது. இருபதாம் நூற்றாண்டில் கடல் மட்டம் 4 முதல் 8 இஞ்சு வரை உயர்ந்திருக்கிறது. உலகின் பல பகுதிகளில் மழையளவு சராசரிக்கு அதிகமாகவும் மற்ற இடங்களில் குறைவாகவும் பெய்யத் தொடங்கி இருக்கிறது. மலைப்பகுதிகளில் வராத மலேரியா போன்ற நோய்கள் தென்னமெரிக்காவின் ஆண்டிஸ் மலைப்பகுதிகளில் கடல் மட்டத்தில் இருந்து 7000 அடிக்கு மேல் பரவத் துவங்கி இருக்கிறது. கிட்டத்தட்ட 300 விதமான செடிவகைகளும் பறவை மிருகங்களும் வெட்பம் தாங்காமல் துருவப் பகுதி நோக்கி நகரத் தொடங்கி விட்டன. (20 ஆம் நூற்றாண்டின் கடைசி 50 ஆண்டுகளில் ஒவ்வொரு பத்தாண்டிலும் 1700 தாவரங்கள், விலங்குகள் மற்றும் பூச்சி உயிரினங்கள் சராசரியாக 6.5 கிலோ மீட்டர் துருவ முனைகளை நோக்கி இடம் பெயர்ந்து கொண்டிருப்பதாக நேச்சர் என்ற பத்திரிக்கை அறிக்கை குறிப்பிட்டுள்ளது.)












குளோபல் வார்மிங்குக்கு பங்களிப்பு செய்யும் உலக நாடுகளும் கண்டங்களும்

இயற்கையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றத்தால் பல நாடுகளுக்கு ஆபத்து ஏற்படும். இதை தடுக்க உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐ.நா., ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் வாயுக்களை இன்னும் எட்டு ஆண்டுகளுக்குள் கட்டுப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் அமைவதற்கு முன்பு, பூமி வெப்பம் கட்டுக்குள் இருந்தது. பூமி தாங்கக் கூடிய அளவிலிருந்து 2 முதல் 2.4 டிகிரி சென்டிகிரேட் வரை வெப்பம் அதிகரித்தால் ஆபத்து இல்லை. அதற்கு மேல் அதிகரித்தால் ஆபத்து தான்.அளவுக்கு அதிகமாக உற்பத்தியாகும் வாயுக்களைக் கட்டுப்படுத்த, பூமியிலிருந்து எடுக்கப்படும் நிலக்கரி மற்றும் எண்ணெய் எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும். மாற்று எரிபொருளைப் பயன்படுத்த உலக நாடுகள் தயாராக வேண்டும்.


நீர் மின் நிலையங்கள், அணுசக்தி, சூரிய சக்தி, காற்றாலை ஆகியவற்றின் மூலம் மின்சாரம் தயாரிப்பதை அதிகரிக்க வேண்டும். குறைந்த எரிபொருளில் ஓடும் வாகனங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தனித்தனியாக வாகனங்களில் செல்வதை தவிர்த்து ரயில்கள் மற்றும் பஸ்கள் போன்ற வாகனங்களில் செல்ல வேண்டும். பயிர் மேலாண்மையை மேம்படுத்த வேண்டும். பசுமையை அதிகரித்து, காற்று மாசுபடுவதை தடுக்க வேண்டும். நெல் விளைச்சலில் புதிய யுக்திகளை பயன்படுத்த வேண்டும். கால்நடைகள் வளர்ப்பு மற்றும் எருவை பயன்படுத்தும் முறையை மேம்படுத்த வேண்டும். இதனால் மீத்தேன் வாயு வெளிப்படுவது குறையும். சிறந்த மின்சார சாதனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அவற்றை சரியான முறையில் பொருத்த வேண்டும். குளிர்படுத்தவும், வெப்பப்படுத்தவும் சூரிய சக்தியை பயன்படுத்த வேண்டும்.


இவ்வாறு பல விஷயங்களை ஐ.நா., வலியுறுத்தியுள்ளது. இவற்றை பின்பற்றுவதாக இந்தியா, சீனா உள்ளிட்ட நூற்றுக்கணக்கான நாடுகள் ஒப்புதல் தெரிவித்துள்ளன. தங்களின் வாழ்க்கை முறையையும், பொருட்கள் பயன்பாட்டில் மாறுதலையும் ஏற்படுத்தி கொள்வதாக வளர்ந்த நாடுகள் தெரிவித்துள்ளன. உலக மக்கள் தொகையில், 20 சதவீதம் பேரே வளர்ந்த நாடுகளில் உள்ளனர். ஆனால், உலகளவில் 50 சதவீத அளவுக்கு, சுற்றுச்சூழல் மாசுபடுத்தும் வாயுக்களை அந்த நாடுகள் தான் வெளிப்படுத்துகின்றன. அந்த நாடுகளில் மாற்றம் கொண்டு வந்ததால் தான் புவி வெப்பமடைவதை தடுக்க முடியும்.



நன்றி-RADO





Tuesday, October 18, 2011

வெப்பநிலை மாசுபாடு

அதிக வெப்ப கழிவு மற்றும் வெப்ப நீரோட்டம் போன்றவற்றின் காரணத்தால் வெப்ப நிலை மாசுபாடு உண்டாகிறது. வெதுவெதுப்பான நீரில் குறைந்த அளவு ஆக்ஸிஜன் உள்ளது. ஆகையால் அங்கக பொருட்களின் மக்கும் திறனானது குறைகிறது. பச்சை பாசியானது நிலப்பச்சை பாசியாக மாறுகிறது. பல விலங்குகளின் இனம்பெருக்கம் பாதிக்கிறது. ஒரு நன்னீர் வகை மீன்களின் முட்டையிலிருந்து குஞ்சு பொரித்தல் மற்றும் சால்மன் இனத்தின் முட்டையிடுதல் போன்றவை உயர் வெப்பநிலையில் ஏற்படும் போது தோல்வியடைகிறது.

வெப்பநிலை மாசுபாடு என்பது மனிதனின் செயலால் நீரில் ஏற்படும் தட்பவெப்பநிலையின் ஏற்றம் அல்லது இறக்கமாகும். மின் நிலையம் மற்றும் தொழிற்சாலை உற்பத்தியில் பயன்படுத்தப்படும் நீரினால் வெப்பநிலை மாசுபாடு உண்டாகிறது. இயந்திரங்களின் வெப்பத்தை தனிக்க உதவும் நீரினை வெளியேற்றும் போது நீரிலுள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைவு மற்றும் உயர்வாழினங்களை பாதிக்கும் தன்மு பொன்றவற்றால் வெப்பநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. நகர மக்களின் பயன்பாடான சாலை மற்றும் வாகனங்கள் நிறுத்திவைக்கப்படும் பகுதிகளில் இருந்து வெளியேற்றப்படும் நீரானது, மேற்பரப்பு நீருடன் கலப்பதால் அதிக தட்பவெப்பநிலையைக் கொண்ட நீருக்கு ஆதாரமாக அமைகிறது.

s


பொட்ரீரோ உற்பத்தி நிலையம்


வெதுவெதுப்பாக உள்ள ஆற்றுகளில் மிகக் குளிர்ந்த தன்மையுடைய நீர்த்தேக்கத்த வெளியீடும் போது வெப்பநிலை மாசு ஏற்பட காரணமாக அமையும். இதனால் மீன்கள் (அதன் முட்டை மற்றும் கூட்டுப்புழு) ஆற்றின் தன்மை பாதிக்கிறது.


தற்போது இருப்பதை விட இன்னும் வெப்பநிலை மாசுபாடு அதிகமாகும் போது உலகவெப்பமய பாக்கலின் தாக்கம் அதிகரிக்கும். அதிக செயல் பணிகளை உள்ளடக்கிட தொழிற்சாலையிலிருந்து வெளிவரும் அதிக வெப்பத்திறனால் வெப்பநிலை மாசுபாடு அதிகரிக்கிறது. இந்த மாசுபாடு ஏற்படுவதற்கான விளக்கம் பின்வருமாறு.


Thermal Pollution


சான் ஃப்ரான்சிஸ்கோ விரிகுடாவில் பொட்ரீரோ உற்பத்தி நிலையின் வெப்பமான நீர் வெளியீடு :

 


  • உற்பத்திக்கான மூலப் பொருட்கள் (அங்கக மற்றும் இரசாயன பொருள்)

  • பல்வேறு செயல் முறைகளில் வெவ்வேறு வேதி வினை

  • அதிக வெப்ப திறனால் உற்பத்தியாகும் பயனற்ற பொருள் (திரவமாக) வெளியேற்றப்படுகிறது

  • சுற்றுப்புறச்சூழல் முறையின் தட்பவெப்ப நிலையை உயர்த்துதல்



வானிலை ஆராய்ச்சி மையத்தின் மூலம் வானிலை மாற்றத்தினை குறிப்பாக வளிமண்டல தட்பவெப்ப நிலையை அளவீடுகிறது. இந்த அளவீடப்பட்ட வரைபடமானது கடந்த 10 வருடம் அளவின் படி ஒப்பீடப்படுகிறது. இந்த ஒப்பீடானது தற்போது இருக்கும் வெப்பநிலையின் விகிதத்தை கூறுகிறது. இதன் அடிப்படையில் வெப்பநிலையை நிலையாக தக்கவைத்து கொள்ள மேற்கோள் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.


ஆதாரங்கள் மற்றும் முறைகள் :


வெப்பநிலை மாசுபாட்டிற்கு காரணமான முக்கிய ஆதாரங்களின் வகைகள் பின்வருமாறு.


  • மின் நிலையங்களில் தொல்லுயிர் எச்ச எரிபொருட்களின் பயன்பாட்டால் உருவாக்கப்படும் மின்சக்தி

  • தொழிற்சாலையின் வசதிகளால் குளிர்விக்கப்படும் நீர்

  • கடற்கரை பகுதிகளில் காட்டழிப்பு

  • மண்ணரிப்பு

  • வேளாண்மை ஆதாரங்கள்



சூழலியலில் தாக்கம் - மிதவெப்பமான நீர்


உயர் வெப்ப நிலையானது நீரில் கரையும் ஆக்ஸிஜனின் (DO) தன்மையை குறைக்கிறது. இவ்வாறு ஆக்ஸிஜன் கரையும் தன்மை குறைவதால் மின், நீர் நில வாழிகள் போன்ற உயிரினங்களை பாதிக்கிறது. இவ்வகை உயிரினங்களின் வளர்சிதை மாற்றத்தின் விகிதமானது வெப்பநிலை மாசுபட்டால் அதிகரிக்கும் போது உயிரினங்களுக்கு தேவைப்படும் உணவில் குறைபாடும் ஏற்படுகிறது. இதனால் எண்ணிக்கையில் குறைகிறதுஇ சுற்றுப்புறச்சூழலில் மாற்றங்கள் ஏற்படும் போது உயிரினங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு அதாவது உயிரினங்களுக்கு தகுந்த சூழலுக்கு இடப்பெயருகிறது. மீன்கள் மிதமான தண்ணீரில் வாழ்கிறது. இவைகள் இடம்பெயருவதில்லை ஆகையால் கிடைக்கும் ஆகாரத்தின் அளவு குறைகிறது. பழைய மற்றும் புதிய சுற்றுப்புறச்சூழலின் இணக்கமான உணவு சங்கிலியில் பிரச்சனை ஏற்படுகிறது. இதன் முடிவாக உயிரியியல் பல்வகை குறைகிறது.


பெறப்பட்ட நீரினால் மீன் இறப்பு


தட்பவெப்பநிலையில் 1-2 டிகிரி செல்சியஸ் அளவு மாற்றங்கள் நிகழும் போது உயிரினங்களின் வளர்சிதை மாற்றத்திலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. மற்ற உயிரியல் அணுக்களும் பாதிக்கிறது. மேலும் சவ்வூடு பரவலுக்கு செல்லும் உயிரணுக்களின் ஊடுருவும் தன்மை, உயிரை புரதத்தின் திரளும் தன்மை, நொதி வளர்ச்சிதைமாற்றம் போன்றவற்றிலும் மாற்றங்கள் ஏற்படுகிறது. இதனால் இனப்பெருக்கம் மற்றும் இறப்பு விகிதம் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படுகிறது.


