முதல் அபிப்பிராயமே, சிறந்த அபிப்பிராயம்’ (first impression is the best impression) என்று சொல்வார்கள். அந்த அபிப்பிராயத்தை உருவாக்குவது அல்லது உடைப்பது நம்முடைய புன்னகைதான். அழகான முகத்தின் அடையாளம் புன்னகை. அந்தப் புன்னகையை அழகாக்குவது சீரான பல் வரிசைதான். ஆனால் அழகான, சீரான பல் வரிசை அனைவருக்கும் இயற்கையாக அமைவது இல்லை. சிலருக்குத் தெற்றுப்பல், எத்துப்பல்
நான் பார்த்த,படித்த எனக்கு பிடித்த செய்திகள், கட்டுரைகள்,துணுக்குகள்,வீடியோ,போட்டோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்
Monday, October 24, 2016
Saturday, September 24, 2016
கபாலம் காக்கும் டைட்டானியம் கவசம்
நகரங்களில் சாலை விபத்துகள் பெருகிவிட்டன. நமது அன்றாட வாழ்க்கையும், நம்மைச் சார்ந்திருப்பவர்களின் எதிர்காலமும் தினம் தினம் கேள்விக்குள்ளாகிக்கொண்டு இருக்கிறது. விபத்துகளால் பலருக்குக் கை, கால் மற்றும் மூட்டு எலும்பு முறிவுச் சேதங்கள் ஏற்படுகின்றன. தலையில் அடிபட்டால், கபாலச் சிதைவு ஏற்படுகிறது.
Saturday, September 10, 2016
படர்தாமரையிலிருந்து தப்பிக்க சிறந்த வழிகள்
சருமப் பிரச்னைகளில் முதன்மையானது படர்தாமரை (Ringworm). இது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் வரக்கூடியது. உடலில் எங்கு வேண்டுமானலும் வரக்கூடியது என்றாலும் பெரும்பாலும், உடலின் மறைவான பகுதிகளில் வந்து, வெளியே சொல்லவும் முடியாமல், சரியான சிகிச்சையும் எடுக்க முடியாமல் வாட்டி வதைக்கும்.
படர்தாமரை தோன்றுவதற்கான காரணம்
Friday, September 9, 2016
வலியை நீக்கும் ட்ரிகர் பாயின்ட் தெரப்பி
குழந்தைகள் விளையாடும்போது தடுக்கி விழுந்து அதனால் ஏற்படும் வலியோ, பெரிய எடையைத் தூக்கியதால் உண்டான தசைப்பிடிப்போ, விபத்துகளுக்குப் பிறகு வரும் பிரச்னையோ... எதுவாக இருந்தாலும் இருக்கவே இருக்கிறது ட்ரிகர் பாயின்ட் தெரப்பி. தசைகளில் ஏற்படும் அதிகப்படியான அழுத்தம், இறுக்கம் காரணமாக வலி ஏற்படுகிறது. மென்மையாக அழுத்தம் கொடுத்து, வலியை நீக்கும் நுட்பம்தான் ட்ரிகர் பாயின்ட். இதில், முதலில் வலி முடிச்சுகளைக் கண்டுபிடித்து, அதற்குத் தக்க அழுத்தங்கள் தரப்படும். பின்னர், அந்தத் தசைகளுக்கு ஸ்ட்ரெச் கொடுக்கப்படும். தொடர்ந்து செய்யும் பயிற்சிகளால், தசை வலுபெறும். வலியும் நீங்கும்.
Wednesday, July 20, 2016
கர்ப்பிணி பெண்கள் வெளிக்கூற தயங்கும் 7 தர்மசங்கடமான விஷயங்கள்!
அதிலும், கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாத சுழற்சியில் பெண்கள் நிறைய தர்மசங்கடமான நிகழ்வுகளை சந்திக்க நேரிடும்.
Thursday, March 31, 2016
கண்ணே நலமா?
கோடை காலத்தில் அதிகம் பரவக்கூடியது கண்களில் தொற்று. அதிக உஷ்ணத்தால், 'மெட்ராஸ் ஐ' உட்பட, பல்வேறு தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. கண்களில் தொற்று இருந்தாலும், வருவதற்கு முன்கூட முன்னெச்சரிக்கைக்காக இந்த டிப்ஸ்.
