Showing posts with label மகளிர். Show all posts
Showing posts with label மகளிர். Show all posts

Tuesday, October 25, 2016

பீரியட்ஸ் பில்ஸ் சரியா? தப்பா?

மிக முக்கியமான திருமணம், கோயில் திருவிழா, சுற்றுலா, குடும்ப விழாக்கள்... என விசேஷ நாட்கள் வரும்போதெல்லாம்,  ஏதாவது ஒரு நிகழ்ச்சிக்கு திட்டமிடும்போது எல்லாம் பெண்கள் வேகமாய் காலண்டரைப் புரட்டுவார்கள். முக்கியமான நாட்களில் மாதவிலக்கு வந்துவிட்டால் என்ன செய்வது என்ற பதற்றமும் பரபரப்பும் அவர்களிடம் தொற்றிக்கொள்ளும். இதுவே, அவர்களுக்கு ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடும்.

Thursday, October 20, 2016

நம் ஆரோக்கியம் நம் கையில்!

ணவர் குழந்தைகள் சாப்பிடுவதை கண்காணிக்கும் பெண்கள், தங்களுடைய உணவில்... குறிப்பாக, காலை உணவில் ஏன் அத்தனை கவனமாக இருப்பதில்லை?' என்ற கேள்வியுடன் காலை உணவு

Tuesday, October 18, 2016

Breast cancer - மிரட்டும் மார்பக புற்றுநோய்!

தவிர்க்க... தப்பிக்க..

.அக்டோபர் - மார்பகப் புற்றுநோய் விழிப்பு உணர்வு மாதம்

 

பெண்களை மிரட்டும் நோய்களில் உலகளவில் முதன்மையானது மார்பகப் புற்றுநோய். இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 80,000 பெண்களுக்கு மேல் மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதில் 50 சதவிகிதம் பேர் மரணத்தைத் தழுவுகின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள். ‘இது நமக்கெல்லாம் வராது’ என்று நினைக்கும் பெண்களின் அறியாமையே, இறப்பு விகிதம் அதிகரிக்க முக்கியக் காரணம்.

ஏன் ஏற்படுகிறது?


மார்பகப் புற்றுநோய் ஏன் ஏற்படுகின்றது என்பதற்கு தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை. செல்களின் ஏற்படக்கூடிய இயல்புக்கு மீறிய, அபரிமிதமான வளர்ச்சியையே புற்றுநோய் என்கிறோம். ஆரம்பத்தில் மார்பக செல்லில் தோன்றிய மாற்றம், நிணநீர் முடிச்சு வழியாக உடலில் எங்குவேண்டுமானாலும் பரவலாம்.  பொதுவாக மார்பகப் புற்றுநோய் ஆரம்பத்தில் பால் சுரப்பிகளில் ஏற்படுகிறது. மற்ற செல்களிலும் ஏற்படலாம்.

 

யாருக்கெல்லாம் வர அதிக வாய்ப்புள்ளது?

Tuesday, September 27, 2016

கர்ப்பப்பை வாய் பரிசோதனை அவசியம்

கர்ப்பப்பையில் தொற்றுகள், வெள்ளை படுதல் போன்ற பிரச்னைகள் தொடர்ந்து இருந்தால் அதை அலட்சியப்படுத்தக் கூடாது. கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மரபு ரீதியில் வருவதற்கு வாய்ப்புகள் இல்லை. அறிகுறிகள் இருந்தால் தான், பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்

Monday, September 26, 2016

ஃபோலிக் ஆசிட் மாத்திரைகள்... பெண்களுக்கு அவசியம்!

பொதுவாக, கர்ப்பம் தரித்த பெண் களுக்கு மருத்துவர் வழங்கும் மாத்திரை ஃபோலிக் ஆசிட். இதை திருமணம் முடிந்த நாளில் இருந்தே அந்தப் பெண் எடுத்துக்கொள்ளலாம். வெளிநாடுகளில் நிச்சயதார்த்தம் முடிந்ததில் இருந்தே பெண்கள் எடுத்துக்கொள்கிறார்கள். காரணம், கரு

Monday, August 1, 2016

இறைவியே நலமா?