நீரில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும் போது நீரித் தாவரங்களின் வளர்ச்சி வீதம் அதிகரித்தும் குறைந்த வாழ்க்கைச் சூழலையும், சிற்றினத்தின் எண்ணிக்கை அதிகரிக்கும் காணப்படுகிறது. இதனால் இந்த பாசிகள் நீரில் ஆக்ஸிஜனின் அளவை குறைக்கிறது. ஒளிச்சேர்க்கையின் அளவு குறைவதால் தாவரத்தின் அதிக அடர்த்தி தாவரத்தின் சுவாச விகிதத்தை அதிகரிக்கிறது. இது வளமூட்டப்பட்ட நீர் நிலைகளுக்கு ஒத்தாகும். இந்த நீர்நிலைகளில் வேளாண்மை கனிம உரங்கள் பயன்பாட்டால் நீர்மூலக்கூறுகள் மாசுபடுகிறது. அதிக அளவு அதிகரிக்கும் வெப்பநிலையினால் நொதி அமைப்பில் நைட்ரஜன் மற்றும் டைசல்பைடு பிணைப்பு உடைந்து நொதியின் முறையை மாற்றுகிறது. இந்த நொதி மாறுபாட்டுடைய நீர்நிலையங்களில் லிப்பீடுகள் உடையும் திறனற்று இருக்கிறது. இதனால் ஊட்டக்குறையானது ஏற்படுகிறது.

வரையறுக்கப்பட்ட நிலையில் வெதுவெதுப்பான நீரினில் குறைந்தபட்ச அழிவையையும் நீர்நிலவாழினங்களின் உட்கிரக்கும் தன்மை அதிகமாகும் இருக்கும். இந்த நிலையானது பொதுவாக பருவம் சம்பந்தப்பட்ட நீருக்கு பொருத்தும். இதனை வெப்பநிலை செறிவூட்டம் எனலாம். குளிர்காலத்தில் அளவுக்கு அதிகமான வெப்பநிலை இருக்கும் போது நீர் மசுக்களானது மின் நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படும் வெதுவெதுப்பான நீரினில் இருந்து நீர் பசுக்கள் ஒன்று கூடி கூட்டமாக இருக்கும். ஆனால் மின்நிலையத்தின் வெளியேற்றம் தடுக்கப்படும் போது குளிர்காலத்தில் நீர்பசுக்கள் இறந்துவிடும் நிலை ஏற்பட்டு எண்ணிக்கையானது குறைந்துவிடும்.

வெப்பநிலையானது, நன்னீரில் 700 பாரன்கைட், உப்புநீரில் 800 பாரன்கைட் மற்றும் வெப்பமண்டல பகுதியின் மீன்களில் 850 பாரன்கைட் ஆகும்.

சூழிலியலில் விளைவு - குளிர் நீர்


நீர்தேக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் குளிர் நீரினால் ஆறுகளிலுள்ள மீன்கள் மற்றும் பெரிய முதுகெலும்பற்ற உயிரினங்கள் போன்றவற்றில் மாற்றங்களையும் ஆஸ்திரேலியாவில் உள்ள ஆறுகள் வெதுவெதுப்பான வெப்பநிலையை உள்ளடக்கிய பகுதியாகும். இதனால் இந்த ஆறுகளில் நிலையான மீன் இனங்கள் மற்றும் குறிப்பிட்ட முதுகெலும்பற்ற உயிரினங்கள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. தட்பவெப்பநிலையானது நன்னீரில் 500 பாரன்கைட்டுக்கு குறைவாகவும் உப்பு நீரில் 750 பாரன்கைட்டாகவும், வெப்ப மண்டலத்தில் 800 பாரன்கைட்டாகவும் இப்பகுதியில் உள்ளது.

வெப்பநிலை மாசுக்கட்டுப்பாடு :



கஸ்டல் நீப்பர் மின் நிலைய குளிர்விப்பான் கோபுரம், டார்ட்மட், ஜெர்மனி


தொழிற்சாலை கழிவுநீர் :


ஐக்கிய நாடுகளில் வெப்பநிலை மாசுவானது தொழில் சம்பந்தம்பட்டான ஆதாரங்களான மின்நிலையம் பெட்ரோலில் துரிதம், காகித ஆலை, வேதிவினை நிலையம் இரும்பு நிலையம் மற்றும் நுகர் பொருட்கள் போன்றவற்றின் மூலம் ஏற்படுகிறது. இந்த மாசுக்கள் கட்டுப்படுத்தும் வழிகள் பின்வருமாறு.

  • குளிர்விக்கும் குளம் நீராவி, பரிமாற்றம் மற்றும் கதிரியக்கம் போன்றவற்றினால் மனிதனால் உருவாக்கப்பட்ட குளிர்விக்கும் குளம்

  • குளிர்விக்கும் கோபுரம் - ஆவியாகும் மற்றும் வெப்ப மாற்று முறையின் மூலம் தேவையற்ற வெப்பத்தை வளிமண்டலத்திற்கு அனுப்புதல்

  • ஒருங்கிணைந்த வெப்பம் மற்றும் மின்திறன் தொழிற்சாலை வெப்பமாக்குதலின் நோக்கத்திற்கு தேவையற்ற வெப்பத்திறன் மறுசுழற்சி செய்யும் செயல்முறை.


மேலே குறிப்பிட்ட முறைகளின் மூலம் ஒருமுறை குளிர்வித்தல் (OTC) என்ற இயக்கமுறையை கையாளும் போது தட்பவெப்பநிலையானது தேவயான அளவு குறைவதில்லை. எடுத்துக்காட்டாக ஸான் ஃப்ரான்சிஸ்கோவின் பொட்ரீரோ உற்பத்தி நிலையத்தில் OTC முறையை பயன்படுத்தும் போது வெளியேற்றப்படும் திறன் அளவானது சுற்றுப்புறத்திலுள்ள வெப்பநிலையை விட 100 செல்சியஸ் (200 பாரன்கைட்) அதிகமாக இருக்கிறது.
ஆதாரம்: http://www.studentsguide.in/biology/pollution_environment/thermal_pollution.html

நன்றி-RADO

Thursday, October 13, 2011

தண்ணீர் மாசுபடுதல்














மேலோட்டம்

நீர் மாசுபாடு என்பது எஏதேனும் அன்னிய பொருள்களினால் நீரின் தூய்மை கெடுக்கப்பட்டு அதன் தரம் குறைவதே ஆகும். நீர் மாசுபாடு என்பது நீர் ஆதாரங்களான ஆறுகள் மற்றும் கடல்களில் ஏற்படுவதாகும். நீர் மாசுபாடு என்பது பெருங்கடல்கள், ஏரிகள், நீரோட்டங்கள், ஆறுகள், நிலத்தடி நீர் ஆதாரங்கள் மற்றும் நீர் உள்ள இடங்கள் அனைத்திலும் ஏற்படக்கூடிய தூய்மைக்கோடாகும். இதனால் நச்சுப்பொருள்கள் தேவைப்படும் பொருட்கள், எளிதில் கரையக்கூடிய பொருள்கள் கதிர்வீச்சுகள் ஆகியவற்றின் வெளியீடு ஏற்பட்டு நிலத்தின் அடியில் மாற்றம் படிந்துவிடும். இதனால் நீர் நிலைகளின் சூழிடத்தில் மாற்றம் ஏற்படும். உதாரணமாக வளம்குன்றிய நீர்நிலைகள் (Entrophication) என்று நிலைமை ஏற்படும். அதாவது நீர் நிலையில் மாசுபடுத்திகளினால் அதிகமாக வளர்ந்து பரவுவதால் பிராணவாயு பற்றாக்குறை ஏற்படும்.

சுற்றுப்புறத்திற்கு மணிச்சத்தினால் (phosphorus) ஏற்படும் தாக்கம்:














அதிகமான மணிச்சத்துகேடு விளைவு


  • வளம் குன்றிய நீர்நிலைகள்




  • பிரணவாயுவின் பற்றாக்குறையினால் ஏற்படும் இரசாயன மாற்றத்தில் நச்சுப்பொருள்கள் உண்டாகும்.

  • குடிநீரை தூய்மைப் படுத்துவதற்கான செலவு அதிகமாகுதல்.

  • அப்பகுதியின் சூழிடத்தில் மாற்றம் ஏற்படுதல்

  • வண்டல் படிவங்கள் அதிகரிப்பதால் பொழுதுபோக்கிற்கான நீர் உபயோகித்தல் தடை ஏற்படுதல்

  • நீரின் மேற்புறத்தில் ஏற்படும் படிவங்கள் மற்றும் துர்நாற்றம்

  • பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரித்தல்



வளம் குன்றிய நீர்நிலைகள்


Eutrophication


வளம் குன்றிய நீர்நிலைகளை குறைக்கும் வழிமுறைகள் :


 


  • நீர் பிழப்பு பகுதிகளின் மேலாண்மை முறைகள்

  • மணிச்சத்து உரங்களை தேவையான அளவு உபயோகித்தல்

  • மணிச்சத்து உரங்களின் வகை

  • அங்கக உரங்கள் உபயோகப்படுத்தல்

  • வடிகால் வசதிகளை மாற்றியமைத்தல்



இரசாயன நேர்த்தி :

நீர் சுழற்சி மற்றும் மாசுபாடு :

நீர் சுழற்சி என்பது நீர் சுழலும் பாதையாகும். பூமியில் நீரானது மீண்டும் மீண்டும் உபயோகப்படுத்தப்படுகின்றது. இதுவே பூமி மற்றும் வளிமண்டலத்தின் இடையே ஏற்படும். நீர் சுழற்சி (அ) தொடர் நீர் இயக்கம் என்றழைக்கப்படுகிறது. பின்வரும் முறைகளில் இது நடைபெறுகின்றது.





  • ஆவியாதல்: நீரானது திரவத்திலிருந்து வாயுத்தன்மையாக மாறுதல் இலைத்துளை மூலம் ஆவியாகுதல்

  • படிந்துவிடுதல்: ஆவியானது குளிர்ந்த பதத்தில் படிந்துவிடுதல் (குளிரூட்டப்பட்ட அறை)

  • மழை பெய்தல்: பூமிக்கு மீண்டும் வரக்கூடிய நீர் (மேகங்களில் உள்ள நீர்த்துளிகள் பெரியதாகி மழையாக பெய்யும்)



நீர் சுழற்சி மற்றும் மாசுபாட்டிற்கும் இடையே உள்ள தொடர்பு :

நீர் சுழற்சியின் படி, இயற்கையின் நிகழ்வாக நம்மைச் சுற்றி உள்ள நீரானது நிலத்தினுள் உறிஞ்சப்பட்டு ஆறுகள் மூலம் நீரோடைகளாக சென்று கடலினை அடையும். உயிர்சிதைவு ஏற்படும் நீர்வாழ் உயிரினங்களுக்கு நன்மை அளிக்கும் முறையில் மாற்றப்படும். அதுபோல் கனிம மாசுபடுத்திகள் பரந்து இருப்பதால் சுற்றுப்புறத்திற்கு தீங்கு விளைவிப்பது இல்லை.

சிறிய அளவிளான அங்கக மற்றும் கனிம மாசுபடுத்திகள் நீரோடைகளில் பாதுகாப்பாக சிதைக்கப்பட்ட கடலுள் கலந்து விடுவதால் சூழிலடத்திற்கு ஏதும் தீங்கு இல்லை. ஆனால் அவை மிகப் பெரிய அளவில் இருந்தால் கடலோர உயிரினங்களை பாதிக்கும்.

வழிகள் மற்றும் முறைகள் :


நீர் மாசுபாடு ஏற்படுத்தும் முக்கிய வழிகள் பின் வருவனவாகும் :


  • பெட்ரோலிய பொருட்கள்

  • செயற்கை வேளாண் இரசாயனங்கள்

  • கடின உலோகங்கள்

  • தீங்கு ஏற்படுத்தும் கழிவுகள்

  • அளவிற்கு அதிக அங்கக பொருட்கள்

  • படிமானங்கள்

  • தொற்று ஏற்படுத்தும் கிருமிகள்

  • காற்று மாசுபடுதல்

  • வெப்ப மாசுபாடு

  • மண் மாசுபாடு



நீர் மாசுபாடு மனிதர்களுக்கு ஏற்படுத்தும் பாதிப்பு :

மாசுபட்ட குடிநீரால் ஏற்படும் நீர்மூலம் பரவும் நோய்கள் :





  • டைபாய்டு

  • அமிபியாசிஸ்

  • ஜியார்டியாசிஸ்

  • அஸ்காரியாசிஸ்

  • கொக்கி புழுக்கள்



மாசுபட்ட கடல் நீரால் ஏற்படும் நோய்கள் :





  • தோல் நோய்கள், காதுவலி, கண்கள் சிவந்து போகுதல்

  • மூச்சு திணறல் நோய்கள்

  • மூளைக்காய்ச்சல், வாந்திபேதி, வயிற்றோட்டம், வாந்தி மற்றும் வயிற்றுவலி



வாந்தி மற்றும் வயிற்றுவலி

இரசாயனங்கள் (பூச்சிக்கொல்லிகள், ஹைட்ரோகார்பன், அங்கக மாசுபடுத்திகள், கடின உலோகங்கள்) போன்றவற்றால் ஏற்படும் தீங்குகள்.