Saturday, January 16, 2016
தழும்பை மறைக்கும் லேசர் சிகிச்சை!
கல்லூரி மாணவி ஒருவருக்கு, ஆய்வு கூடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால், முகத்திலும், கழுத்திலும் காயமேற்பட்டு, சில நாட்களில் சரியானது. ஆனால், காயத்தால் ஏற்பட்ட தழும்பு மட்டும் ஆறாமல், அவரையும், அவரது பெற்றோரையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியது.இவ்வகையான காயங்களால், ஆறு மாதத்தில் தழும்பு பெரிதாவது நின்றுவிடும். இதை, 'ஹைப்பர் ட்ராபிக்' தழும்பு என்போம். ஆறு மாதங்களுக்கு பின்னும் வளர்ந்து கொண்டே செல்லும் தழும்புகளை, 'கீலாய்டு' தழும்பு என்கிறோம். இத்தகைய தழும்புகள், பாதிக்கப்பட்ட பகுதியையும் தாண்டி, சாதாரண திசுக்களிலும் பாதிப்பை ஏற்படுத்தும்.
Thursday, December 31, 2015
சர்ஜரிக்கு முன் 10 கேள்விகள்
மருத்துவர்களுக்கும் மக்களுக்குமான பிணைப்பு, இந்தியாவைப் பொறுத்தவரை மிகக் குறைவு. பெரும்பாலான இடங்களில் மருத்துவர்களும் மக்களும் சகஜமாகப் பழகுவது இல்லை. மருத்துவர்களைப் பார்த்துப் பயப்படுவதும், தெய்வமாகப் பார்ப்பதும்தான் காலங்காலமாக இங்கு நடந்துகொண்டிருக்கிறது. மக்கள்தொகைக்கு ஏற்ப டாக்டர்களின் எண்ணிக்கை இன்மை, வேலைப்பளு போன்ற காரணங்களால் மருத்துவர்களும் நோயாளிக்கு ஏற்பட்டுள்ள பிரச்னை பற்றி, விரிவாகப் பேசுவது கிடையாது. இதனால், மருத்துவம் பற்றிய புரிதலே மக்களுக்கு இருப்பது இல்லை. மருத்துவம் பற்றிய முழுமையாகத் தெரியாத நண்பர்களின் அனுபவங்களையும், கட்டுக்கதைகளையும் நம்பிக் குழம்பிவிடுகின்றனர். இதனால், சரியான நேரத்தில், சரியான சிகிச்சை எடுக்காமல், மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகின்றனர்.
Monday, December 21, 2015
முத்துப்பிள்ளை கர்ப்பம்
பெண்ணின் கரு முட்டையும், ஆணின் உயிரணுவும் சேர்ந்து உருவாவது தான் கரு. அந்த கரு சாதாரணமாக வளராமல், நஞ்சு மட்டும் அசாதாரணமாக, குட்டிக் குட்டி நீர்க்குமிழிகள் வடிவில் வளர்ந்து, திராட்சைக் கொத்து மாதிரி, கர்ப்பப்பையை நிறைத்தால், அதை, 'முத்துப்பிள்ளை கர்ப்பம்' என்கிறோம். அதாவது கட்டி மாதிரியான தோற்றம்; ஆனால் புற்றுநோயில்லாத கட்டி. முத்துப்பிள்ளை கர்ப்பத்தில், இரு வகைகள் உள்ளன. ஒன்று முழுமையானது. இன்னொன்று பகுதி மட்டும்.
Monday, November 2, 2015
மஞ்சள் காமாலை சீக்ரெட்ஸ் அறிவோம்
‘மஞ்சள் காமாலைக்கு நாட்டுமருந்துதான் பெஸ்ட். அலோபதியில் மருந்தே இல்லையாம்’ என, பத்தியச் சாப்பாட்டையும் கீழாநெல்லியையும் எடுத்துக்கொள்பவர்கள்தான் பெரும்பாலானோர். ஆங்கில மருத்துவம் மஞ்சள் காமாலையை ஒரு நோயாகவே கருதுவது இல்லை, ‘நோயின் அறிகுறி’ என்கிறது. எதன் காரணமாக மஞ்சள் காமாலை வருகிறது எனக் கண்டறிந்து, அதற்குச் சிகிச்சை எடுப்பதன் மூலம், மஞ்சள் காமாலையைக் குணப்படுத்த முடியும்.
