ஜெர்மனி என்றதுமே அடால்ஃப் ஹிட்லரின் முகம் நினைவுக்கு வந்தால் நீங்கள் இன்னும் வரலாற்றிலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம். வெளியே வாருங்கள். நிகழ்காலத்தில் நவீன ஜெர்மனியின் நிஜ முகம் அதன் சான்ஸிலர் (பிரதமர்) அங்கலா மெர்கெல் (Angela Merkel). ஜெர்மனிக்கு மட்டும் அல்ல, ஒட்டுமொத்த ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்கான நம்பிக்கையூட்டும் ஒரே முகமாகவும் அறியப்படுபவர். `Person of the Year - 2015’ என தன் அட்டையில் பிரசுரித்துப் பெருமிதப்படுத்தி யிருக்கிறது `டைம்' பத்திரிகை.
நான் பார்த்த,படித்த எனக்கு பிடித்த செய்திகள், கட்டுரைகள்,துணுக்குகள்,வீடியோ,போட்டோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்
Thursday, December 24, 2015
Tuesday, October 13, 2015
நோபல் பரிசு பற்றி தெரியுமா?
எ
ந்தெந்த துறைகளுக்கு நோபல் பரிசு வழங்கப்படுகின்றன? நோபல் பரிசை துவக்கிய ஆல்பிரட் நோபல், இந்த பதக்கங்களை, அறிவியல் துறையினரை ஊக்குவிக்கவே உருவாக்கினாலும், பிற்பாடு பிற துறைகளையும் சேர்த்து கவுரவிக்கிறது நோபல் கமிட்டி.
இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம், அமைதிச் சேவை, பொருளாதாரம் ஆகிய ஆறு துறைகளில், 'மைல்கல்' சாதனைகளை புரிபவர்களுக்கு இப்போது நோபல் பரிசு வழங்கப்படுகிறது. இதுவரை வழங்கப்பட்ட நோபல் பரிசுகளின் எண்ணிக்கை எவ்வளவு? இதுவரையிலுமாக வழங்கப்பட்ட மொத்தப் பதக்கங்கள், 567 தனியாகவும், இருவராக, மூவராக என, பகிர்ந்தும் வழங்கப்படும் நோபல் பதக்கங்களை, 2014ம் ஆண்டு வரை, மொத்தம், 889 பேர் வென்றிருக்கின்றனர்.
Sunday, March 1, 2015
பால்வெளியில் 200 பில்லியன் பூமியை போன்ற கிரகங்கள் உள்ளனவா? ஆய்வில் தகவல்
இன்றுவரை, பால்வெளியில் வாழ்வதற்கு சாத்தியமுள்ள 1,000 கிரகங்கள் இருப்பதை விண்ணியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் பூமியை போன்ற கிரகங்கள் இருப்பதை தேடிக் கண்டுபிடிக்க புதிய ஆய்வை நாங்கள் நம்பிக்கையுடன் மேற்கொண்டுள்ளோம், நமது மண்டலத்தை சுற்றி சுமார் 200 பில்லியனுக்கும் மேற்பட்ட பூமியை போன்ற கிரகங்கள் இருக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். சராசரியாக நட்சத்திரத்தை சுற்றி இரண்டு பூமியை போன்ற கிரகங்கள் இருக்கும் என்ற மதிப்பீட்டை அடிப்படையாக கொண்டு இந்த குறிப்பிடத்தக்க அறிவிப்பை ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். பால்வெளியில் சுமார் 100 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளதால் சுமார் 200 பில்லியனுக்கும் மேற்பட்ட பூமியை போன்ற கிரகங்கள் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலிய தேசிய
புத்திசாலி ஓங்கில்

தமிழில் ஓங்கில் என்றும் கடல் பன்றி என்றும் குறிப்பிடப்படுகின்றன, டால்ஃபின்கள். இந்திய தேசிய நீர் விலங்கு என்று இதனை கடந்த ஆண்டு 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவித்தது மத்திய அரசு. இவற்றில் ஒரு வகையான நன்னீர் வாழ் டால்ஃபின் இனமும் உண்டு. கங்கை நதியில் கங்கை டால்ஃபின் என ஒரு இனம் முன்பு ஏராளமாக நீந்திக்
Saturday, January 24, 2015
உறைய வைத்த ஃப்ரிட்ஜ்!
இயற்கையாக உள்ள விஷயத்தை எல்லாம் செயற்கையாக, தானும் உருவாக்க வேண்டும் என்ற முயற்சியை மனிதன் காலம் காலமாகச் செய்து வந்திருக்கிறான். அதில் முக்கியமான ஒன்று, இயற்கையில் உருவாகும் பனிக்கட்டியை ஏன் நாமும் உருவாக்கக்கூடாது என்ற எண்ணம். இந்த எண்ணம்தான் ஃப்ரிட்ஜ் எனும் குளிர்சாதனப் பெட்டியைக் கண்டுபிடிக்கக் காரணமாக அமைந்தது.
முதலில் 1750-களில் ரெஃப்ரிட்ஜிரேஷனுக்கான கண்டுபிடிப்புகள் ஆரம்பிக்கப்பட்டன. வெற்றிடத்தில் அழுத்தத்தை ஏற்படுத்தி ஐஸ்கட்டி உருவாக்கும் இயந்திரம் முதலில் 1854-ல் கண்டுபிடிக்கப்பட்டது. அதன்பின் மைகேல் பாரடேவின் விதிப்படி, அம்மோனியாவும், இதர சில வாயுக்களும் உயர் அழுத்ததில் வெப்பத்தைக் குறைத்து, குளிர்ச்சியை உண்டாக்கும் என்ற தத்துவத்தின் அடிப்படையில் ஃப்ரிட்ஜின் கண்டுபிடிப்பு வேகமெடுத்தது.
Saturday, August 2, 2014
பிரிக்ஸ் பேங்க்:உலக வங்கிக்கு ‘செக்’!
