Showing posts with label சிந்தனைகள். Show all posts
Showing posts with label சிந்தனைகள். Show all posts

Saturday, July 2, 2016

மிரளவைக்கும் லைஃப் ஸ்டைல்! - அத்துமீறும் ஆடம்பரம்...

“படிக்க வேண்டிய வயசுல பல்சர் கேக்குறாங்க. பைக் ரேஸ், மது, புகை, காஸ்ட்லீ மொபைல் எனச் சுத்துறாங்க. முகத்தைப் பார்த்துப் பேசுறதைவிட முகநூலில்தான் அதிகமா இருக்காங்க. சுருக்கமாச் சொல்லணும்னா... நல்ல வாழ்க்கையைவிட, ஆடம்பரமான வாழ்க்கையைத்தான் இன்றைய தலைமுறை பசங்க எதிர்பார்க்குறாங்க.

Monday, May 2, 2016

மேல் தட்டு மக்களிடம் கற்க வேண்டியவை!

செல்வம் மற்றும் செல்வாக்கு மிக்கவர்களை பார்த்து, பொறாமைபட தெரிந்த அளவிற்கு, அவர்களது வெற்றி ரகசியங்களை அறிந்து கொள்ளத் தெரியவில்லை நம்மவர்களுக்கு!
'எவ்வளவு தேறும் இவருக்கு...' என்று கேட்கத் தெரிந்த அளவிற்கு, 'இவர்களைப் போல நாமும் வர வேண்டாமா...' என்று உந்து சக்தியாக பயன்படுத்திக் கொள்ளத் தெரிவது இல்லை.

Tuesday, October 20, 2015

நம்பிக்கை துரோகம் எவ்வாறு நிகழ்கிறது, ஏன்?

அவன் இப்படி நடந்துக்குவான்னு, நான் கனவுல கூட நினைக்கலை...'
'அவளை அவ்வளவு நம்பினேன்; இப்படி கழுத்தறுப்பாள்ன்னு நான் நினைச்சு கூட பார்த்ததில்லை...' என்று இப்படிப்பட்ட வாக்கியங்களை, நீங்கள், வாழ்வில் இதுவரை உச்சரிக்காதிருந்தால், இதுபற்றி எனக்கு மகிழ்ச்சி.
ஆனால், பெரும்பாலானவர்களின் வாழ்க்கைப் பாதைகளில், எண்ணற்ற நம்பிக்கை துரோகங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன.
நான் சொல்லப் போவது பழைய உதாரணம் தான்.
ஒரு

Wednesday, October 14, 2015

குறை கூறினால் கோபம் வருகிறதா?

நாம் எவருமே விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட தேவதைகள் அல்லர். ஆனால், ஏனோ நமக்கு மனதின் அடித்தளத்தில் படிந்து விட்ட உணர்வு, நம்மை எவரும் விமர்சிக்கவே கூடாது என்பது. நாம் எப்போதும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்கிற உணர்வு மிக
தவறானது.
'நீங்க படிக்கட்டுல தடுமாறி விழுந்திங்களே... அதை கவனிச்சேன்; என்னமாய் விழுந்தீங்க தெரியுமா... வேற எவனாச்சும் இப்படி விழுந்திருந்தால், பல்லுப் படுவாயெல்லாம் உடைஞ்சிருக்கும்; எலும்பெல்லாம் முறிஞ்சிருக்கும்...' என்று படு செயற்கையாக ஒருவர் விழுந்ததைக் கூட பாராட்ட, 'அப்படியா சொல்றீங்க?' என்று முகம் பூரித்துப் போகும் முகரக் கட்டைகளும் இருக்கத் தான் செய்கின்றன.