Water Production





  • புற்று நோய் - இரத்தப் புற்று நோய்

  • இனப்பெருக்கம் மற்றும் வளர்ச்சிப்பாதைகளை தடுக்கும் ஹார்மோன் பிரச்சனைகள்

  • நரம்பு மண்டலங்களுக்கு சேதம்

  • சிறுநீரகம் மற்றும் கல்லுரலுக்கு சேதம்

  • டிஎன்ஏ விற்கு சேதம்



பாதரசத்தினால் ஏற்படும் பாதிப்பு :





  • கர்ப்பத்தினுள்: நரம்பியல் பிரச்சனைகள் ஏற்படுகின்றது, குறைந்மத பதிவுகள், கற்பதற்காக ஏற்படும் கோளாறுகள், காது கேளாண்மை மற்றும் மூளை பாதிப்பு

  • பெரியவர்களுள்: நியாபக மறதி, உறுப்பின் காழ்ப்பு, பக்கவாத நோய்கள், இதய நோய்கள் மற்றும் மரணம்.



பிற தகவல்கள்:

நீர் மற்றும் மாசுபட்ட மண்ணும் சேர்ந்தால் நீர் மாசுப்பாடு ஏற்படும் (அ) காற்று தொற்றுகள் (உதாரமாண அமில மழை) போன்றதும் நீரினை மாசுபடுத்தும்.

மாசுபட்ட நீரில் வளரும் மீன்களை உணவில் சேர்த்துக் கொண்டால் பாதிப்பு ஏற்படும். (உதாரணமாக மீனில் உள்ள அதிக பாதரச அளவு)

மாசுபட்ட நீரில் வளர்ந்த காய்கறிகளை உட்கொண்டாலோ, கைகளை அலம்பினாலோ பாதிப்பு ஏற்படும்.

நீர் மாசுபாட்டினால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்பு:





  • உரம் மாசுபாடு (நைட்ரஜன், பாஸ்பரஸ் போன்றவை) அதிக உரங்களினால் பாசிகள் தேவைக்கதிகமாக வளர்ந்து அதனை நீர்வாழ் உயிரினங்கள் உண்ணும்பொழுது இறக்க நேரிடும். மேலும் மீன்களில் நோய்களை பரப்புகின்றது.


Water Pollution


எண்ணெய் பூசப்பட்ட வாத்து




  • இரசாயன மாசுபாடினால் கடல் வாழ் உயிரினங்களுக்கு எதிரான பாதிப்புகள் ஏற்படும். அவற்றின் இனப்பெருக்கம், வயிற்று சம்பந்தப்பட்ட நோய்கள், கல்லீரல், சிறுநீரகம் மற்றும் நரம்பு மண்டலங்களில் பாதிப்பு ஏற்படும்

  • நீரில் உள்ள பாதரசம் நேர் எதிரான அசாதாரண குணங்கள் குன்றிய வளர்ச்சி மற்றும் இனப்பெருக்கம் மரணம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்

  • அழியாத அங்கக மாசுபடுத்திகள் மீன் இனங்களுக்கு மரணம் மற்றும் குறைபாடுகளை எற்படுத்தும்

  • நீரில் உள்ள அதிக உப்பு உயிரினங்களை அழித்து விடும்.



நீர் மாசுபாட்டினால் மரம் மற்றும் செடிகளுக்கு ஏற்படும் பாதிப்பு:

நீரில் வளரும் செடிகளை ஒளித்தொகுப்பினை பாதித்து அதனால் அவற்றின் சூழ்பத்தினையும் பாதிக்கும்.

நீரில் உள்ள மாசுபடுத்திகளை உட்கொள்ளும் செடிகள் அவற்றை உணவுச் சங்கில் மூலம் உண்ணும். மனிதர்கள் மற்றும் விலங்கினங்களுக்கு பரவச்செய்கிறது.

நீரில் உள்ள அதிகப்படியான உப்பு (சோடியம் க்ளோரைடு) செடிகளை அழித்துவிடும்.

கட்டுமானங்களில் இருந்து விழும் மரக்கட்டைகள் களிமண் மற்றும் மணல் போன்றவை சரிவதாலும் செடிகள் அழிந்து விடும்.

நீரில் உள்ள களைக்கொல்லிகள் செடிகளை அழித்துவிடும்.


நீர் மாசுபாடு மேலாண்மை:

உயிர்வழி நிவர்த்தி:

நுண்ணுயிர்களின் எண்ணிக்கையினை அதிகப்படுத்தி நிலைப்பட்ட வலயினுள் உள்ள அங்கக பாகங்களின் உணிர்சதைவை துரிதமாக்குதல்.

முழுமையடைந்த பெட்ரோலியம் ஹெட்ரோகார்பன் பொருள்களுக்கு (எம்.டி.பி.இ தவிர்த்து நீள் சங்கிலி அதிக மூலக்கூறு எடை மற்றும் கரையாத பொருள்களால் ஆன அனைத்தும்) பொருந்தும்.

பிற நிலைப்பட்ட வலய நிவர்த்தி தொழில் நுட்பங்கள் (எ-டு. மண் நீராவி பிரித்தெடுத்தல், உயிர்காற்றோட்டம்)

வரையறை முறைகள்: மின்னணு ஏற்பான் (ஆக்ஸிஜன், நைட்ரேட்), ஊட்டச்சத்தி (நைட்ரஜன், பாஸ்பரஸ்), ஆற்றல் மூலம் (கார்பன்).

நிவர்த்தி முறைகள்: காற்றுள்ள (பிராணவாயு சுவாசம்), காற்று மாறுபட்ட (நைட்ரேட் சுவாசம்), காற்றில்லாத (பிராணவாயு அல்லாத சுவாசம்), ஒன்றுபட்ட வளர்சிதை மாற்றம்.

இரு நிலை பிரித்தெடுத்தல்:





  • நிலத்தை நீரினை மாசுபடுத்தும் அனைத்து பொருள்கள் பெட்ரோலிய பொருள்களின் தனிப்பட்ட நிலை, நிலத்தடியிலிருந்து ஆவியாகும் ஹைட்டேரா கார்பன் ஆகியவற்றை வெளியேற்றுதல்

  • அதிகமான வெளியேற்றம் ஆற்றல் கொண்டதால், பெட்ரோலிய பொருட்களின் உயிர்சிதைவினை அதிகப்படுத்துவதுடன் நிலத்தடியிலுள்ள பல்வேறு நிலை கொண்ட பொருட்களையும் அகற்றிவிடும்

  • வரையறை முறைகள்: காற்றற்ற , நீரளவையியல் மற்றும் நீர்

  • நேர்த்தி முறைகள்:

  • ஒரு குழாயினை கொண்டு நிலத்தடி திரவ மற்றும் திட வாயுக்களை அதிவிரைவு இரு நிலைஓட்டமாக வெளியேற்றுதல்

  • இரு (அ) அதிகமான குழாய்களை கொண்டு நிலத்தடி திரவ மற்றும் திட வாயுக்களை வெளியேற்றுதல்



இயற்கையாக அளவினை குறைத்தல்:





  • இயங்கா நேர்த்தி முறையான இது இயற்கையான முறைகளை கொண்டு பங்குகளை சிதைத்தல் மற்றும் பரவவிடுதல் ஆகியவற்றை சார்ந்து இருக்கும்

  • பெட்ரோலிய பொருட்கள் வெளியேற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை சமன்படுத்தி குறைப்பதுடன் விரைவில் தாக்குதல் ஏற்படும் பொருட்களுக்கு அது பரவாமல் தடுக்கும்.

  • இயக்க நேர்த்தி முறைகளின் மூலம் மாசுபடுத்திகளின் அளவினை குறைக்கும் இடங்களுக்கு பொருந்தும்.



முறைகள்:





  • அழித்தல் (உயிரியல் முறைகள்): காற்றுள்ள (பிராணவாயு சுவாசம்), காற்றற்ற (பிராணவாயு அற்ற சுவாசம்), மற்றும் குறைந்த காற்றுள்ள (குறைந்த பிராணவாயு அளவு)

  • அழித்தல் அல்லாத மறைகள் (இயற்பியல் முறைகள்): ஆவியாக்குதல், பரப்புதல் (இயந்திர முறை கலப்பு மற்றும் மூலக்கூறு பிரித்தல்) மற்றும் உறிஞ்சுதல்



உயிரியல் முறைகள்:

இயற்கையான உயிர்சிதை முறைகள் ஏற்படும் வேகத்தினை இரசாயனங்கள் (அ) உயிரினங்களை கொண்டு அதிகப்படுத்துதல்


சிந்திய எண்ணெய்களை கடலோரங்கள் மற்றும் நன்செய் நிலங்களில் உள்ள சூழிலடம் பாதிக்காமல் அகற்றுதல்.

வரைமுறை முறைகள்:

காற்றுள்ள (அ) காற்றல்லாத நுண்ணுயிர்கள் மூலம் மக்குதல் (எ-டு. பாக்டீரியா)

நேர்த்தி முறைகள்:


  • உரமிடுதல்: உயிர்சிதைவு ஏற்படுத்தும் நுண்ணுயிர்களின் வளர்ச்சியை துரிதப்படுத்துவதற்கு மாசுபட்ட சுற்றுப்புறத்தில் பாஸ்பரஸ் மற்றும் நைட்ரஜன் உரங்களை சேர்க்க வேண்டும்

  • விதையிடுதல்: நுண்ணுயிர்களை இருக்கும் இளங்கை மண்ணில் சேர்த்தல்



பரவச் செய்யும் பொருள்:





  • புறஈர்ப்பான்களை கொண்ட இரசாயனங்கள் எண்ணெயினை சிறு துகள்களாக உடைத்து நீரினுள் கலந்து பின்னர் காற்று அலைகள் மற்றும் ஓட்டங்கள் போன்ற இயற்கை செயல்களினால் மேலும் உடைந்துவிடுதல்

  • கடலில் உள்ள நீரின் உப்பு அளவு, வெப்பநிலை மற்றும் உள்ள நிலைகள் பரவும் திறனை நிர்ணயிக்கும்

  • இயந்திரங்கள் மூலம் அல்லது தூய்மைபடுத்துதல் கடினமாகும் பொழுது கடலின் நிலை கரடுமுரடாக அமைந்திருந்தால் இம்முறையை பின்பற்ற வேண்டும்.



ஈர்ப்பான்கள்:





  • நீரினை முழுக்கிவிடும் அதாவது எண்ணெய் விரும்பும் மற்றும் நீர் விரும்பாத பொருள்கள்

  • எண்ணெய் சிந்தியுள்ள நிலைகளில் உபயோகிக்கலாம். இது பின்வரும் காரணிகளை நிர்ணயம் செய்யும்

  • ஈர்பான்கள் வகை மற்றும் எண்ணெயின் வகையை கொண்டு உறிஞ்சும் திறன் வேறுபடும்

  • நீர் வழிந்தோடும் தன்மையை பொறுத்து எண்ணெய் தக்க வைத்துக் கொள்ளுதல் அமையும்.

  • சுலபமாக உபயோகிக்கும் முறை ஈர்ப்பான்களின் வகை மற்றும் மண்ணின் வகையை கொண்டு அமையும்.

  • ஈர்க்கும் பொருள்

  • இயற்கை அங்கக பொருள்: மிதப்பான்களில் இணைக்கப்பட்ட மரத்தூள்கள் தங்களது எடையில் 3 முதல் 15 முறை வரையில் எண்ணெயினை முழ்கடிக்கும்.

  • இயற்கை கனிம: களிமண், பெர்லைட், வெர்மிகுலைட், கண்ணாடி நூல், மணல் அல்லது எரிமலை சாம்பல் ஆகியவை தங்களது எடையில் 4 முதல் 20 முறை, எண்ணெய் எடையினை உறிஞ்சு கொள்ளும்.