இல்லத்தரசிகள் ஹெல்த் கைடு

டயட் உடற்பயிற்சி ஓய்வு

 

ஃபேஸ்புக், வாட்ஸ்அப்பில் உலாவும் பிரபல வீடியோ ஒன்று... ஒருவரிடம், “உங்கள் மனைவி என்ன செய்கிறார்?” என்று கேட்கிறார்கள். அதற்கு அவர், “வீட்டில் சும்மாதான் இருக்கிறார்” என்பார். “சமையல் யார் செய்வார்கள்?”, “துணி யார் துவைப்பார்? “வீட்டை யார் சுத்தம் செய்வார்?”, “குழந்தைகளை யார் பார்த்துக்கொள்வது?” எனும் ஒவ்வொரு கேள்விக்கும் “மனைவி சும்மாதான் இருக்கிறார். அதனால், அவர்தான் செய்கிறார்” என்று பதில் சொல்கிறார் கணவர். இப்படி, வீட்டில் உள்ள அனைத்து வேலைகளையும் செய்பவர்களாக இல்லத்தரசிகள் இருந்தாலும், அவர்களை வேலையற்றவர்கள் என்றுதான் சொல்கிறது நம் சமூகம்.

Wednesday, July 20, 2016

கர்ப்பிணி பெண்கள் வெளிக்கூற தயங்கும் 7 தர்மசங்கடமான விஷயங்கள்!

பெண் கர்ப்பம் தரிக்கும் வரை மட்டும் தான் ஆணும் சற்று கஷ்டப்படுகிறான். கர்ப்பம் தரித்த நாளில் இருந்து குழந்தையை பெற்றெடுக்கும் வரை அனுதினமும் அல்லாடுவது பெண் தான்.

அதிலும், கர்ப்பம் தரித்த முதல் மூன்று மாத சுழற்சியில் பெண்கள் நிறைய தர்மசங்கடமான நிகழ்வுகளை சந்திக்க நேரிடும்.

Saturday, July 2, 2016

சுகப்பிரசவத்திற்கு பின் ஒவ்வொரு பெண்ணும் சந்திக்கும் பிரச்சனைகள்!


ஒவ்வொரு பெண்ணுக்கும் சுகப்பிரசவம் என்பது மறு ஜென்மம். இந்த அனுபவம் ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் மறக்க முடியாத ஒன்றாகும். பெண்கள் பிரசவ காலத்தில் மட்டும் அதிக கஷ்டங்களை சந்திப்பதில்லை. பிரசவத்திற்கு பின், அதுவும் சுகப்பிரசவம் என்றால் வெளியே சொல்ல முடியாத அளவிலான பிரச்சனைகளை சந்திப்பார்கள்.

Monday, May 30, 2016

குழந்தை பெற்றால் குண்டம்மாதானா?!

ஏய்... பபிள்கம் சாப்பிட்டா கன்னம் கொஞ்சம் புஸ்னு ஆகுமாம்’, ‘மில்க் ஸ்வீட்ஸ், மூணே மாசத்துல வெயிட் கூட்டுமாம்’, ‘காட்டன் புடவை கட்டினா, கொஞ்சம் குண்டா தெரியலாம்ப்பா...’

- 20 ப்ளஸ் வயதில் மணப்பெண்ணாக மேடை ஏறும் தருணத்தில், தங்கள் ஒல்லி உடம்பை ‘கொஞ்சம் பூசினாப்ல’ ஆக்குவதற்கான கன்னிப் பெண்களின் மெனக்கெடல்கள் இப்படி பல.

Friday, March 25, 2016

மறைக்காமல் பேசுவோம்... மாதவிடாய்!

நோயை வெல்வதற்கான முதல் படி, அதைப் பற்றிய விழிப்பு உணர்வை வளர்த்துக்கொள்வதுதான். அந்த வகையில் தொடர்ந்து நோய்களைப் பற்றிய வெளிச்சம் தந்துவரும் ‘நோய்நாடி’ தொடரில்... பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பாக நேரும் பிரச்னைகள், அதற்கான தீர்வுகள் பற்றிப் பேசுகிறார், சென்னையைச் சேர்ந்த மகளிர் சிறப்பு மருத்துவர் பிரபா.