சீனா, ரஷ்யா, பிரேசில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் கூட்டாக இணைந்து தங்கள் நாடுகளின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 50 பில்லியன் டாலரில் புதிய வளர்ச்சி வங்கியை சீனாவின் ஷாங்காய் நகரில் தொடங்க முடிவு செய்திருக்கிறது. தவிர, இந்த ஐந்து நாடுகளுக்கும் பொருளாதாரச் சிக்கல் ஏற்படும்பட்சத்தில் உதவி செய்வதற்காக அவசரகால நிதி ஏற்பாடாக 100 பில்லியன் டாலர் பணத்தையும் ஒதுக்கீடு செய்ய முடிவு செய்திருக்கிறது.
பிரிக்ஸ் நாடுகள் தொடங்கும் இந்த வங்கியில் இந்தியா 28 பில்லியன் டாலர்களை (இந்திய மதிப்பில் 1.68 லட்சம் கோடி ரூபாய்) முதலீடு செய்ய வேண்டும். இந்த பிரிக்ஸ் வங்கி பற்றி தெளிவாக எடுத்துச் சொன்னார் சர்வதேச பொருளாதார நிபுணர் டாக்டர் அனந்த நாகேஸ்வரன்.
Monday, July 21, 2014
விண்வெளி இந்தியன்!
'சந்திராயன்’, 'மங்கள்யான்’... வரிசையில் இந்திய விண்வெளி ஆய்வுக்கழகத்தின் பெயரிடப்படாத, தீவிரமாக வேலைகள் நடந்துகொண்டிருக்கும் அடுத்த திட்டத்தின் பெயர், 'மேன் ஆன் மிஷன்’ (இது தோராயமான பெயர்தான்!). விண்வெளிக்கு ஒரு இந்தியனை அனுப்பி சில நாட்கள் மிதக்கவைத்து, மீண்டும் கீழே இறக்குவதுதான் மேன் ஆன் மிஷன். கிட்டத்தட்ட ஒரு டூர் அடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்புவது மாதிரி. என்ன... அது விண்வெளி ட்ரிப் என்பதால், எக்கச்சக்க டெக்னாலஜி அக்கப்போர், உலக நாடுகளின் பனிப்போர் எல்லாம் ஈர்த்துக் கவனம் பெறுகிறது; கோடிகளில் செலவு பிடிக்கிறது!
சரி... முதலில், எதற்கு மனிதனை விண்வெளிக்கு அனுப்ப வேண்டும்?
Saturday, July 12, 2014
வெளிச்சம் தந்த எடிசன்!
'நீ ஒன்றுக்கும் லாயக்கற்றவன்’ என்று நம்மைப் பார்த்து யாராவது சொன்னால், நமக்குக் கோபம் பொத்துக் கொண்டு வரும். அவரோடு நிச்சயம் சண்டை போடுவோம். ஆனால், தாமஸ் ஆல்வா எடிசன் அப்படியல்ல; பள்ளிக்கூடத்தில் படிக்க லாயக்கற்றவர் என்று தன்னைத் தூற்றியவர்கள்முன் ஆயிரத்துக்கும் அதிகமான கண்டுபிடிப்பு களை நிகழ்த்தி, தன்னால் எதையும் செய்ய முடியும் என்று நிரூபித்தவர். ஆனால், அதற்காக அவர் தாண்டிவந்த தடைகள் பலப்பல.
Tuesday, February 18, 2014
ஆக்ஸ்ஃபோர்டு டிக்ஷனரி உருவானது எப்படி?

1857-ஆம் ஆண்டில் அப்போது புழக்கத்திலிருந்த டிக்ஷனரிகள் போதவில்லை என்ற காரணத்திற்காக ஃபிலோலாஜிகல் சொசைட்டி ஆஃப் கிரேட் பிரிட்டன், நியூ இங்கிலீஷ் டிக்ஷனரி ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டது. டிக்ஷனரி பற்றாக்குறையை நிவர்த்திப்பதோடு ஆங்கிலோ சாக்ஸன் காலத்திய மொழிகளின் சரித்திரத்தையும் கூடவே அறிமுகப்படுத்தலாமென்ற எண்ணமும் இருந்தது. ஆனால் இத்திட்டத்தை முழுமையாக்கி ஒப்புதல் பெற இருபதாண்டுகள் ஆயின.
Tuesday, December 24, 2013
தேசிய மகளிர் ஆணையம்
தேசிய மகளிர் ஆணையத்தின் பணி மிகவும் விரிவானது. பெண்களின் நலன் மற்றும் மேம்பாடு சம்பந்தப்பட்ட அனைத்து அம்சங்களிலும் இந்த ஆணையம் முக்கியப் பங்காற்றுகிறது. அரசியல் சாசனப் படியும், சட்டப்படியும் பெண்களுக்கு வழங்கப் பட்டுள்ள பாதுகாப்புகள் சம்பந்தப்பட்ட அனைத்து விசயங்கள் குறித்து ஆய்வு செய்தல், கண்காணித்தல் போன்வற்றில் தேசிய மகளிர் ஆணையம் முக்கியப் பங்காற்றுகிறது. பெண்களின் நலன் தொடர்பாக தற்போதுள்ள சட்டங்கள் அனைத்தையும் ஆய்வு செய்யும் இந்த ஆணையம், அந்தச் சட்டங்களில் எங்கெல்லாம் குறைகளும், பலவீனங்களும் இருக்கின்றனவோ அவற்றை ஆய்வுசெய்து தேவையான திருத்தங்களைச் செய்ய
மங்கள்யான்
கடந்த 22-10-2008 ஆண்டு நிலவுக்கு சந்திராயன்-1 விண்கலத்தை (PSLV-C11 ராக்கெட் மூலம்) வெற்றிகரமாக அனுப்பி உலக நாடுகளை ஆச்சர்யப்படவைத்தது இஸ்ரோ. இந்த முறை மங்களயானை அனுப்பி வியக்க வைத்துள்ளது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை மட்டுமே செவ்வாய் கிரகத்துக்கு விண்கலத்தை வெற்றிகரமாக அனுப்பியிருக்கின்றன. சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளின் திட்டம் தோல்வியில் முடிந்தது. இந்த நிலையில், இந்தியாவின் பார்வையும் செவ்வாய் கிரகம் மீது திரும்பியது. இதைத் தொடர்ந்து, ரூ.450 கோடி செலவில் செவ்வாய் கிரகத்துக்கு விண்கலம் (மங்கள்யான்) அனுப்பும் திட்டத்தை இஸ்ரோ உருவாக்கியது.