  • செயற்கை: பாலியுரேத்தேன், பாலித்தீன், நைலான் இழைகள் தங்களது எடையில் 70 முறை எண்ணெய் எடையினை உறிஞ்சு கொள்ளும். இவற்றில் சிலவற்றை தூய்மைபடுத்தி மீண்டும் உபயோகிக்கலாம். மற்றவை ஒரு முறை உபயோகித்த பின் அழித்து விட வேண்டும்.

  • பொதுமக்களின் உடலியல் மற்றும் உளவியல் சார்ந்த பக்குவத்தின் அடிப்படையில் தொழிற்சாலையின் தொடர்ச்சியான மேம்பாட்டினை அப்பகுதியை பொருத்து சரிவிகிதமாக்குதல்.



ஆதாரம்: http://library.thinkquest.org/co111040/types/types.php



உங்கள் வீட்டு குடிதண்ணீரின் தரம் என்ன என்பது பற்றி தெரிந்து வைத்திருக்கிறீர்களா?

 

முன்பெல்லாம் வீடுகள் என்றால் அங்கு ஒரு கிணறு இருக்கும். கிணற்றில் கயிறில் கட்டப்பட்ட வாளியில் தண்ணீரை இழுத்து இறைத்து குளிப்பது அலாதி சுகம். ஒரு கட்டத்தில் கிணறுகள் குறைந்து அடிபம்புகள் வந்தன. அதற்கடுத்து ஜெட்மோட்டார்கள், சப்மர்சிபிள் என்று பூமியின் ஆழத்தில் கிடக்கும் மோட்டார் கொண்ட ஆழ்துளை குழாய் என்று படிப்படியாக உருமாறின. இந்த மோட்டார்களில் எல்லாம் இல்லாத ஒரு சிறப்பம்சம் கிணற்றுக்கு உண்டு. அது, கிணற்றில் ஊறும் தண்ணீர் கண்ணாடி போல் நமது பார்வையில் தெளிவாக இருக்கும். உச்சி வேளையில் கிணற்று தண்ணீரில் சூரியனின் ஒளி பிரதிபலித்து சில நேரங்களில் கிணற்றின் அடி ஆழம் வரை தெரியும். இது ரம்மியமான காட்சியாக இருக்கும்.

இப்போது இப்படி இருந்த கிணறுகள் எல்லாம் பெரும்பாலும் மறைந்து விட்டன. கிராமப்புறங்களில் விவசாயத்திற்காக மட்டும் தான் தற்போது கிணறுகள் பயன்பாட்டில் உள்ளன. கிணறுகள் திறந்த நிலையில் இருந்ததால், தண்ணீரில் ஏற்படும் மாற்றத்தை சுலபமாக தெரிந்து கொள்ள முடியும். உதாரணமாக, செழிப்பாக மழை பெய்திருந்தால் கிணற்றில் ஊறும் தண்ணீரானது எங்கள் வீட்டில் இருந்த கிணற்றில் செம்மண் நிறத்தில் இருப்பது வழக்கம்.

ஆனால் தற்போது உள்ள போர்வெல் குழாய்கள் நீரை இழுத்து நேரடியாக தொட்டியில் நிரப்புவதால் மாடிக்கு சென்று தொட்டியில் ஏறிபார்த்தால் மட்டுமே நீரின் தெளிவு, சுத்தம்,நிறம் போன்றவற்றை காண முடியும். எனவே, நம்மால் பல நேரங்களில் தண்ணீரின் இயல்பை தெரிந்து கொள்ள முடியாமல் அன்றாடம் பயன்படுத்திக் கொண்டு தான் இருக்கிறோம்.

ஆனால் தண்ணீரை பற்றி நாம் மிகவும் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில விடயங்கள் இருக்கின்றன. அதை கேள்வி பதில் வடிவத்தில் தொகுத்துள்ளேன். தமிழக அரசின் நிலநீர்பிரிவு வெளியிட்டுள்ள இந்த தொகுப்பு சொல்லும் தகவல்கள் இதோ....

 1.சமீபகாலமாக பல் காவி நிறமாகிறது. ஏன்?

நீங்கள் குடிக்கும் நீரில் புளோரைடு என்ற உப்பு அதிகமாக இருக்கலாம். இந்த புளோரைடு உப்பு பற்களை மஞ்சள் நிறமாக மாற்றும். குடிக்கும் நீரில் ஒரு லிட்டரில் 1.5 மி.கிராம் அளவிற்கு அதிகமாக புளோரைடு இருக்க கூடாது. இந்த அளவிற்கு மேல் புளோரைடு அதிகம் இருக்கும் நீரை கண்டிப்பாக குடிக்க பயன்படுத்த கூடாது.

2. புளோரைடு அளவுகோல் பற்றியும், அதன் விளைவுகள் பற்றியும் கூறவும்?

குறைந்த புளோரைடு அளவு என்பது (0.5-1.0 மிகிராம் லிட்டர்) இந்த அளவு இருந்தால் அது பற்களுக்கு பாதுகாப்பானது. இந்த அளவு புளோரைடு இருந்தால் அது பல் சொத்தை விழாமலும், பல்லில் துர்நாற்றத்தையும் தடுத்து விடுகிறது. ஆனால் 1.5 என்ற அளவை விட குடிநீரில் புளோரைடு அதிகம் இருந்தால் அந்த நீரை குடிப்பவர்களுக்கு பல் காவி நிறமாகும். உடலின் எலும்புகள் எல்லாம் பாதிக்கப்பட்டு முடக்குவாதம் என்ற நோய் உருவாகி செயலற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். புளோரசிஸ் என்ற நோய் ஏற்படும்.

3. பிறந்து ஆறு மாதம் ஆன சில குழந்தைகள் நீலமேறுதல் மற்றும் திடீரென்று இறந்து போவதின் காரணம் என்ன?

குடிக்கும் நீரில் அதிகமான நைட்ரேட்டு என்ற ரசாயன உப்பு இருந்தால் குழந்தைகள் திடீரென்று உடலில் நீலநிறம் பாய்ந்து இறந்து போவதுண்டு.

4. வீட்டின் மேல்நிலை தொட்டிகளில் அடிக்கடி பாசி படிகிறது. இது ஏன்?

காற்று,சூரிய ஒளி ஆகியவை தொடர்ந்து படும் மேல்நிலை தொட்டிகளில் இது போல் பாசி ஏற்படும். எனவே காற்று, சூரிய ஒளி படாமல் தண்ணீர் தொட்டிகளை நன்றாக மூடி வைத்திருக்க வேண்டும். கிணறுகளையும், நீர்தொட்டிகளிலும் சிறிதளவு பிளீச்சிங் பவுடர் கலக்கலாம். அதாவது 100 லிட்டர்தண்ணீருக்கு 30 விழுக்காடு திறன் உள்ள பிளீச்சிங் பவுடர் 1 கிராம் என்ற அளவில் சேர்க்கலாம்.

5. சில நேரங்களில் சமைக்கும் போது சோறு மஞ்சள் நிறமாக ஆகிவிடுகிறதே ஏன்?

நீரின் காரத்தன்மை (alkalinity) அதிகமாக இருந்தால் சோறு வேக வைத்த பின்பு மஞ்சள் நிறமாக இருக்கும். பருப்பும் சரிவர வேகாது.

6.நீரினை பிடித்து சேகரித்து வைக்கும் போது, மஞ்சள் நிறமாக இருக்கிறது. இந்த தண்ணீரில் துணிகளை துவைக்கும் போது காவி,பழுப்பு கறை ஏற்படுகிறது. எதனால்?

இது இரும்பு(iron) உப்பு இருப்பதால் நிகழ்கிறது. இரும்பு அகற்றும் சுத்திகரிப்பு முறைகளை பயன்படுத்தலாம். எளிமையான வடிவமைப்பு கொண்ட சுத்திகரிப்பு நீர் தொட்டிகளை பயன்படுத்தி இரும்பு சத்தை குறைக்கலாம்.

7. போர்வெல் தண்ணீரின் உப்புத்தன்மையை நீக்க தொட்டியில் தேத்தங் கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டையை போட்டு வைக்கலாமா?

தேத்தங்கொட்டை அல்லது நெல்லி மரக்கட்டை துவர்ப்பு சுவையுடையது. துவர்ப்பும், உப்பும் இருக்கும் போது நீரானது, உப்பு குறைந்துள்ளதாக தோன்றும். ஆனாலும் நீரில் குறைந்துள்ள ரசாயனங்களின் அளவில் மாற்றம் ஏற்படுவதில்லை.

8. கழிவறை தொட்டி (செப்டிக் டேங்க்) மற்றும் ஆழ்குழாய் கிணறு(போர்வெல்) இவற்றுக்கு இடையே இருக்க வேண்டிய இடைவெளி எவ்வளவு?

சுமார் 50 அடி இடைவெளி இருக்க வேண்டும்.

நீர்வழி நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள சில வழிமுறைகள்

  • நீரை கொதிக்க வைத்து, குளிர வைத்து, வடிகட்டி பின்னர் குடிப்பதற்கு பயன்படுத்தலாம்.

  • நோய் கிருமிகளை அழிக்க பிளீச்சிங் பவுடர் பயன்படுத்தலாம் (1000 லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவில்)

  • தொழிற்சாலை கழிவுகள், வீட்டு உபயோக கழிவுகள்(குப்பைகள்), கால்நடை கழிவுகள், நீர்நிலை ஆதாரங்களில் கலக்காமல் பாதுகாப்பான தூரத்தில் போர்வெல் அமைந்திருக்க வேண்டும்.

  • கைப்பம்புகள், குழாய்களை சுற்றி கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குழாய், போர்வெல்லின் அடியில் குளித்தல், மாடுகளை கழுவுதல், துணிதுவைத்தல் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

  • புளோரைடு நீரில் இருக்கும் அளவை கண்டிப்பாக தெரிந்து கொள்ள நீரை பரிசோதனை செய்து பிறகு பயன்படுத்த வேண்டும்.


நீங்கள் சென்னைவாசி என்றால் கீழே உள்ள விலாசத்தில் உங்கள் போர்வெல் தண்ணீரை கொடுத்து அந்த தண்ணீரில் என்ன வகையான உப்புகள் எல்லாம் கலந்திருக்கின்றன. அது குடிக்க உகந்ததா என்பது பற்றி தெரிந்து கொள்ளலாம். இது தவிர தமிழக்கத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் நீர் பரிசோதனை கூடங்களை அரசு அமைத்துள்ளது. அங்கே சென்று நீரின் தரத்தை பரிசோதித்து கொள்ளலாம்.

உதவி இயக்குநர், (நில வேதியியல்)

நிலவேதியியல் உட்கோட்டம்,

தரமணி,பொதுப்பணித்துறை வளாகம்,

தரமணி, சென்னை-600113

போன்:044-22541373

 

நன்றி-RADO

Tuesday, October 11, 2011

ஒலி மாசுபடுதல்

ஒரு கண்ணோட்டம் :

இந்த குறிப்பிட்ட ஒலி மாசுபாடானது, தொழிற்சாலை இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் போன்றவற்றின் அதிக பயன்பாட்டால் ஏற்படும் மிகையான சத்தமாகும். நாம் ஒவ்வொரு நாட்களின் ஒவ்வொரு நொடியிலும் சப்தங்களை எழுப்புகிறோம். இதனால் நம்முடைய அன்றாட வாழ்க்கையானது பெரிதும் பாதிக்கப்படுகிறது.

டெசிபல் முறையின் ஒலியின் அளவானது அளவீடப்படுகிறது. டெசிபல் - 10 ல் ஒன்று ஒரு பெல்லாகும். அதாவது ஒரு பெல் இரண்டு திண்ணத்திற்கு இடையேயுள்ள வேறுபாடாகும் (1,10). ஒரு பெல் மற்றொன்றை விட பத்துமடங்கு பெரியதாகும். திண்ணத்தின் அளவானது இரண்டு வெவ்வேறு திண்ணத்தின் ஒப்பீடாகும். அதாவது

திண்ணத்தின் அளவு - 10 log10 (1/10) (dB)


உதாரணமாக இரண்டு செறிவுகளான 10.8 வாட்ஸ் / மீட்டர்2 மற்றும் 10.4 வாட்ஸ் / மீட்டர்2 இரண்டிற்கும் இடையேயுள்ள வேறுபாடு 10,000 யூனிட்களாகும். இதனை 4 பெல்கள் அல்லது 40 டெசிபல்கள் என்றும் கூறலாம்.