Monday, September 14, 2015

சுயநலம் எவ்வளவு கொடுமை என்பது அனுபவித்தவர்களுக்கு தெரியும்

நண்பர்கள் என்றால் நல்லா பேசுவர், நம்முடன் நேரம் செலவழிப்பர்; நம்மிடமிருந்து அனைத்தையும் பகிர்ந்து கொள்வர். ஆனால், சிலர் தனக்ெகன்று ஒரு வேலையோ, வாய்ப்போ, வாழ்க்கையோ வந்து விட்டால், மிக சுயநலமாய், அப்படியே கழட்டிவிட்டுவர். சுயநலம் என்பது எவ்வளவு கொடுமை என்பது, அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும்.
இவர்கள், நான் உனக்கு இதைச் செய்தால், நீ எனக்கு அதைச் செய் என, ஒப்பந்தத்தை மனதுக்குள் வைத்து கொள்வர். நீ மட்டும் அதைச் செய்தால், நான் உனக்காக இதைச் செய்துவிடுவேன் என, பதிலுக்கு பதில் செய்யத்தான் கணக்கு போடுவர். நட்புகளுக்கு இடையில் மட்டுமல்ல, சொந்தங்களுக்கு, உறவுகளுக்கு இடையிலும் இப்படி நடந்துக் கொள்வோர் இருப்பர்.பிறப்புக்கும், இறப்புக்கும் இடையே, நாம் வாழும் வாழ்வு அர்த்தமானதாக இருக்க வேண்டும். வாழ்ந்தோம் எனும் சொல்லுக்கும், வாழ்வு எனும் சொல்லுக்கும் ஒரு சிறப்பான அர்த்தம் இருக்கிறது. ஏதோ வாழ்ந்தோம் என்றில்லாமல், பலருக்கும் அர்த்தமாக, உதாரணமாக வாழ்ந்தோம் என்று, வாழ்வு இருக்க வேண்டும்.

Wednesday, September 9, 2015

மனமே... ரிலாக்ஸ்!

வேலை, வேலை, வேலை என்று எப்போதும் சுற்றிக் கொண்டிருக்காமல், இடையிடையே மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வது நல்லது.
யாரிடம் பேசினால், உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ, அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள், உங்கள் மனதுக்கு தெளிவைத் தரும்.
ஏற்றுக் கொள்ளுங்கள்: இந்த உலகத்தில், ஒருவரே எல்லாவற்றையும், தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட; மலையைத் தலையால் முட்டி உடைக்க முடியாது. ஆனால், சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில், உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.

Tuesday, August 25, 2015

பிரச்னைகளில் விலகி நின்று யோசியுங்கள். தீரும்!

இடுக்கண் வருங்கால் நகுக அதனை
அடுத்தூர்வது அது ஒப்ப நில்!
இந்த குறளுக்கு நமக்கு கண்டிப்பாய் விளக்கம் தெரிந்திருக்கும். நமக்கு துன்பம் வரும் போது சிரிக்க வேண்டும், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; அந்த மகிழ்ச்சியே, அந்த துன்பத்தை தூர காணாமல் போக்கிவிடும். அந்த துன்பத்திற்கு நிகர், அந்த நேர மகிழ்ச்சி தான்.
சமீபத்தில் ஒரு வாழ்வியல் பயிற்சி முகாமில் கலந்து கொண்டேன். இதற்கான ஒரு புது விளக்கம், நாம் ஒத்துக் கொள்கிற மாதிரி, வேறு விதமாக கூறப்பட்டது ஆச்சரியமாக இருந்தது.
'இடுக்கண் வருங்கால் நகுக' என்றால், - துன்பம் வரும்போது நகர்ந்து விடுங்கள் என அர்த்தம்.
அதற்காக, 'துன்பத்தை பார்த்து பயந்து ஓடி விடுங்கள்' என்று நேர் அர்த்தம் கொள்ளக் கூடாது; அந்த துன்ப மனநிலையிலிருந்து நகர்ந்து, தள்ளி நின்று, அந்த பிரச்னையை - துன்பத்தை கவனியுங்கள்; தீர்வு கிடைக்கும் என்பதாக விளக்கம் கூறினர்.
இது எவ்வளவு தூரத்திற்கு உண்மை,