Friday, November 27, 2015

பெண்களே செருப்பு வாங்கும்போது கவனம்!

ஹைஹீல்ஸ் செருப்புகள் பெண்களுக்கு, கம்பீரமான தோற்றத்தை மட்டுமின்றி தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுக்கிறது. இதனால், குட்டையான பெண்கள் தங்களுக்கு உயரமும் கம்பீரமான தோற்றமும் கிடைக்க, உயரமான குதிகால் செருப்புகளை அதிக விலை கொடுத்து வாங்கி அணிகிறார்கள். அப்போது அசவுகரியம், ஆரோக்கிய சீர்கேடுகளையும் சந்திக்கிறார்கள்.

Monday, September 7, 2015

மகப்பேறு காலம்... முக்கிய தருணம்!

மகப்பேறு காலத்தில் உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் சிந்தனை ஆகியவற்றை சரியாக பின்பற்றுவதே, தாயும், சேயும் நலமாக இருக்க உதவுகிறது. இந்த காலகட்டத்தில் தான் புத்தகம் படிப்பது, நேர்மறை சிந்தனை யை வளர்த்துக் கொள்வது, சத்துள்ள உணவுகளை
உட்கொள்ளுவது என, குழந்தையின் நலனை காப்பதற்கான முயற்சியின் அடித்தளம்.

Tuesday, August 11, 2015

மார்பில் சுரக்கும் மாமருந்து!

தாய்மை... இந்த உலகத்தின் ஆகச்சிறந்த அழகு! உலகத் தாய்ப்பால் வாரம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் ஒன்று முதல் ஏழு தினங்கள் கொண்டாடப்படுகிறது. யுனெஸ்கோவும், உலக சுகாதார நிறுவனமும் பிரபஞ்சத்தின் மத்தியில் நின்றுகொண்டு `தாய்ப்பால்... தாய்ப்பால்’ எனத் தலையில் அடித்துக் கதறுகின்றன. மருத்துவமனைகள், ஆட்சியர் அலுவலகங்கள், சமுதாயக் கூடங்கள், கல்லூரிகள், பள்ளிகள் எனக் களமிறங்கி விழிப்பு உணர்வை ஏற்படுத்தச் சொல்கின்றன. அமெரிக்கன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸும் (The Amercian Academy of Pediatrics) தாய்ப்பால் புகட்டுதலை மிகவும் தீர்க்கமாக வலியுறுத்துகிறது.

 

நாம் என்ன செய்கிறோம்? ‘இதெற்கெல்லாமா நோட்டீஸ் கொடுப்பீர்கள்?’ எனச் சலித்துக்கொண்டு துண்டுச்சீட்டுகளைச் சுருட்டி தெருவோரம் வீசிவிட்டுப் போகிறோம். ஒரு கணம் சிந்தித்துப் பார்த்தால் புரியும்... ஒரு தாயிடம், அவள் குழந்தைக்கு, அவள் பாலை புகட்ட, அவளிடமே கெஞ்சிக்கொண்டிருப்பது எத்தனை அபத்தம் என்பது! இது உலகளாவிய உணர்வுப் பிரச்னை.

Monday, August 10, 2015

ஸ்ட்ரெச் மார்க்

பிரசவம் வரை வயிற்றில் உள்ள சிசுவின் ஆரோக்கியம் பற்றி கவலைப்பட்டு கவனத்துடன் இருக்கும் தாய்மார்கள், குழந்தை பிறந்த பிறகு, அதிகரித்த எடையைக் குறைப்பதிலும், வயிறு பெரிதானதால் ஏற்பட்ட தழும்புகளைப் போக்கவும் படாதபாடு படுகின்றனர்.