ஒலியினால் ஏற்படும் டெசிபலின் அளவின் உதாரணங்கள் பின்வருமாறு:

























































கேட்பதின் ஆரம்ப நிலை0 dBமோட்டார் சைக்கிள் (30அடி)88 dB
சலசலவென ஒலி20 dBஉணவு அரைக்கும் கருவி (3அடி)90 dB
சிறிய முணுமுணுப்பு (3அடி)30 dBபாதாளத் தொடர்94 dB
இரைச்சலற்ற வீடு40 dBடீசல் வண்டி (30அடி)100 dB
இரைச்சலற்ற தெரு50 dBஅறுவடை இயந்திரம் (3அடி)107 dB
சாதாரண உரையாடல்60 dBகாற்றழுத்த முறையில் இயங்கும் கடாவு ஆணி (3அடி)115 dB
காரின் உள்ளே70 dBசங்கிலி ரம்பம் (3அடி)117 dB
சப்தத்துடன் பாட்டு (3அடி)75 dBஅதிக சத்தத்துடன் கூடிய நடனம்120 dB
மோட்டார் வண்டி (25அடி)80 dBஜெட் விமானம் (100அடி)130 dB

மற்ற ஒலி அளவீடுகள் பின்வருமாறு :





  • சமூக மக்கள் ஒலியின் சமமான / நிகரான நிலை

  • கலவையான ஒலியின் விகிதம்

  • சமமான ஆற்றல் அளவு

  • ஒலி மற்றும் அதன் எண்ணிக்கையின் அட்டவணை

  • ஒலி கதிர்வீச்சின் முன்கணிப்பு

  • ஒலி அலகு

  • ஒலி நிலை

  • ஒலி மாசுபாடு நிலை

  • ஒலி விகிதம்

  • உணர்ந்து கொள்ளும் ஒலியின் நிலை

  • போக்குவரத்து ஒலியின் அட்டவணை

  • சப்தத்தின் அளவு (இரைச்சலின் அளவு)

  • சப்தத்தின் அளவு மீட்டர்

  • சப்த அழுத்த அளவு

  • உலக ஒலி செல்லும் திட்டம்



ஆதாரங்கள் மற்றும் முறைகள் :


ஒலி மாசுவிற்கு கீழ்கண்ட பிரிவுகள் மிக முக்கியமான ஆதாரங்களாகும்.

  • சாலை போக்குவரத்து இரைச்சல்

  • விமான இரைச்சல்

  • இரயில் இரைச்சல்

  • அக்கம் பக்கம் மற்றும் வீட்டின் ஒலி

  • ஏற்றதற்ற நிலத்தின் பயன்பாடு

  • தொழிற்சாலை இரைச்சல்


ஆதாரம்: http://library.thinkquest.org/co111040/types/types.php.


ஒலி மாசுபாட்டின் விளைவு :





  • தென்னாப்பிரிக்காவின் ஜோகானஸ் பேர்க் பகுதியானது, இடஅமைப்பு மற்றும் அதிகமாகிவரும் கட்டிடம் போன்றவற்றின் இரைச்சலினால் பெரிதும் பாதித்துள்ளது. மேலும் காலை நிலையையும் அதாவது குளிர் காலத்தில் தட்பவெப்பநிலையானது நேர்தலைகீழாக மாறுகிறது (வால்ஸ்லி, 1997).

  • வாழ்வியல் / உடலியல் சார்ந்த விளைவு: அதிக ஒலி அலை அதிர்வினால் கேட்கும் திறனின் உணர்வு குறைகிறது. தொடர்ந்து அதிகரிக்கும் போது மனிதனின் கேட்கும் திறனானது பாதிக்கப்பட்டு திறனை இழந்துவிடுகின்றனர்.

  • உளவியல் சார்ந்த விளைவு: ஒலி / இரைச்சலினால் மனிதனின் அனச்சுரப்பி, நரம்பு, செரிமானம் மற்றும் இரத்த நாடி போன்ற தொகுதிகள் பாதிக்கிறது. ஏற்றுக்கொள்ளவும் மற்றும் பொருத்து பழகிக் கொள்ளும் தன்மைகள் இருந்தாலும் அதிகமான தாக்கத்தின் போது செரிமானம் மற்றும் இரத்த நாடி போன்ற பகுதிகள் மற்றும் இரைச்சலை ஏற்றுக்கொள்ளும் பகுதிகளிலும் நோய்கள் தாக்குகிறது.

  • இரைச்சலானது மனிதனின் உணர்வுகள் மற்றும் செயல்கள் போன்றவற்றை பாதிக்கிறது. கோபம், மன அழுத்தம் மற்றும் அதிக இரத்த அழுத்தம் போன்ற அறிகுறிகள் ஒலி மாசுபாட்டினால் மனிதனுக்கு ஏற்படுவையாகும்

  • தொடர்பு (தகவல் தொடர்பு): ஒலி அளவின் தலையீட்டால் தகவல் தொடர்பு பாதிக்கப்பட்டு உற்பத்தியில் இழப்பீடு ஏற்படுகிறது.

  • சோர்வு மற்றும் தலைவலி: ஏற்றுக்கொள்ளதக்காத இரைச்சல் அல்லது ஒலியினால் மனிதனுக்கு உடலில் சோர்வும், தலைவலியும், ஏற்படுகின்றது.

  • தொழில்ரீதியான இரைச்சல்: தொழில் சம்பந்தப்பட்ட இரைச்சலினால் சோர்வு, தலைவலி, உற்பத்தியில் இழப்பு மற்றும் கேட்கும் திறனில் மந்தம் போன்றவை ஏற்படுகின்றது. இதன் விளைவானது பாதிக்கப்படும் மனிதனின் வயது, பாலினம் மற்றும் கேட்கப்படும் திறனின் காலம் போன்றவற்றை பொருத்து அமைகிறது.

  • போக்குவரத்து: மோட்டார் வண்டிகள், பேருந்துகள், இரயில் வண்டி மற்றும் விமானம் போன்றவற்றின் இரைச்சல் மனிதனுக்கு கேடு விளைவிக்கின்றது. அதிக நகர மக்கள் இருக்கும் இடங்களில், இதன் தாக்கம் அதிகமாகவே இருக்கும். இது கட்டுப்படுத்த முடியாத அதிக இரைச்சல் சப்தத்துடன் மற்றும் கற்பனை செய்ய முடியாத ஒன்றாகும். இரயில் வண்டி இயக்கம் அதிகமுள்ள சுற்றுப்புற குடியிருப்புகளில் ஒலியின் அளவானது 80-100 டெசிபல் மற்றும் மூன்று அடுக்கு குடியிருப்பின் திறந்த வெளியில் 90 டெசிபலாகும் பதிவாகிறது.

  • சமூக இரைச்சல்: veitch - ன்  படி அதிக இரைச்சலினால் தலைவலி, எரிச்சல், குழப்பம் போன்றவை ஒலி மாசுபட்டால் ஏற்படுகிறது. இந்த நிலையானது கடந்த 20 வருடங்களாக நடைமுறையிலுள்ளது. சமூக இரைச்சலுக்கு கீழே கொடுக்கப்பட்ட ஆய்வுகள் ஆதாரமாகும்.

































வார்ட் & சுட்வெல்ட், 1973மனவழுத்தம், நிலையற்ற தன்மை மற்றும் அதிவேகமான பேச்சு
டேமன், 1977சுற்றுவட்டப்பகுதியில் சுமூக வாழ்க்கை நிலை பாதித்தல்
ஆப்பிள்யார்டு & லின்டெல், 1972அக்கம் பக்கத்து வீடுகளில் சமூக உறவு குறைவு
கொஹென், எவன்ட், கிரான்ட்ஸ் & ஸ்டெகோல்ஸ், 1980பள்ளி சம்பந்தமான செயல் திறன் குறைதல்
கொஹென் மற்றும் சிலர் வீட்ச் 1996உயர் இரத்த அழுத்தம்

18-19 வயதுடையவர்களில் 60 சதவிகித மக்களின் கேட்கும் திறன் குறைதல்
அய்ரிஸ் & ஹீக்ஸ், 1986உரத்த இசையால், மனிதனின் ஒருமுகப்படுத்திய தீவிரத்தின் தன்மையில் பாதிப்பு
தைய்கன், 1988உறக்கம் புறக்கணிப்பு


ஒலி மாசுக்கட்டுப்பாடு :


பாதுகாப்பு

  • அலுவலகங்களில் இரைச்சல் ஏற்படுத்தும் கதவுகள், மதில், மேல் முகப்பு போன்றவற்றின் தொந்தரவை தடுப்பதற்கான வழியை கையாளுதல்

  • திரையரங்கு மற்றும் சினிமா போன்றவற்றில் ஏற்படும் எதிரொலியை தடுக்க கடத்தாப் பொருட்களின் பயன்பாடு

  • தொழிற்சாலையில் வேலை செய்யும் வேலையாட்களை பாதுகாக்க காதுகளில் பொருத்தப்படும் ஒரு கருவியின் பயன்பாடு

  • நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள நகர குடியிருப்புகளில் கட்டமைப்பானது ஒலித்தடையை கொண்டு அமைப்பதால் போக்குவரத்து வாகனங்களின் இரைச்சலை குறைக்கலாம்


தாவர வளர்ப்பு




  • ஒலி மாசுபாட்டினை உட்கிரகிக்கவும், தடுக்கவும் குடியிருப்பு பகுதி மற்றும் நகரப் பகுதி போன்றவற்றை பசுமை நகரமாக மாற்றுவது


பகுதிகளாக பிரிப்பு




  • குடியிருக்க தகுதியான பகுதிகளாக நகர பகுதிகளை பிரித்து மறுகட்டமைப்பு செய்வது

  • அருகிலிருக்கும் கட்டங்களை பொருத்து தொழிற்சாலை ஒழுங்கான மேம்பாட்டு கூட்டடைப்புடன் பிரித்தல்


நன்றி-RADO

Sunday, October 9, 2011

மண் மாசுபடுதல்









மேலோட்டம் :

மண் பின்வரும் காரணிகளால் மாசுபடுகின்றது :






  • திடக்கழிவுகள் தேக்கத்தால் ஏற்படுவது

  • உயிரியல் சுழற்ச ஏற்படாத பொருள்களின் சேர்க்கையால்

  • வேதியியல் பொருள்கள் நச்சுகளாக மாறுதல்

  • மண் வேதியியல் பங்கீடுகளின் மாற்றத்தால் ஏற்படுவது  (மண்ணின் வேதியியல் குணங்களில் ஏற்படும் சம நிலையின்மையால்)



இந்த பூமியில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியதும், அதன் ஒவ்வோர் பொருளின் அடித்தனத்தையும், வாழ்வினையும்

அச்சமூட்டுவது நில மாசபாடே ஆகும். புள்ளியில் விவரங்களின் படி,





  • ஒரு வருடத்தில் 6 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பின் இழப்பு

  • ஒரு வருடத்தில் 24 மில்லியன் டன் மேல்புர மண் அரிப்பு ஏற்படுகிறது

  • ஒரு வருடத்தில் 15 மில்லியன் ஏக்கர் வேளாண் விளைநிலங்கள் அதிகபட்ட பயன்பாட்டிலும் தரமற்ற மேலாண்மையினாலும் இழக்கப்படுகின்றது

  • பாலைவனமாக மாறும் நிலங்கள் மூலம் 16 மில்லியன் சதுர மைல் அளவு உலகின் நிலப்பரப்பு இழக்கப்படுகின்றது



இரண்டு வகையான முறையற்ற செயல்பாட்டால் நிலங்கள் / மண்கள் வீணாகிறது. அவை பின்வருமாறு :

1.ஆரோக்கியமற்ற மண் மேம்பாட்டு முறைகள் :


 


  • முறையற்ற உழவினால் மண்ணின் தன்மை வீணாகுதல்

  • அங்ககம் பொருட்களின் நிலையற்ற விகிதம் அதாவது நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் போன்ற அங்ககப் பொருட்களின் விகிதம் நிலையற்று இருப்பதினால் மண்ணின் செழுமை மாறுவதோடு மட்டுமல்லாமல், பாலைவன மண்ணாக மாறுதல்

  • ஊட்டப்பொருள் (அ) சத்துப்பொருட்கள் மண்ணில் முறையற்ற பாதுகாப்பில் இருக்கும் போது, செயற்கை உரங்களானது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இந்த உரங்கள் உயிற்சிதைவற்ற நிலையிலிருப்பதால் இவைகள் மண்ணில் குவிகின்றது. இவை மண்ணிலுள்ள உயிரணுக்களான பாக்டீரியா, பூசணங்கள் மற்றும் பிற உணிரணுக்களை அழிக்கிறது

  • மண்ணின் அமிலத்தன்மையின் முறையற்ற பாதுகாப்பினால் பயிரப்படும் வெவ்வேறு பயிர்களின் தன்மையை பாதிக்கிறது. இதுமட்டுமல்லாமல் மண்ணின் கனிமங்களின் தன்மையை குறைக்கிறது. அதிக அமிலமுள்ள மண்ணில் கனிமங்கள் கரையத்தக்க நிலையிலிருப்பதால் மழைக்காலத்தில் அவை கரைந்து மழைநீருடன் சென்றுவிடுகிறது. களர் மண்ணில் கனிமங்கள் கரைக்க முடியாத தன்மையில் இருப்பதால் கலப்பு அங்ககப் பொருட்களை உறிஞ்சும் தன்மையற்று காணப்படுகிறது



2. முறையற்ற நீர்பாசன முறைகள் :





  • குறைவான வடிதல் தன்மையுடைய மண்ணின் நிலையால் மண்ணில் உப்பு படிதல் அதிகமாகி உவர்நிலையை அதிகரிக்கிறது. இதனால் பயிர்களின் வளர்ச்சிகள் பாதிப்பது மட்டுமல்லாமல் பயிர்களை அழைக்கிறது.