செவ்வாய் கிரகம் ஓர் பார்வை
நான்காம் நூற்றாண்டில் இத்தாலிலிய வானியல் ஆராய்ச்சியாளர் கலிலிலியோ கலிலிலிலி தொலைநோக்கி வழியாக செவ்வாய் கிரகத்தை உற்றுநோக்கி ஆராய்ந்தார். அந்த காலக்கட்டத்தில் மெல்ல மெல்ல செவ்வாய் கிரகத்தின் மீது மனிதனின் கவனம் திரும்பியது. அதை பற்றி தெரிந்துகொள்ளும் ஈடுபாடும் அதிகமானது.
Tuesday, December 17, 2013
நோபல் பரிசு - 2013
1901ல் துவக்கப்பட்ட நோபல் பரிசுகள், இடையில் 1940ல் மட்டும் உலகப்போர் காரணமாக வழங்கப்படாமை தவிர, தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. துவக்கத்தில் ஐந்து துறைகளுக்கு மட்டுமே பரிசுகள் வழங்கப்பட்டு வந்தன.
ஆறாவதாக 1969 முதல், ஸ்வீடன் தேசிய வங்கி, அதே நோபல் அறக்கட்டளை மூலமாக பொருளாதாரத் துறைக்கும் வழங்கிவருகிறது. பரிசுக்குரிய ஆண்டுக்கு முந்தைய ஆண்டு அல்லது அதுவரையில் துறைவாரியாக எவர் புதிய புதிய கண்டுபிடிப்பு அல்லது செல் மூலம் மனித குல மேம்பாட்டுக்கு அருந்தொண்டாற்றினார்களோ அவர்களுக்கு அத்துறைக்கான நோபல் பரிசு வழங்கப்படும்.
ஆண்டுக்கு ஒருவர் அல்லது மூவருக்கு மிகாமல் அச்சமயம் உயிருடன் உள்ளவர்களுக்கு மட்டும் பரிசு அறிவிக்கப்படும்.
நபர்கள் அல்லாமல் அமைப்புகளுக்கும் வழங்கப்படலாம் என்பது பொதுவிதி! ஒருவருக்கு மேல் வழங்கப்படும்போது, தேர்வுக் குழு நிர்ணயிக்கும் விகிதப்படிப் பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்படும்.
மருத்துவம்: அமெரிக்காவின் "யேல்' பல்கலைக்கழக "ஜேம்ஸ் ஈ ரோத்மன்' (62 வயது), ஸ்டான்ட்ஃபோர்டு பல்கலைக்கழக "தர்மஸ் சி சுடோஃப்' ஆகிய மூவருக்கும்
Monday, December 10, 2012
ஜிமேட் தேர்வின் அம்சங்கள் என்னென்ன?
உலகின் 110க்கும் மேற்பட்ட நாடுகளிலுள்ள, 1,500க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், தாங்கள் வழங்கும் 5400க்கும் மேற்பட்ட படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, ஜிமேட் தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்கின்றன.
எனவே, இத்தேர்வு தொடர்பான பல சந்தேகங்களுக்கு விளக்கம் பெறுவது மாணவர்களுக்கு இன்றியமையாதது.
இந்த ஜிமேட் தேர்வு எப்படிப்பட்டது?
கிராஜுவேட் மேனேஜ்மெனட் அட்மிஷன் டெஸ்ட் எனப்படும் ஜிமேட் தேர்வானது, உங்களது படிப்புத் தொடர்பான செயல்பாட்டின், ஒரு செல்லத்தக்க மற்றும் நம்பத்தகுந்த அளவீடாகும். நீங்கள், ஜிமேட் தேர்வில் சிறப்பாக செயல்பட்டால், வகுப்பறையிலும் சிறப்பாக செயல்பட முடியும். இத்தேர்வில், Analytical writing assessment, Integrated reasoning, Quantitative and Verbal போன்ற 4 பகுதிகள் உள்ளன. இத்தேர்வுக்காக, மொத்தம் 3.5 மணிநேரங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால், நீங்கள் திட்டமிடும்போது, மொத்தம் 4 மணி நேரங்களுக்கு திட்டமிட வேண்டும். ஏனெனில், இடைவெளி நேரங்களையும் சேர்த்து, மொத்தம் 4 மணிநேரங்கள்.
ஜிமேட் தேர்வு எவ்வாறு நடத்தப்படுகிறது?
இத்தேர்வு, முழுவதுமாக, ஆங்கிலத்திலேயே நடத்தப்படுகிறது. இத்தேர்வின், quantitatvie மற்றும் verbal பகுதிகளானது, computer-adaptive தொடர்பானவை. நீங்கள் முந்தைய கேள்விகளுக்கு எவ்வாறு பதிலளித்தீர்கள் என்பதை வைத்து, இப்பகுதியில், உங்களுக்கான கேள்விகள் தேர்வு செய்யப்பட்டிருக்கும். இதில், நீங்கள் அதிகளவில், சரியான பதில்கள் கொடுக்க கொடுக்க, தேர்வும் கடினமாகிக் கொண்டே செல்லும்(உதாரணம்: video game).
கேள்விகளின் கடினத்தன்மை மற்றும் நீங்கள் அளித்த சரியான பதில்கள் ஆகியவற்றின் அடிப்படையில், உங்கள் மதிப்பெண் கணக்கிடப்படும். மேலும், தேர்வுக்கான ஒரு குறிப்பிட்ட நேரம் என்றில்லாமல், உங்களின் திறனுக்கேற்ப, தேர்வு நேரத்தை அதிகரித்தோ அல்லது சுருக்கியோ அமைத்துக் கொள்ளலாம்.