வலி மிகுந்த பிரசவத்துக்குப் பின், பெரிதான வயிறு மீண்டும் பழைய நிலைக்குச் சுருங்கும்போது, விரிவடைந்த சருமத்தில் வரி வரியாகக் காணப்படும் தழும்புகளே ஸ்ட்ரெச் மார்க். கர்ப்பிணிகள், உடல் எடையைத் திடீரென்று குறைத்தவர்கள், இளம் வயதில் கருவுற்றவர்கள், பாடி பில்டிங்கில் ஈடுபட்டு உடல் எடையைக் குறைத்தவர்கள், சீரற்ற ஹார்மோன் இயக்கங்களைக் கொண்டவர்களுக்கும் மரபியல் காரணங்களாலும் ஸ்ட்ரெச் மார்க் வரலாம். சருமத்தில் கொலஜன், எலாஸ்டின் என்ற புரதங்கள் உள்ளன. இவைதான் சருமத்தைப் பாதுகாக்கின்றன. வயிறு விரிவடைந்து மீண்டும் சுருங்கும்போது, டெர்மிஸ் (Dermis) படிமம் உடைக்கப்படுவதால், ஸ்ட்ரெச் மார்க் விழுகிறது. அதேபோல், நீண்ட காலமாக உடல் எடை அதிகம் இருந்து, திடீரென எடை குறையும்போது சருமத்தில் உள்ள டெர்மிஸ் படிமம், எலாஸ்டின், கொலஜன் போன்றவை உடைக்கப்படுவதால் தழும்பாக மாறுகின்றன.

Wednesday, August 5, 2015

தொப்பை குறைய வேண்டுமா லேடீஸ்?

உடலை தொப்பை இல்லாமல் ஆரோக்கியமாகவும், கச்சிதமாகவும் வைத்திருக்கவேண்டும் என்று பெரும்பாலான பெண்கள் விரும்புகின்றனர். உணவியல் நிபுணர்கள் கூறியுள்ள ஆலோசனைகளை படியுங்கள்.
சரிவிகித நீர்ச்சத்து: அதிக அளவு தண்ணீர் குடியுங்கள். இது உடலின் நீர்ச்சத்தை தக்கவைப்பதோடு பசி உணர்வை கட்டுப்படுத்தும். தண்ணீரானது நாம் உண்ணும் உணவை நன்றாக ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றிவிடும். தேவையற்ற பொருட்கள் வயிற்றில் தேங்குவதில்லை என்பதால் தொப்பை வயிறு ஏற்பட வாய்ப்பே இல்லை.

Saturday, August 1, 2015

ஆரோக்கிய சந்ததிக்கு தாய்ப்பால் அவசியம்!

குழந்தைகளுக்கு ஏற்ற, சத்தான, கலப்படம் இல்லாத, சுத்தமான ஒரே உணவு தாய்ப்பால்தான். அதை கொடுக்கும் தாய்மார்கள், தங்களை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது அவசியம். தாய்ப்பாலில் கால்சியம், பாஸ்பரஸ், புரோட்டீன், கொழுப்புச்சத்து, கார்போஹைட்ரேட் போன்ற அனைத்து வகையான, உயிர் சத்துக்களும் உள்ளன. தாய்ப்பால் கொடுக்கவில்லை என்றால் மட்டுமே, குழந்தைகளுக்கு பல பாதிப்புகள் ஏற்படும்.

Sunday, July 12, 2015

வளையல் குலுங்க... வளரும் ஆரோக்கியம்!

பிறந்த குழந்தைகளில் இருந்து பாட்டிகள் வரை, வளையல் என்பது பெண்களுக்கு ஆபரணம் என்பதற்கு மேலாக, உணர்வுடன் கலந்த விஷயம்!

‘‘வளையல் அணியும் பழக்கத்தை காரணமாகத் தான் ஏற்படுத்தியுள்ளார்கள் நம் முன்னோர். வளையல் அணிவதால் பெறும் மருத்துவப் பலன்கள் நிறைய!’’ என்று சொல்லும் ஆயுர்வேத மருத்துவர் ரேச்சல் ரெபேக்கா, அவற்றை விளக்க விளக்க... சுவாரஸ்யமானோம்!

‘‘வளையல்கள் ஒன்றோடு ஒன்று உரசும்போது ஏற்படும் ஒலி, நமக்குள் பாசிட்டிவ் எண்ணங்களை உண்டு பண்ணிக்கொண்டே இருக்கும். நமது எண்ணங்கள் தெளிவு பெறும். மூளையின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாகும். நாடி நரம்பில் படும்படி அணியப்படும் வளையல், மேலும் கீழுமாக அசைவுறப் பெறுவதால் ஒரு சின்ன சூடு உண்டாகும். இது உடலின் ரத்த ஓட்டத்தையும், இதயத் துடிப்பையும் சீராக வைத்திருக்கும்.