  • நீர் பாசனமற்ற நிலமானது குவிக்கப்பட்டிருக்கும் வேளாண்மை பயன்பாட பொருள்களை பண்படுத்துவதில்லை. இதனால் நிலத்தின் நச்சுத்தன்மை அதிகரிக்கிறது

  • சரியற்ற நீர்பாசனமானது மண்ணின் ஈரத்தன்மையை குறைப்பதுடன் தாதுக்களின் கரைப்பானில் பற்றாக்குறை ஏற்படுகிறது



ஆதாரங்கள் மற்றும் முறைகள் :


நிலத்தின் மாசுபாட்டிற்கு கீழ்கண்டவை முக்கிய ஆதாரமாக நிகழ்கிறது. அவைகளின் வகைகள் பின்வருமாறு.


  • வேளாண்மை

  • சுரங்கம் மற்றும் கற்சுரங்கம்

  • கழிவு தேக்கம்

  • கழிவு நீரோட்டம்

  • வீட்டுமனைகள்

  • தகர்ப்பு மற்றும் கட்டுமானம்

  • தொழிற்சாலைகள்



மண் / நிலம் மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள் :



மண் மற்றும் நீர் மாசுபாடு :





  • இரத்த புற்றுநோயை உள்ளடக்கிய புற்றுநோய்களுக்கு காரணமாக அமைதல்

  • குழந்தைகளின் மூளைக்கு பாதிப்பாக அமைதல்

  • பாதரசமானது சிறுநீரக சேதத்தையும், சைக்கலோடைனஸ் கல்லீரலில் நச்சுத்தன்மையையும் அதிகரிக்கிறது

  • நரம்பு தசையில் அடைப்பு ஏற்படுதல் மற்றும் மத்திய நரம்பு இயக்கத்தில் ஒருவித பதற்ற அழுத்தம் ஏற்படுதல்

  • தலைவலி, குமட்டல், களைப்பு, கண் எரிச்சல் மற்றும் தோல் நோய் ஏற்படுதல்



மற்றவை :





  • பாதிக்கப்பட்ட மண்ணுடன் நேரடியாக (பூங்கா, பள்ளி போன்றவற்றை பயன்படுத்துதல்) அல்லது மறைமுகமாக (ஆவியாகுதல்) போன்றவற்றுடன் தொடர்பு

  • மண் மாசுபாடு என்பது நீர் மாசுபாட்டின் இரண்டாம் நிலை மற்றும் காற்று மாசுபாட்டின் படிதல் (எ-டு - அமில மழை)

  • மாசுபாடுடைந்த மண்ணில் பயிர்கள் விளைவிக்கப்படுவதால் உணவு பாதுகாப்பில் பிரச்சனைகள் ஏற்படுதல்

  • இது நீருடன் தொடர்புடையவையாகும். நீரில் பாதிப்பு இருக்கும் போது மண்ணானது மாசுபடுகிறது



மண் மாசுபாட்டினால் விலங்குகளுக்கு ஏற்படும் விளைவு :





  • நுண்ணுயிர்களின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் கணுக்காலிகள் போன்றவையானது மண்ணின் சூழ்நிலையை பொருத்து மாறுபடும். இவை முதல்நிலை உணவு சங்கிலியின் சில பகுதிகளை அழித்து மற்ற விலங்குகளை உண்ணும் விலங்கு இனங்களுக்கு எதிர்மறை விளைவாக அமைகிறது

  • சிறிய விலங்குகள் நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயன உணவுகளை உட்கொள்ளும்போது இந்த உணவு சங்கிலி, பெரிய விலங்குகள் வரை பாதிக்கிறது. இதனால் இவைகளின் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிக்கிறது.



மண் மாசுபாட்டினால் மரங்கள் மற்றும் தாவரங்களில் ஏற்படும் விளைவு :





  • தாவரங்களில் வளர்சிதை மாற்றத்தில் மாறுபட்டு மற்றும் விளைச்சலில் குறைவு

  • மரங்கள் மற்றும் தாவரங்கள் மண்ணின் நச்சுத் தன்மையை உறிஞ்சி உணவு சங்கிலி வரை அதன் நச்சுதன்மையை கொண்டு வருதல்



உப்புத்தன்மையுடை மண் :

மண்ணின் உப்புத்தன்மையை அதிகரிப்பதால் மண்ணின் தன்மையானது பாதிக்கப்படுகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பற்றாக்குறையாக உள்ள சாக்கடை வசதிகள் மற்றும் நல்ல பாசனவசதி உள்ள பகுதிகளில் உப்பானது எளிதாக மண்ணின் மேற்புரத்தில் படிகிறது. மண்ணில் அடிப்புறத்திலுள்ள உப்பானது கோடை காலத்தின் போது ஏற்படும் வெடிப்பில் மேலே வந்து மண்ணின் மேற்புரத்தில் படிகிறது. குறைந்த வடிகால் வசதியுடன் இந்நிலையில் தீவிர சாகுபடி மேற்கொள்ளும் போது மண்ணின் உவர்தன்மையானது அதிகரிக்கிறது.

நம் நாட்டில் உவர் நிலமானது 6 மில்லியன் ஹெக்டேராகும் பஞ்சாப்பில் மட்டும் 6000-8000 ஹெக்டேர்களாகும். உலகின் வறண்ட மற்றும் வறண்ட பகுதியில் 6 ல் ஒரு பகுதி அதிக உவர்தன்மையை கொண்டிருக்கும்.

சில மண் மாசுக்கள் மற்றும் அதன் தாக்கங்கள் :





  • ஃபுளோரைட்ஸ்:



பச்சையத்திலுள்ள மாங்கனீசுடன் ஃபுளோரைட்ஸ் இணைந்து ஒளித்தொகுப்பினை தடுக்கிறது. இதனால் இலைகள் மற்றும் காய்கள் உதிர்ந்து விடுகிறது. ஃபுளோரைடு மாசுபாட்டிற்கு மக்காச் சோளம் எளிதில் பாதிக்கக்கூடிய பயிராகும். இவற்றின் தாக்கத்தால் மனிதர்களின் பற்களில் கறை எற்படும். எலும்பு ஃபுளோரைட்ஸினால் வழுவற்ற எலும்பு படகு போன்ற அமைப்பு மற்றும் வளைந்த முழங்கால் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.





  • தழைச்சத்து உரமிடுதல் (நைட்ரேட்ஸ் + நைட்ரைடு) :



நச்சுத்தன்மையானது இலைகள் மற்றும் பழங்கள் மூலம் உணவு சங்கிலியில் நுழைகிறது. பாக்டீரியாக்கள் உணவுப் பாதையில் நைட்ரேட்ஸை நைட்ரைட்டாக மாற்றுகிறது. பின்னர் இவை இரத்தத்தில் நுழைந்து ஹீமோகுளோபினுடன் இணைந்து மெட்டா ஹீமோகுளோபினை உருவாக்குகிறது. இதனால் ஆக்ஸிஜனின் கடத்தும் திறமானது குறைகிறது. இதன் தாக்கத்தால் மெத்தனமோகுளோபிநீமியா என்ற நோயின் தாக்கம் அதிகரிக்கிறது. மேலும் இந்த நோயினால் குழந்தைகளின் நிறம் நீலமாக மாறுகிறது. இந்த நைட்ரேட் நச்சுக்களின் போது மெத்தலின் புளு என்ற மருந்தினை ஊசியின் மூலம் குழந்தைகளுக்கு செலுத்தப்படாமலிருந்தால் உயிர் சேதம் ஏற்படும். மேலும் இவை மனிதர்களை தாக்கும் பொழுது மூச்சுத்தினறல் ஏற்படும்.





  • களைக் கொல்லிகள் :



இவைகள் வளர்ச்சிதை மாற்றத்தை தடுப்பதனால் ஒளிச்சேர்க்கையானது தடுக்கப்பட்டு மற்ற வளர்ச்சிதை மாற்ற செயல்களானது தாவரங்களை அழித்து விடுகின்றது. சில தருணங்களில் போலியம் (phloem) திசுவானது அங்கக உணவினை தடுப்பதால் பயிரானது அழிந்து விடுகிறது.

மாசு கட்டுப்பாடு :

காற்று வழி தெளிப்பான் :





  • பெட்ரோல் பொருட்களிள் வெடிக்கும் தன்மையை குறைப்பதால் அவை மண்ணினால் உறிஞ்சப்படுகிறது. இவை நிலத்தடிநீரில்படிந்து பாதிப்பினை தடுக்கும் தடுப்பான் இவை நிலகீழ் பகுதியில் அமைந்து பின்னர் இவை கரையும் தன்மையிலிருந்து நீராவி பகுதிக்கு செல்கிறது.



வேளாண் நடவடிக்கைகள் மூலம் மண் மாசு கட்டுப்பாடு :





  • பூச்சிக் கொல்லியின் பயன்பாட்டை குறைத்தல்

  • சரியான அளவில் உரத்தினை பயன்படுத்துதல்

  • பயிர் விளைச்சல் நுட்பத்தினை அதிகரிப்பதன் மூலம் களை வளர்ச்சியை தடுத்தல்

  • தனிப்பட்ட ஒரு குழியில் தேவையற்ற பொருட்களை குவித்தல்

  • மேய்தலை கட்டுப்படுத்துதல் மற்றும் வனமேம்பாடு

  • காற்று அரிப்பினை தடுக்க காற்று தடுப்பான் அல்லது கவசத்தினை அமல்படுத்துதல்

  • மண் அரிப்பினை தடுக்க அணை மற்றும் சரிவு பகுதியில் மண் கட்டமைப்பு தாவரங்கள் அல்லது புற்களை வளர்த்தல்

  • காடு வளர்ப்பு மற்றும் மீண்டும் வன வளர்ப்பு


நன்றி -RADO

Thursday, October 6, 2011

காற்று மாசுபடுதல்















Industrial Pollution
Air Pollution

தொழிற்சாலை மாசுபாடு



மின் உற்பத்தி






காற்று வெளி மாசுபாடு என்பது வளிமண்டல பகுதியில் ஏற்படும் சீர் குலைவின் அறிகுறியாகும். இதன் சுருக்கம் பின்வருமாறு :





  • வளிமண்டலத்தில் அதிகமாக வெளியேற்றப்படும் வாயுக்கள்

  • வேதிப் பொருட்களின் செறிவு நிலை

  • பல்வேறு / வெவ்வேறு நடவடிக்கைகள் மூலம் சிதறும் / வீணாகும் தன்மையானது உட்கொள்ளும் தன்மையை விட குறைவாகவே உள்ளது (கார்பன் மற்றும் நைட்ரஜன் சுழற்சி)

  • புதிய வேதி வினையின் எதிர் செயல் மற்றும் உயிர் சிதைவற்ற பிரிவின் தோற்றம்

  • உலக வெப்பமயமாதல் அமில் மழை, புகை மூட்டப்பனி, ஓசோன் செறிதளர்வு போன்றவை காற்று வெளி மாசுபாட்டின் தாக்கமாகும்.



