Monday, August 24, 2015

சாதிக்க விருப்பமா.. அவமானப்படுங்கள்

என்னை நானே யாரென்று
புரிய எனக்கு தேவைப்படும்
ஓர் ஆயுதம் தான் அவமானம்!
இது உண்மை என்பது போல்,
அனைவரின் வாழ்விலும் ஏதாவது ஒரு சம்பவம் நடந்திருக்கும்.  அவமானங்கள் தான், நம்மை திசைமாறச் செய்கின்றன. அப்படி மாறுகிற திசை சரியாக அமைய வேண்டும். அதில் தான் நாம் கவனமாக இருக்க வேண்டும். அப்படியே அந்தஅவமானத்தில் கூனிக் குறுகி நின்று விடக் கூடாது. வெற்றியாளர்களின் ஆரம்ப கட்ட அடிதளமே, ஏதாவது ஒரு அவமானத்தில் தான் ஆரம்பித்து இருக்கும். அவர்கள் உயருவதற்கான படிக்கட்டுகளில் இந்த அவமானத்திற்கும், ஓர் இடம் இருந்திருக்கும்.
நம்மை அவமானப் படுத்து வோரை பார்த்து பாதிப்படையக் கூடாது; அவர்களுக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். அவமானம் என்பது தோல்வி என எடுத்துக் கொள்ளக் கூடாது. இது இழிவும் அல்ல; ஒரு பாடம். நம் வாழ்க்கையில் வெற்றிகளுக்கு மட்டுமல்ல; தோல்விகளுக்கும், இந்த மாதிரி அவமானங்களுக்கும் இடம் உண்டு. உங்களை உருவாக்குவதில் அந்த அவமானங்களுக்கு இடமில்லை என்று நினைக்காதீர்கள். ஏற்பட்ட அவமானங்களுக்காக குமைந்து கொண்டிருக்காதீர்கள். நம் வாழ்வில் தவறுகள் என்கிற காற்று அடிக்கும்போது, அவமானம் போன்ற புழுதிகள் கிளம்பத் தான் செய்யும்.
நாம் வாழ்க்கையில், மற்றவர்களை விட ஏதாவது ஒரு காரியத்தில் வேறுபட்டு சாதிக்க வேண்டுமெனில், பல அவமானங்களை சந்தித்து தான் ஆகவேண்டும்.
நம் மீது குப்பையையும், சாணத்தையும் கொட்டுகின்றனரே என்று, செடி ஒருநாளும் நம்மைப் போல் ஆதங்கப்படுவதில்லை; அழுது ஆர்ப்பாட்டம் செய்வதில்லை. அந்த குப்பையை தனக்கான உயிர்ச்சத்தாக எடுத்துக் கொண்டு, பூக்களை, காய், கனிகளை தருவதில்லையா! நாம் அந்த செடியை போல இருக்க வேண்டாமா? மற்றவர்களின் ஏளனங்களையும், அவமானங்களையும் உரமாக ஏற்று, வெற்றி நோக்கி செல்ல வேண்டாமா?
உங்களுடைய குறைகளை சொல்லி மற்றவர்கள் இன்று அவமதித்தாலும், நாளை உங்கள் வெற்றியை பார்த்து பூரிப்படைந்து, நல்ல வாழ்த்தையும் அவர்களே சொல்வர்! ஆனால், ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்... 'நம்மை இவ்வளவு அவமானப்
படுத்துகின்றனரே...' என்று மட்டும் சோர்ந்து உட்கார்ந்து விடாதீர்கள்.
சோர்ந்து போகாதீர்
அப்படி ஒவ்வொரு துறையிலும் அவமானப்பட்டவர்கள் உட்கார்ந்து விட்டால், சமுதாயத்தில் வெற்றியாளர்களே உருவாக முடியாது; இப்போது இருக்கும் வெற்றி
யாளர்களும் உருவாகியிருக்க மாட்டார்கள்.
எல்லாவற்றிலும் முதல் முயற்சியில் வெற்றி கிடைக்கும் என, எதிர்பார்ப்பது எவ்வளவு முட்டாள்தனமோ, அதைவிட பெரிய முட்டாள்தனம், ஒரு அவமானத்தை கண்டு சோர்ந்து போய், அந்த காரியத்திலிருந்து விலகிவிடுவது.
மனித இனத்தை தவிர, மற்ற ஜீவராசிகள் எதையும் அவமானமாக எடுத்துக் கொள்வதில்லை. மனிதன் தான் ஒரு விஷயத்தில் அவமானப்பட்டால் துவள்வதும், அந்த வேலையே வேண்டாமென ஓடிப் போவதை வழக்கப்படுத்திக் கொள்கிறான்.
ஆகவே, அவமானப்படுவது ஒன்றும் பெரிய தப்பில்லை. இப்போது சொன்ன விஷயங்கள் அனைத்துமே, நல்ல விஷயங்களுக்கு மட்டுமே... வேறு மாதிரியான காரியங்களுக்கு, நாங்கள் பொறுப்பல்ல!