ஜிமேட் தேர்வு முறை என்ன?
இத்தேர்வில், மொத்தம் 4 பகுதிகள் உள்ளன. அவை,
ANALYTICAL WRITING ASSESSMENT(AWA)
இப்பகுதியில், 30 நிமிடங்களுக்கான கட்டுரை, விவாதத்தை பகுப்பாய்வு செய்தல் இடம் பெற்றிருக்கும். சிக்கலான விஷயங்களை சிந்தித்தல் மற்றும் தகவல் தொடர்பு திறன்கள் ஆகியவை, இப்பிரிவில் மதிப்பிடப்படும்.
INTEGRATED REASONING(IR)
மொத்தம் 30 நிமிடங்களைக் கொண்ட இப்பகுதியில், 12 கேள்விகள் கேட்கப்படும். வெவ்வேறான தரவுகளை பகுப்பாய்வு செய்யும் உங்களின் திறன், இதன்மூலம் சோதிக்கப்படும்.
QUANTITATIVE SECTIONS
மொத்தம் 75 நிமிட நேரத்தைக் கொண்ட இப்பகுதியில், 37 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். கிராபிக் தரவுகளை விளக்குதல் மற்றும் குவான்டிடேடிவ் சிக்கல்களை தீர்த்தல் போன்றவை இதில் இடம் பெற்றிருக்கும்.
VERBAL SECTION
41 கேள்விகள் இடம்பெற்ற இப்பகுதியானது, 75 நிமிடங்களைக் கொண்டது. ஆங்கில வார்த்தை வளம்(vocabulary), பாடங்களைப் பகுப்பாய்வு செய்தல், சரியான முறையில் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ளுதல் உள்ளிட்ட திறன்கள், இப்பகுதியில் சோதிக்கப்படும்.
ஜிமேட் மதிப்பெண் அளவீடுகள் எவை?
ஜிமேட் தேர்வின் மொத்த மதிப்பெண் 200 - 800 என்ற மதிப்பீட்டில் அறிவிக்கப்படுகிறது மற்றும் Quantitative, Verbal பிரிவுகளில், தேர்வெழுதுபவரின் செயல்பாட்டின் அடிப்படையில் இது அமைகிறது. மொத்த மதிப்பெண்கள் தவிர, 4 பிரிவுகளுக்கும், தனித்தனி மதிப்பெண்களும் உண்டு.
INTEGRATED REASONING(IR)
scored on a scale of 1-8
VERBAL SECTION - scored on a scale of 0-60
QUANTITATIVE SECTION - scored on a scale of 0-60
ANALYTICAL WRITING ASSESSMENT - scored on a scale of 0-6
AWA மற்றும் IR பிரிவுகள், தனித்தனியாக மதிப்பெண்கள் இடப்படும். அவை, மொத்த மதிப்பெண் கணக்கில் வராது. மேலும், தேர்வு முடிந்தவுடன், தேர்வு மையங்களில் கிடைக்கும் அதிகாரப்பூர்வமற்ற மதிப்பெண் பட்டியல்களில் அவை இணைக்கப்படாது. அதிகாரப்பூர்வ மதிப்பெண் பட்டியல், தேர்வு முடிந்த 20 நாட்களில் கிடைக்கும். GMAT மதிப்பெண்கள், 5 வருடங்களுக்கு செல்லத்தக்கவை.
ஜிமேட் தேர்வுக்கு தயாராதல் எப்படி?
www.mba.com/gmatprep என்ற இணையதளத்தில், ஜிமேட் தேர்வுக்கு தயாராதலுக்கு உதவும் இலவச மென்பொருளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதுதவிர, www.mba.com/store என்ற வலைதளத்தில், ஜிமேட் தேர்வுக்கான பலவற்றை பெற்றுக் கொள்ளலாம்.
எந்தெந்த நாடுகள் ஜிமேட் மதிப்பெண்களை ஏற்றுக்கொள்கின்றன?
உலகம் முழுவதும், சுமார் 5400க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு, ஜிமேட் மதிப்பெண்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, அவற்றில், இந்தியா, நியூசிலாந்து, அமெரிக்கா, சிங்கப்பூர், பிரிட்டன், ஸ்பெய்ன், ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, கனடா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் குறிப்பிடத்தக்கவை.
ஆங்கில மொழித்தேர்வைப் பற்றி கூறவும்
நீங்கள் எந்த பல்கலைக்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ, அதன் இணையப் பக்கத்திற்கு சென்று, அது நடத்தும் ஆங்கில மொழித்தேர்வைப் பற்றி அறிய வேண்டும்.
ஜிமேட் தேர்வை எத்தனை முறை எழுதலாம்?
உலகம் முழுவதுமுள்ள தேர்வு மையங்களில், ஆண்டு முழுவதும், சுழற்சி முறையில் ஜிமேட் தேர்வு நடத்தப்படுகிறது. ஒரு மாதத்தில், அதிகபட்சம் 1 முறையும், ஒரு ஆண்டில், அதிகபட்சம் 5 முறையும், இத்தேர்வை எழுதலாம். மேலும், நீங்கள் தேர்வெழுத விரும்பும் குறிப்பிட்ட மையத்தின், தேர்வுக்கான கால அட்டவணை திட்டத்தையும் அறிந்துகொள்ள வேண்டும்.
ஜிமேட் தேர்வை எழுத, யாரெல்லாம் தகுதியானவர்கள்?
குறைந்தபட்சம் 13 வயது ஆகியிருந்தால், இத்தேர்வை எழுதலாம். அதேசமயம், 18 வயதுக்கு குறைந்தவர்கள், பெற்றோர் அல்லது காப்பாளர் கையெழுத்திட்ட, எழுதப்பட்ட படிவத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
ஜிமேட் தேர்வெழுத எவ்வளவு செலவாகும்?