Friday, October 16, 2015
தசைப்பிடிப்பு தடுப்பது எப்படி?
நாம் எல்லோருமே வாழ்வில் ஒருமுறையாவது தசைப்பிடிப்பால் அவதிப்பட்டிருப்போம். கடுமையாக வேலை செய்துகொண்டிருக்கும்போது, விளையாடும்போது திடீரென உடலில் எங்கேயாவது தசை பிடித்துக்கொண்டு பாடாகப்படுத்திவிடும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்படும் ஒரு முக்கியப் பிரச்னை, தசைப்பிடிப்பு!
தசைப்பிடிப்பு என்றால் என்ன?
Tuesday, September 15, 2015
தசைநார் கிழிவு... தடுப்பது எளிது!
அலுவகத்திலிருந்து ஆட்டோ ஸ்டாண்டுக்குச் சென்றுகொண்டிருந்தார் ஸ்ருதி. சாலையில், வாழைப்பழத் தோல் கிடக்கவே, அதன் மீது கால் வைக்காமல் இருக்க, சற்றுத் தள்ளி காலை வைத்தபோது, தடுமாறி விழுந்தார். கணுக்காலில் பயங்கர வலி. மருத்துவமனைக்குப் போனபோது, டாக்டர், ‘‘கணுக்கால் மூட்டுக்கு அருகில் தசைநார் (லிகமென்ட்) கிழிந்துவிட்டது. குணமாக ஒரு மாதம் ஆகும். அதுவரை நடக்கக் கூடாது. மீறினால், எலும்பில் முறிவு ஏற்படலாம்” என்றார். தசைநார் எப்படிக் கிழியும் எனக் குழம்பினார் ஸ்ருதி.
தசைநார் (லிகமென்ட்)
Monday, August 31, 2015
மூலம் உண்மை அறிவோம்!
பஸ் நிறுத்தங்கள், மின்சாரம் மற்றும் டெலிபோன் கம்பங்கள், பொதுக் கழிப்பிடங்கள் என ஊரெங்கும் பல வண்ணங்களில் ஒட்டப்பட்டிருக்கும் மூல நோய் பிட் நோட்டீஸ்களைப் பார்த்திருப்போம். பிற நோய்களைப் போல வெளிப்படையாகச் சொல்ல முடியாத நோயாக மூல நோய் இருக்கிறது. மூலத்தால் பாதிக்கப்பட்டவரைப் பரிகசிப்பதும் ஆங்காங்கே நடக்கத்தான் செய்கிறது. இதனால், பிறரிடம் சொல்லத் தயங்கி ஏதேதோ வைத்தியங்களை மேற்கொண்டு உடலை மேலும் மோசமாக்கிக்கொள்கிறார்கள் சிலர். நம் மக்களிடம் பரவியுள்ள மூலம் பற்றிய தவறான நம்பிக்கைகளையும் மூல நோய் பற்றிய விரிவான மருத்துவத் தகவல்களையும் பகிர்கிறார் இரைப்பை மற்றும் குடல் நோய் அறுவைசிகிச்சை நிபுணர் கண்ணன்.
Monday, July 27, 2015
விழிப்புடன் இருப்போம்! விழித்திரை காப்போம்!
சர்க்கரை நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவில்லை எனில், அது நரம்புமண்டலம், ரத்தக் குழாய், சிறுநீரகம், இதயம் என உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பையும் பாதிக்கும். சர்க்கரை அளவு அதிகரிப்பால் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும்போது, அதை டயாபடீக் நியூரோபதி என்றும், சிறுநீரகம் பாதிக்கப்படும்போது டயாபடீக் நெப்ரோபதி என்றும், கண்கள் பாதிக்கப்படும்போது டயாபடீக் ரெட்டினோபதி என்றும் அழைக்கிறோம்.