Monday, July 20, 2015

நாட்களை செயல்களால் நிரப்புவோம்!

இப்போது தான் புத்தாண்டு பிறந்தது போல் இருக்கிறது. அதற்குள் பாதியை கடந்து விட்டோம். புது ஆண்டு பிறந்த போது, என்னென்னவோ தீர்மானம் செய்து, சபதமும் செய்தோம்.
ஆனால், 'கடந்த மாதங்களில் என்ன சாதித்தோம்...' என்று நினைத்துப் பார்த்தால், சிலரால் தான் திருப்திப்பட்டுக் கொள்ள முடியும்.
சாதித்த திருப்தியை வெளிப்படுத்தக் கூடியவர்கள் கூட, 'உடன் இருப்போரின் தொந்தரவால் தான், இந்த அளவாவது சாத்தியமாயிற்று...' என்பர்.
உங்களது சொந்த வாழ்வில், சுய முயற்சியில், கடந்த ஆறு மாத பணிகள் திருப்திகரமா இருந்தனவா என்று கேட்டால், 'வீட்டுல இருக்கறவங்களோட நச்சரிப்பு தாங்க முடியாம தான் இதெல்லாம் செய்ய முடிந்தது; இல்லா விட்டால் எதுவும் சாத்தியப்பட்டிருக்காது...' என்று உதட்டை பிதுக்கு கின்றனர்.
ஆக, வெளியிலிருந்து வந்த நெருக்கடிகள் தான், இவர்களை உசுப்பியிருக்கின்றனவே தவிர, சுயமாக, ஆர்வமெடுத்து சாதித்தவை என்றால், கோணித்துணியிலே வடிகட்டப்பட்ட பழச்சாற்றின் கதையாக, குடிக்கிற பாத்திரத்திற்கு ஏதோ சொட்டு சொட்டாகத் தான் வந்திருக்கிறது என்பது தெளிவாகிறது.
மிக குறுகிய காலமே வாழ்ந்த பாரதியும், விவேகானந்தரும், ஜான்சி ராணியும் சாதித்தவை மகத்தானவை! 80 - 90 வயது வரை வாழ்ந்து, பூமிக்கு பாரமாய் இருந்தவர்கள், வரலாற்றுப் பக்கங்களில், ஒரு வரி கூட தேற மாட்டார்கள்.

Saturday, June 13, 2015

தோல்வியை கொண்டாடுங்கள்

தோல்வி என்றால் என்ன; போட்டியில் தோற்பது தான்
தோல்வி என, நினைக்கின்றனர். உண்மை அதுவல்ல.
ஏதாவது ஒரு காரியத்தை எடுத்து அதை முழுமையாக முடிக்காமல் விடுவதும் தோல்விதான். இலக்கும், திறமையும் ஒத்துப் போகாத போது, செயலை முடிக்க முடியாது. தோல்வி ஏற்படும்.

Tuesday, May 12, 2015

மாற்றம் ஒன்றே மாறாதது

இரவு பகலாகிறது; பகல் இரவாகிறது. கோடை போய் குளிர் வருகிறது; வறட்சி போய் வெள்ளம் வருகிறது. பூ காயாகிறது; காய் கனியாகிறது; கனி செடியாகிறது. குழந்தை பெண்ணாகிறாள்; பெண் தாயாகிறாள். இளமை மாறி முதுமை ஆட்சி செய்கிறது. இதைத்தான் மாற்றம் ஒன்றே மாறாதது என்கிறோம்.
மாற்றம் மட்டும்தான் நிரந்தரம். அனைத்து உயிரினங்களும், அவற்றுக்கே உரித்தான குணங்கள் மற்றும் பண்புகளை உள்ளடக்கியிருக்கின்றன. அவை நிலையானது என, நம்பப்படுகிறது