உலகளவில், இத்தேர்வெழுத, 250 அமெரிக்க டாலர்கள் வசூலிக்கப்படுகின்றன. சில நாடுகளில், இத்தேர்வு நடத்தப்படுவதற்கு வரியும் விதிக்கப்படுகிறது. ஜிமேட் தேர்வுத் தேதியை மாற்றியமைக்கும் அல்லது ரத்து செய்யும் தேர்வர்கள், கூடுதலாக செலவுசெய்ய வேண்டியிருக்கலாம். எனவே, இது விஷயத்தில் கவனமுடன் செயல்பட வேண்டும்.
குறிப்புகள்
இந்தியாவின் 17 நகரங்களில், 18 மையங்களில், ஆண்டு முழுவதும் இத்தேர்வு நடத்தப்படுகிறது.
நாடு முழுவதும் ஏறக்குறைய 80 வணிகப் பள்ளிகளால் வழங்கப்படும் 150க்கும் மேற்பட்ட படிப்புகளுக்கு, ஜிமேட் தேர்வு மதிப்பெண்கள் செல்லுபடியாகின்றன.
Friday, November 23, 2012
கண்ணாடியின் கதை
சுமார் எழுபதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆதி மனிதன் கண்ணாடிகளை உபயோகப்படுத்தினான். அந்தக் கண்ணாடிகள், எரிமலைக் குழம்பு காய்ந்து கெட்டியாகும்போது உண்டானவை. இந்தக் கட்டிகளைக் கத்தி செய்வதற்கும், அம்புகள் செய்வதற்கும் பயன்படுத்திக்கொண்டான். கண்ணாடிகளை மனிதனே படைக்கும் முறை கி.மு. மூவாயிரம் ஆண்டளவில் மத்திய கிழக்கு நாடுகளில் உண்டாகியிருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கி.மு. ஆயிரம் ஆண்டுவாக்கில் வெட்டவெளிகளில் கண்ணாடிக் குழம்புகளை வார்த்து கண்ணாடி செய்யும் முறை எகிப்தியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பிறகு ரோமானியர்கள் கி.பி. முதல் நூற்றாண்டளவில் கண்ணாடிகளாலான சிறிய பொருட்களை உருவாக்கிக் கொண்டார்கள்.
பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை இஸ்லாமிய நகரங்களான பாக்தாத் மற்றும் கெய்ரோவில் கண்ணாடி செய்யும் கலை வளர்ந்தது. இதனால் தான் இந்தக் காலகட்ட கண்ணாடிகளை இஸ்லாமியக் கண்ணாடிகள் என்று அழைத்தார்கள். பன்னிரண்டிலிருந்து பதினாறாம் நூற்றாண்டுவரை வெனிஸ் நகரில் இந்தக் கலை உச்சகட்டம் தொட்டது. பாதரசத்தைப் பயன்படுத்தி முகம் பார்க்கும் கண்ணாடிகளை செயற்கையாகச் செய்யும் தொழில்நுட்பத்தையும் அவர்கள் அறிந்திருந்தனர். ஆனால், இந்த நுணுக்கங்களை அவர்கள் ரகசியமாக வைத்திருந்தார்கள். ஆனால், பதினேழாம் நூற்றாண்டளவில் இந்த ரகசியம் கசிந்து, ஐரோப்பிய நாடுகள் பலவும் கண்ணாடிகள் செய்தன. 17 முதல் 19ம் நூற்றாண்டு வரை கண்ணாடிகளால் டெலஸ்கோப், தெர்மாமீட்டர், மைக்ரோஸ்கோப் போன்ற பல அறிவியல் தொழில்நுட்பங்கள் வளர்ந்தன.
இதன் தொடர்ச்சியாக பார்வைக் கோளாறுக்கான கண்ணாடிகள் ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டன. 1903ம் ஆண்டில்தான் அமெரிக்காவில் ஒரு நிமிடத்தில் ஆயிரக்கணக்கான கண்ணாடிகளை தயாரிக்கும் தானியங்கி இயந்திரம் உருவானது. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருப்பது கண்ணாடியின் அடிப்படை மூலக்கூறு ஆகும். கொல்கத்தாவில் உள்ள ஒரு ஆய்வுக் கூடத்திலிருந்து 1959ல் இங்கு கொண்டு வரப்பட்டது என்றார் அவர். கண்ணாடியில் உள்ள சுத்தத் தன்மையை வைத்தே அது எந்தக் காலத்தில் செய்யப்பட்டது என்பதைக் கண்டுபிடிக்கலாம். நம் உருவங்களைப் பிரதிபலிக்கும் கண்ணாடிகள், அந்தந்த காலகட்டத்தின் தொழில்நுட்ப வளர்ச்சியையும் பிரதிபலிப்பது ஒரு அழகான ஆச்சரியம்தான்.
Wednesday, November 7, 2012
துடிக்கும் இதயம்!
நமது உடலின் மிக முக்கிய உறுப்புகளுள் ஒன்று, இதயம். உடம்பெங்கும் ரத்த ஓட்டத்துக்கு மூலமாக இருப்பது இதயம்தான்.
இதயம் எப்படி வேலை செய்கிறது? இதயத் தசை சுருங்கி விரியும் தன்மை உடையது. இதயம் முழுமையாக விரிந்திருக்கும்போது, அசுத்த ரத்தம் கொண்டுவரும் சிரைகள் வலது இதய அறைகளையும், சுத்த ரத்தம் கொண்டுவரும் நுரையீரல் சிரை இடது இதய அறைகளையும் நிரப்புகிறது.
கீழறைகளுக்குச் செல்வதை விட அதிகமான ரத்தம் மேலறைகளுக்குச் செல்வதால் மேலறைச் சுவர்கள் முழுமையாக விரிகின்றன. அதன்பின் மேலறைகள் ஏக காலத்தில் சுருங்குகின்றன.