சிமெண்ட் தொழிற்சாலை மாசுபாடு



வாகன மாசுபாடு



கார் / கரி எண்ணெயின் வெப்பம்




நம் தினசரி வாழ்க்கையுடன் கார்பன் மற்றும் நைட்ரஜன் சுழற்சியானது தொடர்புடையதாகும். இந்த இரண்டு சுழற்சியும் மிக முக்கியமானதாகும். இவை நம் பூமியில் கார்பன் மற்றும் நைட்ரஜன் போன்றவற்றின் தொகுப்பினை ஒழுங்குபடுத்துகிறது.


ஆதாரங்கள் மற்றும் முறைகள்
முக்கிய ஆதாரங்கள் கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது.





  • மோட்டார் வாகனத்தின் புகை

  • வெப்பம் மற்றும் மின் உற்பத்தி வசதிகள்

  • தொழிற்சாலை இயக்கமுறை

  • வாகன தயாரிப்பு

  • உரங்களின் தொகுதி

  • கட்டிடத் தகர்ப்பு

  • திடக் கழிவு மாசுபாடு

  • திரவத்தின் நீராவி

  • எரிமலை குழம்பு

  • எரி பொருள் உற்பத்தி

  • சாலை கட்டமைப்பு

  • மின்சார உறுப்பு உற்பத்தி

  • உலோகம் பிரித்தெடுத்தல்

  • காட்டுத் தீ

  • வேளாண்மை



காற்று வளி மாசுபாட்டினால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவு :





  • இந்த மாசுபாட்டினால் மனிதர்களில் உடலளவில் மட்டுமல்லாமல் மனதளவிலும், நடத்தையிலும் சீர்குலைவு ஏற்படுகிறது

  • நுரையீரல் செயல்பாட்டை குறைத்தல்

  • கண்கள், மூக்கு, வாய் மற்றும் தொண்டையில் எரிச்சல்

  • ஆஸ்த்மா (அ) மூச்சிரைப்பு நோய் வருதல்

  • இருமல் மற்றும் சுவாச சம்பந்தப்பட்ட நோய்களின் அறிகுறிகள்



காற்று வெளி மாசுபாடு




  • சுவாச மண்டலத்தின் நோயான மார்பு சளியை அதிகரித்தல்

  • செயற்திறனின் அளவினை குறைத்தல்

  • தலைவலி மற்றும் தலைச்சுற்றல்

  • அகச்சுரப்பித் தொகுதி, இனப்பெருக்கத்தொகுதி மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் முறைமையை பாதித்தல்

  • நரம்பு நடத்தையில் பாதிப்பு

  • இரத்த நாடியில் பாதிப்பு

  • புற்றுநோய்

  • முதிர்ச்சியற்ற இறப்பு



காற்று வளி மாசுபாட்டினால் விலங்குகளுக்கு ஏற்படும் விளைவு :





  • ஏரிகள் மற்றும் ஓடைகளில் வாழும் மீன்கள் அமில மழையினால் பாதிக்கப்பட்டு சுவாசிக்க வழியில்லாமல் இறக்கின்றது.

  • காற்று மாசுபாட்டினால் வளிமண்டல ஓசோன் படலத்தின் மேல் படலத்தில் தாக்கம் ஏற்படும் அதிகப்படியான புறஊதாக்கதிர்கள் சூரியனிடமிருந்து புவிக்கு வருவதால் உலகளவில் தோல் புற்றுநோய் ஏற்படுகிறது

  • ஓசோனின் கீழ் படலத்தில் சீர்குலைவு ஏற்படும் போது விலங்குகளின் நுரையீரல் திசுவானது பாதிக்கப்படுகிறது



காற்று மாசுபடுதலினால் மரங்கள் மற்றும் தாவரங்களில் ஏற்படும் விளைவுகள் :











Air Pollution

Air Pollution

அமில மழையினால் அழியும் மரங்கள்





  • அமில மழையினால் மரங்கள் அழிந்து தாவரங்களின் இலைகள் அழிந்து மற்றும் மண்ணினை உரங்கள் மற்றும் வளர்ச்சிக்கு உகந்தற்றதாக மாற்றுகிறது

  • ஓசோன் படலத்தில் ஏற்படும் ஓட்டையினால் சூரியனிடமிருந்து வரும் புறஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகரித்து மரங்கள் மற்றும் தாவரங்கள் அழிந்துவிடுகின்றது

  • ஓசோனின் கீழ் படலம் பாதிக்கப்படுவதால் தாவரங்களில் சுவாசம் தடைசெய்யப்படுவதோடு மட்டுமல்லாமல் தாவரங்களின் ஒளிச்சேர்க்கையை தாக்குதலால், தாவரங்களின் வளர்ச்சி தடுக்கப்படுகிறது. மேலும் இவை தாவரங்களின் திசுக்களை நேரடியாக அழிக்கிறது



காற்று மாசுக்கள்
காற்று மாசுபட காரணமான வாயுக்கள்
காற்று மாசுபட காரணமான முக்கியமான வாயுக்களின் வகைகள் பின்வருமாறு:





  • சல்பர் - டை - ஆக்ஸைடு (SO2)

  • நைட்ரஜனின் ஆக்ஸைடுகள் (NOX = NO + NO2)

  • ஓசோன் (O3)



சல்பர் - டை - ஆக்ஸைடு மற்றும் நைட்ரிக் ஆக்ஸைடு போன்றவை முதன்மை நிலை காற்று மாசுபடுத்திகளாகும். ஓசோன் இரண்டாம் நிலை காற்று மாசுபடுத்திகளாகும்.
நைட்ரஜன் - டை - ஆக்ஸைடு, முதன்மை மற்றும் இரண்டாம் நிலை மாசுபடுத்தியாகும்.
SO2 - ன் ஆதாரங்கள்





  • ஆற்றல் உற்பத்தி



- மின் உற்பத்தி
- பெட்ரோலியத்தை துரிதப்படுத்துதல்
- மற்ற எரியக்கூடிய பொருட்கள்





  • வாணிகம் மற்றும் குடியிருப்பு பயன்பாடு

  • தொழிற்சாலை பயன்பாட்டிற்கு எரிக்கப்படும் பொருள்

  • உற்பத்தி இயக்குமுறை

  • தொல்லுயிர் எச்ச எரிபொருட்களை பிரித்தெடுத்தல் மற்றும் விநியோகம் செய்தல்

  • போக்குவரத்து



- சாலை போக்குவரத்து
- மற்ற போக்குவரத்து (விமானம், கப்பல், இரயில்கள்)
எரிபொருள் மட்டும் கொஞ்ச நைட்ரஜனை உற்பத்தி செய்கிறது. (எடுத்துக்காட்டாக, எண்ணெய் மற்றும் நிலக்கரியில் - 0.5 - 1.5% நைட்ரஜன் உள்ளது) எரிவாயுவில் நைட்ரஜனின் தன்மை எரிபொருளை விட குறைவாகவே உள்ளது. வளிமண்டல நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன்கள் எரிக்கும் அறையில் வினைபுரிந்து பெரும்பாலான நைட்ரஜன் ஆக்ஸைடுகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
நைட்ரஜன் ஆக்ஸைடுகள்





  • நைட்ரிக் ஆக்ஸைடு (NO) அல்லது நைட்ரஜன் மோனாக்சைடு மற்றும் நைட்ரஜன் - டை - ஆக்ஸைடு (NO2) போன்ற இரண்டு முக்கிய நைட்ரஜன் ஆக்ஸைடுகளில் மொத்தம் NO க்கு சமமாகம்

  •  நைட்ரிக் ஆக்ஸைடு (NO) ஒரு நிறமற்ற வாயுவாகும். நைட்ரஜன் - டை - ஆக்ஸைடு (NO2) ஒரு பழுப்பு சிகப்பு கலந்த நிறத்தினை கொண்டும் அதிக நெடியுடனும், நாற்றத்துடனும் கொண்ட வாயுவாகும்.



ஆதாரங்கள்
1. எரிபொருட்களை எரிக்கும் போது NO2 மற்றும் NO ஆனது உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனால் 90 சதவிகித NOx எரிப்பு பொருளானது NO ஆக இருக்கும். இவை காற்றில் ஆக்ஸிஜனேற்றமடைந்து நைட்ரஜன் - டை - ஆக்ஸைடாக NO2 மாறுகிறது. ஆகையால் வளிமண்டலத்தில் NO2 - ன் சதவிகிதம் குறைவாகவே உள்ளது. இவை நேரடியாக வெளியேற்றப்படுகிறது. எஞ்சியிருப்பவை வளிமண்டலத்திலே வேதி வினையில் செயல்படுகிறது.
2. சாலை போக்குவரத்தானது பாதி நைட்ரஜன் வெளியேற்றத்தில்   பங்களிக்கிறது. இதனைத் தொடர்ந்து மின் உற்பத்தி 20%  நைட்ரஜனை வெளியேற்றுகிறது.





  • சாலை போக்குவரத்து

  • மற்ற போக்குவரத்து



3. ஆற்றல் உற்பத்தி





  • மின் உற்பத்தி

  • பெட்ரோலியத்தை துரிதப்படுத்துதல்

  • மற்ற எரியக்கூடிய பொருட்கள்



4. தொழிற்சாலை பயன்பாட்டிற்கு எரிக்கப்படும் பொருள்
5. உற்பத்தி இயக்குமுறை
6. தொல்லுயிர் எச்ச எரிபொருட்களை பிரித்தெதுத்தல் மற்றும் விநியோகம் செய்தல்
நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியேற்றத்தின் இயற்கை ஆதாரங்கள் :


Air Pollution
மண்ணிலிருந்தும் நைட்ரிக் ஆக்ஸைடு் (NO) வெளியேற்றுகிறது.



அமோனியா வெளியேற்றத்தின் ஆதாரங்கள் :


Air Pollution


அமோனியா வெளியேற்றத்திற்கு வேளாண்மை ஒரு முக்கிய ஆதாரமாகும். கால்நடை வளர்ப்பு பண்ணை மற்றும் இவற்றின் தேவையற்ற கழிவுகளிலிருந்து அதிக அளவு அமோனியா வெளியேற்றப்படுகிறது. அதிக கால்நடை கழிவுகளில் மட்கும் யூரியா மற்றும் கோழிக் கழிவுகளின் யூரிக் அமிலம் போன்றவற்றினால் அதிக அமோனியா வெளியேற்றப்படுகிறது.


Air Pollution


முக்கியமான ஆதாரங்கள் :





  • கால்நடை - 50 சதவிகித வெளியேற்றத்திற்கு பங்களிக்கிறது

  • உரமிடுதல்

  • கடல்கள்

  • தாவரங்கள்

  • அங்கக உயிரிப் பொருட்களின் எரிப்பு



கார்பன் மோனாக்ஸைடு (CO) :





  • கார்பன் சம்பந்தப்பட்ட எரிபொருட்களை எரிப்பதால் கார்பன்- டை - ஆக்ஸைடு (CO2) உற்பத்தியாகிறது

  • ஆனால் அனைத்து முழுமையாக எரிக்கப்படுதில்லை. அந்த தருணத்தில் கார்பன் மோனாக்ஸைடு (CO) உற்பத்தியாகிறது

  • மனிதர்களின் பயன்பாடான மோட்டர் வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்றவை கார்பன் மோனாக்ஸைடு வெளியேற்றத்திற்கு ஆதாரமாகும்



ஆவியாகும் கரிமச் சேர்வை (VOCs) :
ஆவியாகும் கரிமச் சேர்வை என்பது கரிமச்சேர்வை ஆவியாகி வளிமண்டலத்தில் கலக்கக்கூடியதாகும். மேலும் இவை சுத்தமான ஹைட்ரோகார்பனிலிருந்து வரும் கரிம காற்று வளி மாசுக்களையும் உள்ளடக்கியது. இவை பகுதியாக ஆக்ஸிஜனேற்றமடைந்து குளோரைன், சல்பர் அல்லது நைட்ரஜன் போன்றவற்றை உள்ளடக்கிய கரிமச் சேர்வையாகும்.
முக்கிய ஆதாரங்கள்:





  • ஓவியம் (ஆவியாகும் திரவம்)

  • எண்ணெய் உற்பத்தி (வாயு தீச்சுடர் மற்றும் வெளியேற்றம்)

  • எண்ணெய் துரிதம் (தீச்சுடம் மற்றும் நிலையற்ற வெளியேற்றம்)

  • எண்ணெய் அல்லது துரிதப்படுத்தப்படும் பொருட்களின் விநியோகம் (சேமிப்பிப்பிலிருந்து ஆவியாக்கம், வெளியேற்றப்படும் கொள்கலினால் இடப்பெயர்ச்சியில் ஏற்படும் இழப்பு)

  • உலர்ந்த சுத்தம் (துணிகள் ஈரமில்லா தன்மை)

  • மது உற்பத்தி (வடிப்பாலை மற்றும் எரிச்சாராயம்)

  • சாகுபடி பண்ணை (பயிர் வளர்ச்சி, பதப்படுத்திய பசும்புல் உற்பத்தி கழிவுநீர் படர்வு)



ஆவியாகும் கரிமச் சேர்வைக்கு (VOC) இயற்கை ஆதாரங்கள் :
VOC யின் வெளியேற்றத்திற்கு வனவியல் ஒரு முதன்மை இயற்கை ஆதாரமாகும். வெப்ப மண்டல காடுகளானது பொதுவாக பாதிக்கும் மேற்பட்ட மீத்தேனிலிருந்து VOC வெளியேற்றப்படுகிறது. தாவர தொகுப்பில் அதிக கரிம மூலக்கூறு இருக்கும். இவை வளிமண்டலத்தில் ஆவியாகும் கரிமச் சேர்வைகளை வெளியேற்றுகிறது.