Monday, May 11, 2015

மனமே இன்பமாய் இரு

நாட்டின், மொத்த மக்கள் தொகையில், 10 சதவீதம் பேருக்கு மனநோய் அல்லது மன அழுத்தம் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மன அழுத்தம் என்பது ஒரு மனநோய்.
மன அழுத்தம் ஏற்படும் போது அழுகை, சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் உணர்ச்சி வசப்படுதல், எந்த நேரமும் சோகமாகவும், தனிமையாகவும் இருப்பது ஆகியவை நடக்கும். இவை சாதாரண மன அழுத்தத்திற்கான அறிகுறிகள்

Thursday, April 30, 2015

மறப்போம் மன்னிப்போம்

'மறந்து விட்டேன், மறந்து போனது, அச்சச்சோ! இப்படி மறந்து போகிறேனே' என்று அங்கலாய்க்கிறோம். ஒரு விஷயத்தை நினைவில் நிறுத்தத்தான் முயல்கிறோம், முயல வேண்டும் என்றும் சொல்கிறோம். ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு விஷயத்தை மறப்பதற்கு தான் உண்மையில் முயல வேண்டி இருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் அனுபவங்களை மறக்க முடியாமல் தான் துன்பப்படுகிறோம்; துன்பப்படுத்துகிறோம்.

Monday, April 13, 2015

உறவுகளை சார்ந்திருங்கள்

உயிர் உள்ளது, உயிர் அற்றது என்று, உலகில் உள்ளவற்றை பிரிக்கலாம். உயிர் உள்ள அனைத்தும், உணர்வை வெளிப்படுத்துகின்றன. உணர்வுகளை வெளிப்படுத்துவதால் உறவுகள் ஏற்படுகின்றன. அடுத்த கட்டமாக, உணர்வுகளை பகிர்ந்து கொள்வதும் அவசியமாகிறது. இப்படித் தான், அறிவு மற்றும் எண்ணங்கள் பரிமாறப்படுகின்றன.

Tuesday, March 24, 2015

தேர்வுமுடிவுகள் மட்டுமே வாழ்க்கையா

அறிவு என்பது, அனுபவம் மூலம் கிடைப்பது. மனிதன், தனது அனுபவம் மட்டுமல்லாது, பிறரது அனுபவங்களில் இருந்தும் கற்றுக் கொள்கிறான்.
புத்தகம் என்பது, பிறரது அனுபவங்களின் தொகுப்பு. ஒரு மனிதனின் அறிவை,
சக மனிதன் தனக்கும் சமூகத்திற்கும், பயன்படுத்தி கொள்கிறான். அதற்கு பெயர்தான் வேலை அல்லது தொழில்.

Monday, March 23, 2015

பிரேக் இல்லாத வாகனமா நீங்கள்?

நிறையப் பேருக்கு தெரியாத ஒரு உண்மையை சொல்லட்டுமா? கப்பலுக்கு, 'பிரேக்' கிடையாது.
ஓர் இடத்தில், கப்பலைச் சரியாக நிறுத்த, ஒரு கப்பலோட்டி எவ்வளவு சிரமப்படுவார் தெரியுமா... கப்பல் ஓட்டுவது அவ்வளவு எளிதல்ல; கப்பல் மோதி, திமிங்கலங்கள் இறப்பதும்; சிறு படகுகள் சிதறுவதும் இதனால்தான்.
ஆனால், பிரேக் இல்லாத மனிதக் கப்பல்களோ, தங்களைத் தான் முதலில் சேதப்படுத்திக் கொள்கின்றன.
'அவன் யார் பேச்சும் கேட்க மாட்டான்; அவனுக்கு என்ன தோணுதோ, அதைத் தான் செய்வான். நாங்க எவ்வளவோ சொல்லி பாத்துட்டோம் திருந்துறதாத் தெரியல...' என்று, தங்கள் குடும்ப உறுப்பினர் பற்றி, மற்றவர்கள் புலம்பும் வார்த்தைகள் உங்கள் காதுகளைக் கடந்து போயிருக்கும்.