Saturday, July 18, 2015
கண் நீர்அழுத்த நோய் வருவது ஏன்?
பார்வை இழப்புக்குக் கண் புரை நோய், விழித்திரை நோய் எனப் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றில் ‘கிளாக்கோமா’ (Glaucoma) என்று அழைக்கப்படும் கண் நீர் அழுத்த நோய் மூன்றாம் இடத்தில் இருக்கிறது. கண் புரையைத் தெரிந்துவைத்திருக்கிற அளவுக்குக் கண் நீர்அழுத்த நோயைப் பற்றி, பலருக்கும் பெரிதாகத் தெரிவதில்லை. இந்த நோயின் ஆரம்பத்தில் கண்ணில் வலி இருக்காது என்பதால், பெரும்பாலானோர் இதை ஆரம்ப நிலையில் கவனிக்கத் தவறிவிடுகின்றனர். பார்வை பறிபோனபின்தான் சிகிச்சைக்கு வருகின்றனர்.
கண் நீர்அழுத்த நோய் என்பது எது?
Friday, July 17, 2015
மூட்டு சவ்வுப் பிரச்னைக்கு ஸ்டெம் செல் சிகிச்சை

மூட்டுவலியை இளைய வயதினருக்கு வருவது, முதியவர்களுக்கு வருவது என இரண்டாகப் பிரிக்கிறது மருத்துவம். முதியவர்களுக்கு வயதின் காரணமாக மூட்டு தேய்ந்து மூட்டுவலி வருகிறது என்றால், இளம் வயதினருக்கு மூட்டுப் பிரச்னை வருவதற்கு முக்கிய காரணம், விளையாட்டு. போதுமான ஆரம்ப கட்ட பயிற்சிகளைச் செய்யாமல் திடீரென கடுமையாக விளையாடும்போது மூட்டில் கார்ட்டிலேஜ் எனும் குருத்தெலும்பு பாதிக்கப்படும். கார்ட்டிலேஜ் என்பது மூட்டின் முனையில் உள்ள சவ்வு. மூட்டுகள் அசையும்போது அதிர்வுகளைத் தாங்கவும், உராய்வைத் தடுக்கவும் இது உதவுகிறது. விபத்து, காயங்கள், முறையற்ற பயிற்சிகள் போன்றவற்றால் இது பாதிக்கப்படும்போது மூட்டில் வலி ஏற்படும். இதற்கு மருந்து, மாத்திரை, பிசியோதெரபி, லேப்ராஸ்கோப்
Wednesday, July 15, 2015
சங்கடங்கள் இல்லாத ஸ்மைல் சிகிச்சை!
பார்வைக் குறைபாட்டை கண்ணாடி அணிந்துதான் சமாளித்தாக வேண்டும் என்ற சம்பிரதாயத்தை மாற்றியது லேஸிக் சிகிச்சை முறை. கண்ணாடியில் பவர் சேர்த்து சரி செய்யப்படும் பார்வைக் குறைபாட்டை, கருவிழியின் அடர்த்தியைக் குறைத்து சரி செய்யும் லேஸர் சிகிச்சைக்கு உலகமெங்கும் வரவேற்பு இருந்து வருகிறது. அதிலும், கண்ணாடி அணிய விரும்பாத இளம் தலைமுறையினருக்கு இது பிடித்தமான சிகிச்சையாகவும் இருந்து வருகிறது. இதன் அடுத்த கட்டமாக அறிமுகமாகியிருக்கிறது ஸ்மைல் (Small Incision Lenticule Extraction) என்ற நவீன சிகிச்சை. ஸ்மைல் சிகிச்சையில் அப்படியென்ன ஸ்பெஷல்? கண் சிகிச்சை
Tuesday, July 14, 2015
செயற்கை தசை தயார்! தசை சிதைவு நோய்க்கு குட்பை