இவ்வாறு மேலறைகள் சுருங்கும்போது அவற்றில் உள்ள ரத்தம், விரிந்திருக்கும் கீழ் அறைகளுக்குள் வால்வுகள் வழியாகச் செல்கிறது. கீழறைகள் நிரம்பியவுடன் உட்போக்கு வால்வுகள் ரத்தத்தில் மிதக்கின்றன. இப்போது, கீழறைகள் ஏக காலத்தில் சுருங்குகின்றன. அழுத்தப்படும் ரத்தம், மேலறைக்குச் செல்வதை வால்வுகள் தடை செய்வதால், தமனிக்குள் செல்கிறது. வலது கீழறை ரத்தம் நுரையீரல் தமனிக்குள்ளும், இடது கீழறை ரத்தம் பெருந்தமனிக்குள்ளும், பாய்குழலுக்குள் சென்ற ரத்தம் கீழறைகளுக்கும் மீண்டும் திரும்புவதை அவற்றின் நுழைவாயில் வால்வுகள் அனுமதிப்பதில்லை.
இவ்வாறு இதயத்தில் ரத்தம் நிரம்பி, வெளியேறும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. கீழறைகள் சுருங்கும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அறையிலிருந்து மூன்று அவுன்ஸ் ரத்தம் வெளியேறுகிறது.
கீழறை சுருங்கும்போது இதயத்தின் நுனி முன்னுக்குத் தள்ளி மார்புச் சுவர்களை அடிப்பதால்தான் இதயத் துடிப்பு ஏற்படுகிறது.
இதயம் முழுமையாக விரிவது, மேலறைகள் சுருங்குவது, கீழறைகள் சுருங்குவது, மீண்டும் இதயம் முழுமையாக விரிவது என்று விரிதல்- சுருங்கல் நிகழ்ச்சி இடைவிடாமல் நடைபெறுகிறது. நிமிடத்துக்குச் சுமார் 72 தடவை இதயத் தசையான கார்டியாக் தசை மாறி மாறித் தளர்ந்து சுருங்குவதாகக் கூறலாம்.
ரப்பர் பையினுள் தண்ணீரை அடைத்து அதை அழுத்தினால் பையில் ஓட்டை இருந்தால் நீர் எவ்வளவு வேகமாக வெளிவரும்! அதைப் போலவே இதயத்தின் மேலறை சுருங்கும்போது ரத்தம் மேலறையில் இருந்து கீழறைக்கும், கீழறை சுருங்கும்போது அதிலிருந்து ரத்தக் குழாய்களுக்கும் செல்கிறது என்று சொல்லலாம்.
ஒரு மனிதனை ஐந்நூறு அடி உயரம் தூக்குவதற்கு எவ்வளவு சக்தி செலவழியுமோ, அவ்வளவு வேலையை இதயம் ஒவ்வொரு நாளும் செய்வதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கைக்குள் அடங்கக்கூடிய இதயம் இவ்வளவு வேலை செய்வது அதிசயத்திலும் அதிசயமாகும்!
Wednesday, October 31, 2012
நேரத்தில் சில விந்தைகள்!
ஒரு மணி நேரத்தில் 60 நிமிடங்கள் அடங்கியுள்ளன. ஒரு நிமிடத்தில் 60 வினாடிகள் அடங்கியுள்ளன. இம்மியளவு நேரமான வினாடியை நாம் அலட்சியம் செய்கிறோம். அதை நாம் பொருட்படுத்துவதில்லை. வீணாக்குகிறோம்.
ஆனால் வினாடி, உயிர்த்துடிப்பு நிறைந்தது. வினாடிப் பொழுதில் உலகில் எத்தனையோ அதிசயங்கள் நடந்துவிடுகின்றன.
அந்த வினாடியையும் தற்போது விஞ்ஞானிகள் எத்தனையோ ஆயிரம் பிரிவுகளாகப் பிரித்திருக்கின்றனர். கொஞ்ச காலத்துக்கு முன்பு வரை ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குதான் தெரிந்திருந்தது.
நிமிடங்களையும், வினாடிகளையும் ஒரு பொருட்டாகக் கருதாத நாம், ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்குக்கு மதிப்புக் கொடுப்போமா? இருந்தபோதும், வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு எவ்வளவு முக்கியமானது என்பதைத் தெரிந்துகொள்வோம்.
ஆகாய விமானங்களும், மோட்டார்களும், ரெயில் களும், செல்போனும் இல்லாத காலத்துக்கு நாம் கற்பனை ரதத்தில் பயணம் செய்து பார்ப்போம்.
இந்தக் காலத்தில் நேரம் போவது தெரியவில்லை. அவ்வளவு வேகமாக வாழ்க்கை சுழல்கிறது. ஆனால் அந்தக் காலத்தில் நேரம் போவது ஒரு யுகமாகத் தோன்றியது. பண்டைய நாட்களில் நேரத்தைத் துல்லியமாகத் தெரிந்துகொள்வதற்கான அவசியம் இல்லை. அலுவல கம் அல்லது பள்ளிக்குச் செல்வதற்கு நேரமாகிவிட்டது என்று எச்சரிக்கை செய்வதற்குக் கடிகாரங்கள் பிறக்கவில்லை.
பண்டைக் காலத்து மக்கள் நேரத்துக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்காவிட்டாலும், நேரத்தை அறிந்துகொள்ள விரும்பினர். அவர்கள் நேரத்தை அறிவதற்குச் சில உபாயங்களையும், சாதனங்களையும் உபயோகப்படுத்தினர். சூரியக் கடிகாரங்கள், மணல் கடிகாரங்கள் போன்றவை அந்தக் காலத்து மக்களுக்கு மிகவும் உபயோகமாக இருந்தன.
எனினும் இந்த இயற்கைக் கடிகாரங்கள், நிமிடங்களையோ, அவற்றின் பிரிவுகளாகிய வினாடிகளையோ தெரிவிக்கவில்லை. அவற்றைத் தெரிந்துகொள்ள வேண்டிய தேவையும் பண்டைக் காலத்து மக்களுக்கு ஏற்படவில்லை. நிமிட முள் 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், வினாடி முள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பும்தான் முதன்முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீப காலத்தில் நாம் தெரிந்துகொண்ட, வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தின் நுட்பங்களை அறிவோம். இவ்வளவு சிறிது நேரத்தில் என்ன நிகழ முடியும் என்ற அலட்சியமான எண்ணம் நமக்கு ஏற்படுவது இயற்கைதான். ஆனால் இந்த நுண்ணிய நேரத்தில் எத்தனையோ நிகழ்ச்சிகள் நடைபெறும். சில உதாரணங்களைப் பார்ப்போம்.
வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு என்ற இம்மி நேரத்தில் ஒரு ரெயில் சுமார் 2 செ.மீ. தூரம் செல்லும். அதே நேரத்தில் ஒலி சுமார் 34 செ.மீ. தூரமும், விமானம் ஒன்றரை அடியும் செல்லும். சூரியனைப் பூமி சுற்றிக் கொண்டிருக்கிறது அல்லவா? அது தனது சுழலும் பாதையில் சுமார் 40 அடி பயணம் செய்திருக்கும். ஒளியைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அதன் வேகம் மிக அதிகம் என்பது நமக்குத் தெரியும். வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு நேரத்தில் அது 300 கிலோமீட்டர் தூரத்தைக் கடந்திருக்கும்.
இன்னும் ஓர் உதாரணத்தை பார்க்கலாம். நம்மைச் சுற்றிலும் எண்ணற்ற உயிர்கள் உள்ளன. அவற்றுக்குச் சிந்திக்கும் திறன் இல்லை. எனினும் வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு அவற்றுக்கு முக்கியமாக இருக்கிறது. உதாரணமாக கொசுக்கள் இந்த நேரத்தில் 6 லட்சம் தடவை தமது சிறகுகளை அடித்துக்கொள்கின்றனவாம்.
நாம் பொதுவாக அறிந்த துரிதமான நேரம், `கண்ணிமைக்கும் நேரம்' என்பதுதான். இது உண்மையில் ஒரு வினாடியில் ஆயிரத்தில் 400 பங்குதான்!
Saturday, October 6, 2012
`ரத்த வங்கி' தொடங்கியது எப்படி
விபத்து அல்லது வியாதியால் ரத்தம் இழந்தவருக்கு ரத்தம் ஏற்றிக் காப்பாற்றுவது இன்று சாதாரண வழக்கமாக உள்ளது.
இந்த நடைமுறை, பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. ஆனால் அப்போதெல்லாம் ரத்தம் ஏற்றுவதால் சில சமயங்களில் நன்மை விளைந்தது, சில சமயங்களில் தீமை ஏற்பட்டது. விஞ்ஞானிகளுக்கு அது புதிராக இருந்தது. அதன் பின்பே, எல்லா மனித ரத்தமும் ஒரே தன்மை உடையதல்ல என்று விஞ்ஞானிகள் உணர்ந்தனர்.
ரத்தம் ஏற்ற வேண்டுமென்றால் ரத்தத்தைச் சேமிக்க வேண்டும். ஆனால் உடலிலிருந்து வெளியேற்றப்படும் ரத்தம் உடனே உறைந்து விடுகிறது. 1914-ல்தான் சோடியம் சிட்ரேட் என்ற ரசாயனப் பொருளை ரத்தத்தில் சேர்ப்பதன் மூலம் அதன் உறைவைத் தடுக்க முடியும் என்று கண்டுபிடித்தார்கள்.
ஆனால் நீண்ட காலத்துக்கு ரத்தத்தைச் சேமித்து வைப்பது எப்படி? ரத்தத்தில் மிதக்கும் செல்கள் சீக்கிரத்தில் இறந்து விடுவதைத் தடுப்பது எப்படி? 1932-ல் இதற்கு சோவியத் மருத்துவர்கள் வழி கண்டனர். குளிரூட்டும் பெட்டியில் ரத்தத்தைப் பாதுகாத்தால், அந்த செல்களை அழியாமல் காக்கலாம் என்று கண்டுபிடித்தனர். அதன் பிறகு ரத்தச் சேமிப்பு நிலையங்கள் என்ற ரத்த வங்கிகளை அமைத்து மக்களிடம் இருந்து ரத்த தானம் பெறும் வழக்கத்தை ரஷியர்கள் தொடங்கினர். அது உலகெங்கும் பரவியது.
1936-ம் ஆண்டு ஸ்பெயினில் பிராங்கே கலகக் கூட்டத்துக்கு எதிராக குடியரசுப் போராட்டம் நடந்தபோது டாக்டர் நார்மன் பிதின், ரத்தச் சேமிப்பு முறையைப் பயன்படுத்தி போர்க் களத்தில் பல வீரர்களுக்கு மறு உயிர் கொடுத்தார்.
பிதின் கனடா நாட்டுக்காரர். அவர் சோவியத் யூனியனின் ரத்தச் சேமிப்பு ஏற்பாடுகளைக் கற்றறிந்திருந்தார். இறுதியாக அமெரிக்க மருத்துவர்கள் பிளாஸ்மா தயாரிப்பில் வெற்றி கண்டனர். மிதக்கும் அணுக்கள் உள்ளிட்ட முழுமையான ரத்தம் தேவைப்படாத நோயாளிகளுக்கு பிளாஸ்மா கொடுக்கலாம். பிளாஸ்மாவைச் சேமித்துப் பாதுகாப்பதும், நோயாளிக்குக் கொடுப்பதும் எளிது. மேலும் ரத்தத்தில் பிரிவுகள் இருப்பதைப் போல பிளாஸ்மாவில் இல்லை. யாருடைய பிளாஸ்மாவையும் எவருக்கும் கொடுக்கலாம்.
Wednesday, September 26, 2012
கூரான பொருள் குத்துவது ஏன்?
கூரான ஊசி, பொருட்களின் ஊடே ஏன் சுலபமாகத் துளைத்துக்கொண்டு செல்கிறது என்று நீங்கள் வியந்ததுண்டா? துணியின் வழியாகவோ, அட்டையின் வழியாகவோ கூரான ஊசியை எளிதாகச் செலுத்த முடிகிறது. ஆனால் மழுங்கலான ஆணியைச் செலுத்துவது மிகவும் கடினமாயிருக்கிறதே, ஏன்? கூரான ஊசியைச் செலுத்தும்போது முழுச் சக்தியும் அதன் முனை மீது செலுத்தப்படுகிறது. ஆனால் மழுங்கலான ஆணியின் முனையின் பரப்பு அதிகமாயிருப்பதால் அதே சக்தி அதிகப் பரப்பின் மீது செயல்பட வேண்டியிருக்கிறது. எனவே, அதே சக்தியைச் செலுத்தினாலும், மழுங்கலான ஆணியால் எளிதாக துளைத்துச் செல்ல முடிவதில்லை.