Tuesday, January 27, 2015

வரிசை மீறலாம்... தப்பில்லை

உலகம் முறைப்படி இயங்க வேண்டும் என்பதற்காகவே, சில நடைமுறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன. எதுவும் ஒழுங்காக, முறையாக நடக்கும் பட்சத்தில், ஏற்றத்தாழ்வுகள் களையப்படும். இதனால், முரண்பாடுகள், சலுகைகள் ஆகியவற்றிற்கு வழி இருக்காது. இதற்காக ஏற்படுத்தப்பட்டதே வரிசை முறை! வரிசை முறையில், வலியவன், எளியவன் என்ற பாகுபாடு அறவே இருக்காது.

Tuesday, November 11, 2014

உங்கள் உணவில் விஷம்! பூச்சிக்கொல்லி பயங்கரம்

ந்தப் பூமியை ஒரு நஞ்சுப்படலம்போல சூழ்ந்திருக்கின்றன பூச்சிக்கொல்லி மருந்துகள். பெயர்தான் 'பூச்சிக்கொல்லி...’, அவை உண்மையில் அழிப்பது சுற்றுச்சூழலைத்தான். இதில் சமீபத்திய வரவு ஐந்தாம் தலைமுறை பூச்சிக்கொல்லிகள். பூச்சிகளுக்கும் மனிதனுக்கும் நடக்கும் யுத்தத்தில், பூச்சிகளின் தொடர் வெற்றியைச் சகித்துக்கொள்ள முடியாத மனிதன் கண்டுபிடித்த கொடிய நஞ்சு இது.  

தற்போது தெளிக்கப்படும் பூச்சிக்கொல்லிகளில் வீரியம் குறைந்தது எண்டோசல்பான். இந்தப் பூச்சிக்கொல்லி ஏற்படுத்திய பேரழிவுக்கு உதாரணம், கேரளா மாநிலத்தில் உள்ள காசர்கோடு பகுதி. ஒரு காலத்தில் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாக இருந்த காசர்கோட்டில் மாநில அரசுக்கு சொந்தமான முந்திரித் தோப்புகளில், 1978-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை ஹெலிகாப்டர் மூலமாக எண்டோசல்பான் தெளிக்கப்பட்டது. அதன் பலன், இன்றைக்கும் அந்தப் பகுதியில் மனிதர்களும் கால்நடைகளும் நரம்பு மண்டலப் பாதிப்பு, மனநலப் பாதிப்புகளுடன் நடைபிணங்களாகத் திரிகிறார்கள். வீரியம் குறைந்த எண்டோசல்பானுக்கே இப்படி என்றால், தற்போது பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லிகள் அதைவிட பல மடங்கு வீரியமானவை. பசுமைப் புரட்சியின் விளைவாக கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக, நாடு முழுவதும் அபரிமிதமாக அதிகரித்துவிட்ட ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்பாடு, பல்வேறு நோய்களாக விகார விஸ்வரூபம் எடுக்கின்றன!

கோவில்பட்டியில் உள்ள மண்வளப் பரிசோதனை நிலையத்தின் வேளாண் அலுவலரும் பூச்சியியல் வல்லுநருமான நீ.செல்வம் இது தொடர்பாக விவரிப்பவை அனைத்தும் அதிரவைக்கும் உண்மைகள்...