'உரிக்க உரிக்க ஒன்றுமே இல்லை' என்பார்கள் வெங்காயத்தை! ஆனால் அந்த வெங்காயத்திலிருந்து மனிதர்களுக்கும் ரோபோக்களுக்கும் தேவையான தசையை செயற்கையாகத் தயாரிக்கலாம் என்று கண்டுபிடித்துள்ளது மருத்துவ விஞ்ஞானம். இந்த அதிசயத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு, நம் தசைகளின் அனாடமியைத் தெரிந்து கொள்வோம்... நம் உடலின் பலத்துக்கும் இயக்கத்துக்கும் ஆதாரத் திசுக்களாக இருப்பவை தசைகள். கொலாஜன் மற்றும் எலாஸ்டின் புரதங்களால் ஆன நாண்களின் தொகுப்பு இவை. நம் உடலில் சிறிதும் பெரிதுமாக 700க்கும் மேற்பட்ட தசைகள் உள்ளன. இடுப்பில்
Sunday, June 21, 2015
அட்ரினல் சுரப்பி
அட்ரினல் சுரப்பி
அட்ரினல் என்ற வார்த்தைக்கு, சிறுநீரகத்துக்கு அருகில் என்று பொருள். இரண்டு சிறுநீரகங்களுக்கு மேற்பகுதியில் தொப்பி போன்று அமைந்திருக்கிறது இந்தச் சுரப்பி. உருவத்திலும் எடையிலும் மிகச் சிறியதாக இருந்தாலும், உடலில் ஏற்படும் பல்வேறு மாற்றங்களுக்குப் பெரிதும் துணைபுரிகிறது. அட்ரினல் சுரப்பியின் உட்பகுதி ‘அட்ரினல் மெடுலா’ என்றும், சுற்றுப்புறப்பகுதி ‘அட்ரினல் கார்டெக்ஸ்’ என்றும் அழைக்கப்படுகின்றன.
மெடுலா பகுதியில் இருந்து கேட்டேகொலோமின்ஸ் (Catecholamines) என்ற ஹார்மோன் சுரக்கிறது. அட்ரினல் சுரப்பியின் சுற்றுப்புறப் பகுதியில் மூன்று விதமான அடுக்குகள் உள்ளன. ஒவ்வோர் அடுக்கிலும் வெவ்வேறு ஹார்மோன்கள் சுரக்கின்றன. அட்ரினல் கார்டெக்ஸ் வெளிப்புற அடுக்கு ‘ஜோனா குலோமெருலோசா’ (Zona glomerulosa) சுரப்பி, இரண்டாவது அடுக்கு ஜோனா ஃபாசிகுலாட்டா (Zona fasciculata) சுரப்பி, உள் அடுக்கு ஜோனா ரெட்டிகுலாரிசிஸ் (Zona reticularis) சுரப்பி.
Saturday, June 20, 2015
தடுப்பூசி ரகசியங்கள் - 25 தடுப்பூசி அட்டவணை
அந்தக் காலத்தில் குணப்படுத்த முடியாத கொடிய நோயான பெரியம்மை (Small pox), ஒரே நேரத்தில் பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பலி வாங்கிக் கொண்டிருந்தது. பெரியம்மை நோயை உண்டாக்கும் ‘வெரியோலா’ என்ற வைரஸை, தோலில் செலுத்தி, நோய்த் தடுப்பை ஏற்படுத்திக் கொண்டிருந்தனர். ஆங்கிலத்தில் ‘இனாகுலேஷன்’ என்று அழைக்கப்படும் இந்தத் தடுப்புமுறை அப்போது பிரபலம். ஆனால், இதில் பல ஆபத்தான பக்கவிளைவுகளும் இருந்தன. எனவே, இங்கிலாந்து மருத்துவர் எட்வர்ட் ஜென்னர், பெரியம்மையைத் தடுக்கும் வைரஸைச் செலுத்துவதற்குப் பதிலாக, பசுக்களுக்கு அம்மை நோயை ஏற்படுத்துகிற ‘கௌ பாக்ஸ்’ வைரஸைச் செலுத்தி, புது மாதிரியான தடுப்பு முறையைக் கண்டுபிடித்தார். இந்த தடுப்பு முறைக்கு ‘வேக்சினேஷன்’ என்று பெயரிட்டார். உலக அளவில் முறையான தடுப்பு மருத்துவத்தின் தொடக்கம் இதுதான்.