ஓசோன் (O3) :
ஓசோன் என்பது;





  • படை மண்டலம் (stratosphere), இது இயற்கையாக அமைந்த வளிமண்டலத்தின் மேல் படலமாகும்.

  • அடிவளிமண்டலம் (troposphere), இயற்கையாக மற்றும் மனித இனத்தின் வெளியீட்டால் வளிமண்டலத்தில் ஏற்படும் கீழ் படலமாகும்.

  • படை மண்டலம் (stratosphere), சூரியனிடமிருந்து புவிக்கு வரும் அதிகப்படியான புறஊதாக்கதிர்களை தடுத்து இயற்கைக்கு நன்மைதரும் வகையிலுள்ளது

  • ட்ரோபோஸ்பியர் (அ) அடிவளிமண்டல், மனிதர்களிடமிருந்து வரும் முதன்மை மாசுக்களால் உருவாக்கப்பட்டதாகும். இதனடிப்படையில் இது ஒரு காற்று வளி மாசாகும்

  • இந்த அடிவளிமண்டலத்தின் முதன்மை மாசுக்கள் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் மற்றும் ஹைட்ரோகார்பன்களிடம் வினைபுரிந்து இரண்டாம் நிலை மாசுக்கள் உருவாகிறது.

  • ட்ரோபோஸ்பியர் படலம், ஒளிவேதியியல் மூடுபனியின் முக்கிய பகுதியாகும்



நிலையான கரிம வாயுககள் (POPs) :





  • நிலையான கரிம வாயுக்கள் சூழ்நிலைமண்டலத்தில் சிதைவடையாமல் நிலையாக இருக்கும் வாயுக்களாகும். இவை மண் தரத்தினை பாதியாக குறைக்கிறது

  • இதன் பகுதியுடன் டை ஆக்ஸின், ஃப்யூரான், பாலிகுளோரினேட் பைஃபினைல்ஸ் (PCB3) மற்றும் ஆர்கனோகுளோரின் பூச்சிகள் (DDT) போன்றவையும் அடங்கும்.

  • இவைகள் உணவு சங்கிலியின் வழியாக மனிதன் மற்றும் விலங்குகளின் திசுக்களில் நுழைகிறது. மேலும் இவை காற்றுத் துகளுடன் நீண்ட போக்குவரத்து தன்மையை உடையது



நிலையான கரிம மாசுக்களின் ஆதாரங்கள் :
சில POPs க்கள் பூச்சிக்கொல்லியாக பயன்படுகிறது. மற்ற POPs க்கள் தொழிற்சாலை இயக்கங்களான உற்பத்தியில் கரைப்பான், பாலிவினைல் குளோரைடாகவும் மருந்தாகவும் பயன்படுகிறது.


காற்று மாசுபாடு மேலாண்மை ஒருபார்வை :
தொழில்நுட்பம், சரியான நேர்த்தி முறையில் முன்னேற்றம் மற்றும் தொழிற்சாலை பகுதியில் மாசு கட்டுப்பாடு, மாசுபாட்டின் அளவினை தடுப்பது மற்றும் தேவையற்ற பொருட்களை பொருளாதார ரீதியில் மேம்படுத்துவது போன்றவையாகும். இவை மட்டுமல்லாமல் சுற்றுப்புறச்சூழலின் அடிப்படையில் தொழில்நுட்பத்தை பயனுள்ளதாக அமையும். வகைபாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு கீழ்கண்டவாறு பிரிக்கப்பட்டுள்ளது.


மாற்று தொழில்நுட்பம் :





  • நேர்த்தின் தற்போதைய முறையில் வெவ்வேறு சாத்தியமான செயற்கூறுகளை அளித்தல் மற்றும் மாசு கட்டுப்பாடு

  • தற்போது இருக்கும் மாற்று நுட்பங்கள்


- மண் ஆவியை பிரித்தெடுத்தல்
- உயிரி வெளியேற்றம்
- உயிரி அடுக்குகள்
- விளை நில பண்ணை
- குறைந்த தட்பவெப்ப நிலையில் வெப்பமடைந்து  ஆவியாகுதல்
- காற்று வளி தெளிப்பான்
- உயிரியல் தெளிப்பான்
- இயற்கை தளர்ச்சி
- தரைநீரில் உயிர்வழி நிவர்த்தி
- இருமுனை கட்டம் பிரித்தெடுப்பு
- கடல் நீரில் உப்பு பிரித்தெடுப்பு முறை




  • சில அறிவியலறிஞர்கள் அணு சக்தியை உருவாக்கத்தின் அடுத்த நிலையை அடைவதற்கு அணுக்களை பிளவுப்படுத்துகின்றன.



தூய்மையான தொழில்நுட்பங்கள் :





  • புதுப்பிக்கப்பட்ட ஆதாரங்கள் பல தடவை உதவுகிறது. குறைந்தபட்ச விலை இதனுள் அடங்கும். ஆபத்து விளைவிக்கக்கூடிய பொருட்களின் அதிக பயன்பாட்டை தடுத்தல்

  • தற்போது நிலவரத்திலுள்ள தூய்மையான தொழில்நுட்பங்கள் பின்வருமாறு



- நீர் ஆற்றல்
- சூரிய சக்தி
- காற்றுச் சக்தி
- புவி வெப்ப சக்தி
- அங்கக உயிரிப்பொருட்கள் ஆற்றல்
- பண்படுத்துதல்
- தாவர வளர்ப்பு
- மட்குக் குப்பை


புதுமையான / ஆக்கத்திறமையான தொழில்நுட்பங்கள் :





  • புதுமையான தொழில்நுட்பத்தினால், மாசுக்களை கட்டுப்படுத்தும் திறமானது முன்னேற்றமடைதல்

  • தற்போதுள்ள புதுமையான தொழில்நுட்பங்கள் பின்வருமாறு:



- நீர்மம் வாயுக்களை உறிஞ்சும் கருவி
- காற்று தூய்மைபடுத்துதல்
- ஆக்ஸ்ஜனேற்றமடைதல்
- நல்ல காற்றோட்டம்
- மறுவளர்த்தி
- திண்மமாக்குதல்
- மண்ணை தூய்மையாக்குதல்
- உயிரியல் பொருள்
- சிதறச் செய்யும் பொருள்
- ஆற்றல் துகள்கள்
- குளிர்விக்கும் கோபுரங்கள்


காற்று மாசு கட்டுப்பாடு :


காற்றுத் திறன்





  • காற்றிலுள்ள இயக்க ஆற்றலை விட காற்றுத்திறனின் மின்சாரத்தின் தன்மை குறைவாகும்

  • இயக்க ஆற்றலின் தன்மை, வேகம் 3 உடன் நேரடியான சமவிகிதமாகும்



காற்று ஆற்றல் உற்பத்தி :


Air Pollution


நீர் எரிபொருள் பகுதி :





  • நீர் என்பது ஆற்றலின் ஆதாரமாகும். நீரானது 12~ மின் கலத்தின் அதிக இயக்க ஆற்றல், அதிகப்படியான மின்காந்த கதிர் வீச்சின்போது ஹைட்ரஜன், ஆக்ஸிஜனை பிரித்தெடுக்கிறது

  • வாயு வெளியேற்றம் என்பது காற்றும் மற்றும் நீராவியின் கலவையால் வளிமண்டலத்தில் வெளியேற்றப்படும் வாயுவாகும்.

  • எரிபொருள் அட்டைகள், வண்டிகள், பேருந்துகள், விமானம், கப்பல்கள், மற்றும் ஆற்றல் நிலையம் போன்றவற்றின் பயன்பாடு. இதுமட்டுமல்லாமல் நிலக்கரி எண்ணெய் (அ) வாயுக்களின் ஆற்றலில் பயன்படுத்தும் கருவிகளும் அடங்கும்



இயற்கை வாயு எரிபொருள் பயன்படுத்தும் பள்ளிபேருந்து :


Air Pollution


வினையூக்கி மின்மாற்றி :





  • தானியங்கு ஊர்த்தியில் பொருத்துதல் மற்றும் தொழிற்துறைகளில் பல்வேறு வகையான வடிப்பான்கள் மற்றும் உறைப்பான்களை பொருத்துதல்

  • சிறுமணியாலான உலோகத்திற்குள் ஆவியாகும் வாயுக்கள் வினைபுரிந்து தீங்குவிளைவிக்கும் வாயுக்களை தீங்கற்றதாக மாற்றப்படுகிறது.



போக்குவரத்தின் மாற்று :





  • வாகன ஒருங்கிணைப்பு



மலேசியா அரசாங்கம் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மற்றும் ஆவியாகும் வாயுக்களின் வெளியேற்றத்தை கட்டுப்படுத்த கார்பன் - டை - ஆக்ஸைடு (CO2), கார்பன் மோனாக்ஸைடு (CO), நைட்ரஜன் ஆக்ஸைடுகள் (NO2), சல்பர் - டை - ஆக்ஸைடு (SO2), போன்றவற்றிக்காக தனிப்பட்ட நபர்களுக்கு இடையே போக்குவரத்து பரிமாற்றத்தை நடைமுறைப்படுத்துகிறது.





  • மக்கள் போக்குவரத்து



பாதாள இரயில் அல்லது ஒருமித்த இரயிலை பயன்படுத்தும்போது சுற்றுப்புறச்சூழலுடன் விரோதமற்றும் பசுமை கூடக வாயுக்களின் அளவை குறைப்பது போன்ற போக்குவரத்தினை அதிகப்படுத்துதல்


Air Pollution


மிதிவண்டி ஒரு மாற்று வழி


இயந்திரங்கள் மற்றும் வாகனங்களின் பராமரிப்பு :




  • சிறப்பான ஆற்றல்மிக்க பயன்பாட்டிற்கு தவறாமல் சோதனை செய்வது மற்றும் உதிரி பாகங்களை மாற்றுவது

  • போக்குவரத்திற்கு இயந்திரத்தில் தரம் மிக முக்கியமானதாகும் தீங்குவிளைவிக்க கூடிய இயந்திரங்களின் பயன்பாட்டை தவிர்ப்பது


எளிமையான முறையில் காற்று மாசுக்கட்டுப்பாடு :
அ. தீங்கற்ற வாயுக்களிலிருந்து மாசுக்களை பிரித்தெடுத்தல்
ஆ. வளிமண்டலத்தில் வாயுக்கள் வருதற்கு முன் மாசுக்களை மாற்றுதல், புயல் காற்று சேகரிப்பில், தற்போது தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு மாசுக்களை மாற்றுகிறது
இ. நிலக்கரியானது நிலைமாற்றம் அல்லது தெரிவிலிருந்து வாயு எரிபொருளாக மாற்றம்
ஈ. கார்பன் மோனாக்ஸைடை தக்கவைக்கும் தாவர வளர்ப்பு (ஒரு வகை கொடி, கேரட்) நைட்ரஜன் ஆக்ஸைடை தக்கவைக்கும் தாவர வளர்ப்பு மற்றும் பிற வாயுக்கள்.





நன்றி-RADO