Sunday, July 13, 2014

வீட்டிலேயே செய்யலாம் ஆஹா... யோகா

 

30 வயதைத் தாண்டினாலே நம் நரம்புகளுக்குள் மெல்லிய பதட்டம் ஊடுருவத் தொடங்குகிறது. அண்டை வீட்டுக்காரர், அலுவலக நண்பர்கள், எப்போதேனும் சந்திக்க நேர்கிற பால்யகால நண்பர்கள் என யாருக்கேனும் ஷ§கரோ பி.பி.யோ இருந்தால், உடனே அவரை நம்முடன் ஒப்பிடத் தொடங்குகிறோம். ஒருபுறம் வாய்க்கு ருசியான உணவுகளை உண்ணத் துடிக்கிற நாக்கு,.. இன்னொருபுறம் சுற்றியுள்ள சூழலில் பிரமாண்டமாய் எழுந்து நிற்கும்  நம் ஆரோக்கியம் குறித்த அச்சம்... இரண்டுக்கும் இடையில் அல்லாடிப் போகிறோம். நமது முன்னோர்களின் உடல் உழைப்பு கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்துபோய், கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத, வியர்வை சிந்துவதை நினைத்துப் பார்க்கவே முடியாததாய் மாறிவிட்டது நம் வாழ்க்கைமுறை.

ஒரு கட்டத்துக்குப் பிறகு டாக்டரிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்குவது என்பது அத்தியாவசியக் கடமைகளில் ஒன்றாகிவிடுகிறது. ஆனால், இப்படி நோய்வாய்ப்பட்டுக் கிடப்பதைவிட, கொஞ்சம் மெனக்கெட்டு, அதே உடலை யோகாசனம் செய்யப் பழக்கப்படுத்தினால் மருத்துவச் செலவும் மிச்சம். மன உளைச்சலும் இல்லை. இதற்காகத் தனி இடம் தேடி அலையவேண்டியதும் இல்லை.

வீட்டிலேயே செய்யக்கூடிய எளிமையான யோகாசனப் பயிற்சிகளை சென்னை, திருவல்லிக்கேணி விவேகானந்தா கேந்திராவின் யோகப் பயிற்சியாளர் தங்கலட்சுமி விவரிக்க, மற்றொரு பயிற்சியாளரான நளினி அருமையாக அவற்றைச் செய்து காட்டினார்.

எளிய பயிற்சிகளைச் செய்யுங்கள். இனிய வாழ்க்கைக்கு மாறுங்கள்!

   இனியெல்லாம்... 'யோக'மே!

சுவாசப் பயிற்சிகள்!

Monday, March 10, 2014

சந்தோஷமாக வாழ என்ன வழி

'அறிவாளிகள் பிரச்னைகளைத் தீர்க்கிறார்கள். மேதைகள் பிரச்னை களைத் தவிர்க்கிறார்கள்' - இப்படியொரு ஆங்கிலப் பொன்மொழி உண்டு. நீங்கள் அறிவாளியா? மேதையா? பிரச்னை... பிரச்னை... பிரச்னை... எல்லாருக்கும் எப்போதும் ஏதோ ஒரு பிரச்னை. அதை எப்படித் தீர்ப்பது என்கிற தவிப்பு. அது தீர்வதற்குள் இன்னொரு பிரச்னை... பிறகு அதன் பின் ஓட்டம்... இப்படியே வாழ்நாள் முழுக்க பிரச்னை... பிரச்னை... பிரச்னைகளைத் தீர்க்கும் வழிகளைப் பற்றி யோசிப்பதற்குப் பதில், அதை ஒதுக்கித் தள்ளிவிட்டு, சந்தோஷமாக வாழ என்ன வழி என யோசித்துப்பாருங்களேன்... தீர்வுகளைத் தேடாமலேயே உங்கள் பிரச்னைகள் காணாமல் போகும்!பிரச்னை என்று வருகிற பலரும், 'எங்களால இனியும் ஒண்ணா இருக்க முடியாது. பிரியறதுதான் தீர்வு' என்கிற முடிவுக்குத் தயாராக இருக்கிறார்கள். 'பஞ்சாயத்து பண்ணுகிறேன்' என்கிற பெயரில், அவர்களுக்குச் சமரசம் பேச வருகிறவர்களும், இருவரிடமும் அவரவர் தரப்பில் என்ன பிரச்னை எனக் கேட்டு, அதைத் தீர்ப்பதற்குப் பதில், பெரிதாக்கவே செய்கிறார்கள். அதைத் தவிர்த்து, பிரச்னைகளை ஒரு பக்கம் அப்படியே ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் உறவை நெருக்கமாக்குவதில் கவனம் செலுத்திப் பாருங்கள்.