அழுத்தத்தைக் குறிக்கும்போது சக்தியின் அளவை மட்டுமின்றி, அது செயல்படும் பரப்பின் அளவையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டும்.
ஒரு நபருக்கு 50 ஆயிரம் ரூபாய் சம்பளம் என்று சொன்னால் அதிலிருந்து இது அதிகமா, குறைவா என்று கண்டுகொள்ள முடியாது. ஏனெனில் இச்சம்பளம் மாதத்துக்கா, வருடத்துக்கா என்று நமக்குத் தெரியாது. அதுபோலவே ஒரு சக்தியின் செயல், அது ஒரு சதுர சென்டிமீட்டர் மீது பரவியுள்ளதா, ஒரு சதுர மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்குப் பரப்பின் மீது பரவியுள்ளதா என்பதைச் சார்ந்திருக்கிறது.
பனிச்சறுக்கு மட்டைகள் நம்மை பொலபொலப்பான வெண்பனியின் மீது எளிதில் எடுத்துச் செல்கின்றன. அவை இல்லாவிட்டால் நாம் பனியினுள் அழுந்திவிடுவோம். ஏன்?
பனிச்சறுக்கு மட்டைகளை அணிந்துகொள்ளும்போது உடல் எடை அதிகப் பரப்பின் மீது பரவியுள்ளது. மட்டைகளின் பரப்பு, நமது உள்ளங்கால்களின் பரப்பை விட 20 மடங்கு அதிகமாயிருக்கிறது என்று வைத்துக்கொண்டால், மட்டைகள் அணிந்திருக்கும்போது வெண்பனியின் மீது நாம் செலுத்தும் அழுத்தம், அவை இல்லாமல் இருக்கும்போது செலுத்தும் அழுத்தத்தை விட 20 மடங்கு குறைவாக இருக்கும். ஏற்கனவே கூறியபடி, பனிச்சறுக்கு மட்டைகளை நாம் அணிந்துகொண்டால்தான் வெண்பனி நம்மைத் தாங்கும். அவை இல்லாவிட்டால், பனியினுள் நாம்புதைய வேண்டியதுதான்.
Monday, August 27, 2012
பயமுறுத்தும் சுறாக்கள்
கரைக்கு வந்தால் நாம் சாப்பிடுகிறோம். நாம் கடலுக்குள் போனால் நம்மை அவை சாப்பிட்டு விடுகின்றன என்று மீன்களை பற்றி வேடிக்கையாக சொல்வார்கள்.
இதை கேட்கவும் வேடிக்கையாகத்தான் இருக்கும். அதேநேரம் சுறாமீன்கள் நம் நினைவில் வந்து மோதினால் கொஞ்சம் இதயம் ஜிலீரிடத்தான் செய்யும். சுறாக்களின் கடல் வேட்டை அந்த அளவுக்கு அபாயகரமானது.
இதோ நம்மை பயமுறுத்தும் சில சுறா வகைகள்.
சாஷார்க்:
இவை நீளமூக்கை உடையவை. நீந்திக் கொண்டிருக்கும் போதே தம் நீள மூக்கால் மோதி இரையை செயலிழக்க வைத்து விடும். பெரும்பாலும் சிறிய மீன்கள் தான் இதன் விருப்ப உணவு.
பாஸ்கிங்ஷார்க்
சுறா வகைகளில் இரண்டாவது பெரிய சுறாவான இது எப்போதும் தன் வாயைத் திறந்து கொண்டே நீந்தும். மூன்றடி திறந்திருக்கும் இந்த வாய்க்குள் பாசிவகைள், சிறு மீன்கள் உட்புகுந்து இரையின்தேவையை பூர்த்தி செய்து விடும். சராசரியாகஇந்த வகை சுறாக்கள் 20 அடி முதல்26 அடி வரைவளரும். ஆனால் அதிகபட்சமாக இவை 40 அடி நீளம் வளரும்.
சுத்தியல் தலை சுறா
சுத்தியல் தலை போன்ற தலை கொண்ட இந்த வகை சுறாக்கள் பார்வையாலேயே தூரத்தை நிர்ணயித்து விடுவதில் வல்லவை. இவை தனியாக போகாமல் கூட்டமாகவே போய் இரை வேட்டை நடத்தும். இவற்றுக்கும் பிரச்சினை. அதாவது வெயில் இவற்றுக்கு ஆகவே ஆகாது. அதிக வெயிலில் இதன் தோலின் நிறம் மாறும்.
அதை இவை நோயாக எண்ணிக்கொண்டு வெயிலுக்கு ஓடிஒளிந்து கொண்டிருக்கும் என்கிறார்கள், கடல் ஆய்வாளர்கள்.
பெரிய வாய் சுறா
இந்த சுறாவை முதலில் கண்டறிந்ததே 1976-ம் ஆண்டில் தான். 51/2 மீட்டர் நீளமும் 1200 கிலோ எடையும் கொண்டவை இவை. இதுவும் வாயைத் திறந்து கொண்டு தான் நீந்தும். இவற்றின் விருப்ப உணவு ஜெல்லி மீன்கள், பாசிகள்.
நீளவால் சுறா
உடம்பில் பாதியை வாலாக கொண்டிருக்கும் இந்த வகை சுறாக்கள் அதிகபட்சம் 15 அடி வரை வளரும். இவை தன் வாலால் அடித்து தன் இரை மீன்களை திகைக்க வைக்கும்.அந்த அதிர்ச்சியில் இருந்து அவை சுதாரித்து தப்புவதற்குள் இந்த சுறாவின் அன்றைய இரைப்பட்டியலில் இணைந்து விடும்.
***