Saturday, June 27, 2015

பிரசவத்திற்கு பின் பெண் பணிக்கு போகலாமா?

வேலைக்கு செல்லும் பெண்கள் அனைவருக்கும் மருத்துவர்கள் கூறுவது, பிரசவத்திற்கு பிறகு குறைந்தது ஒரு மாதமாவது வீட்டில் இருக்க வேண்டும் என்பது. அதிலும் அது அவர்களது பிரசவம் மற்றும் உடல் நிலையை பொறுத்து, ஒரு மாதத்தில் கூட வேலைக்கு போகலாமா வேண்டாமா என்று பரிசோதித்து கூறுவார்கள். ஆனால் சில பெண்கள் தங்களுக்கு பிரசவம் நடந்த ஒருசில வாரங்களிலேயே வேலைக்கு சென்று விடுவார்கள்.
வேலைக்கு செல்வது நல்லதா? கெட்டதா?

Wednesday, June 10, 2015

பிரசவ வலி பிரச்னையாகிவிட்டது ஏன்?!

``இன்று சுகப்பிரசவங்கள் குறைந்துவிட்டதுடன், பெண்கள் பலரும் ‘பிரசவ வலி வரவில்லை’ என்ற பிரச்னையைச் சந்திக்கிறார்கள். அது ஏன்? மேலும் அந்தச் சமயங்களில் பிரசவ வலியை செயற்கையாக மருந்து கொடுத்து ஏற்படுத்துகிறார்கள் மருத்துவர்கள். இதனால் தீங்கேதும் இல்லையா?’’

“பிரசவ வலி என்பது மிகுதியான வலி என்றாலும், பெண்களால் தாங்கக்கூடிய வலிதான். ஆனால், பிறர் மிகைப்படுத்திச் சொல்வதைக் கேட்பதால், இன்று பல பெண்களும், சுகப்பிரசவ வாய்ப்பிருந்தும், மருத்துவர்களை சிசேரியன் செய்யச் சொல்லி வற்புறுத்துகிறார்கள். இதன் பேரில் சில மருத்துவர்கள் சிசேரியன் செய்ய முடிவெடுப்பதும் நடக்கிறது. ஆனால், சுகப்பிரசவத்துக்கான உடல்வலிமை இயற்கையாகவே இருக்கிறது என்பதை உணர்ந்து, அதற்கான மனவலிமையை ஒவ்வொரு பெண்ணும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.

Tuesday, June 2, 2015

நான் வளர்ந்துவிட்டேன் அம்மா... பூப்பெய்துதல்

 

முகப்பரு, உடலில் முடி வளர்தல், மார்பக வளர்ச்சி, திடீர் திடீர் மனமாற்றம் போன்ற அறிகுறிகள் உங்கள் செல்ல மகளிடம் தென்பட்டால், அவள் பூப்பெய்துதலை நோக்கிப் பயணிக்கிறாள் என்று அர்த்தம். பெண்ணோ ஆணோ, அவர்களது இனப்பெருக்க உறுப்புகள் வளர்ச்சியடைந்து, இனப்பெருக்கத்துக்குத் தயாராகும் நிலை பூப்பெய்துதல் (Puberty) எனப்படுகிறது. போன தலைமுறை வரை, பெண்கள் பூப்பெய்தும் வயது, 14-15 ஆக இருந்தது. வாழ்க்கைமுறை மாற்றத்தினால், இன்றைக்கு 10-12 வயதுக்குள்ளாகவே பூப்பெய்துகின்றனர். அந்த நேரத்தில், அவர்கள் மனதளவிலும் உடலளவிலும் பல்வேறு மாற்றங்களை எதிர்கொள்வார்கள். பூப்பெய்துதல் என்றால் என்ன, அது எப்படி நிகழ்கிறது, அதற்கு எப்படித் தயாராவது, இயல்பாக எதிர்கொள்வது எப்படி என்பதைப் பெற்றோர் தங்கள் மகளுக்குச் சொல்லித்தருவது மிக அவசியம்.

 

பூப்பெய்துவதற்கு முன்பு ஏற்படும் உடல் மாற்றங்கள்: