ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன்களுக்கான புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஐ.ஓ.எஸ்.10, சென்ற செப்டம்பர் 13 அன்று, மிகப் பெரிய அளவிலான மாற்றங்களுடன் வந்துள்ளது. இது குறித்த அறிவிப்பு சென்ற ஜூன் மாதம், ஆப்பிள் சிஸ்டங்களுக்கான டெவலப்பர்கள் மாநாட்டில் வெளியானது. இந்தப் புதிய பதிப்பு பல புதிய வசதிக
நான் பார்த்த,படித்த எனக்கு பிடித்த செய்திகள், கட்டுரைகள்,துணுக்குகள்,வீடியோ,போட்டோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்
Tuesday, September 27, 2016
Friday, September 23, 2016
மொபைல் போன் பாதுகாப்பு வழிகள்
ஒரு சில விநாடிகள் ஒதுக்கி, ஒரு நாளில் எத்தனை மணி நேரம் நீங்கள் உங்கள் ஸ்மார்ட் போனைப் பயன்படுத்துகிறீர்கள் என எண்ணிப் பாருங்கள். சராசரியாக, ஒருவர் குறைந்தது நான்கு மணி நேரம், ஒரு நாளில் பயன்படுத்துவதாகக் கணக்கிட்டுள்ளனர். நண்பர்களை அழைத்துப் பேச, வரும் அழைப்புகளை ஏற்றுப் பேச, உள்ளூர் கடையில் பொருட்கள் வாங்க, அது இலவசமாகத் தரும் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்திட, நமக்கான பொருட்கள் வாங்கிட எனப் பல்வேறு பணிகளை முடிக்க, ஸ்மார்ட் போன்கள் பயன்படுகின்றன. படங்களை எடுக்க, விடியோ படங்களைத்
Thursday, September 1, 2016
ஆண்ட்ராய்டு போனில் அழிந்து போன காண்டாக்ட்களை மீட்பது எப்படி.??
Saturday, May 28, 2016
ஸ்மார்ட் போனில் கூகுள் டுயோ வீடியோ அழைப்பு
அண்மையில் நடந்த கூகுள் டெவலப்பர் கருத்தரங்கில் (Google I/O 2016), Duo app என்னும் அப்ளிகேஷனை அறிமுகப்படுத்த இருப்பதாக, கூகுள் அறிவித்துள்ளது. மக்கள் ஒருவருக்கொருவர் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தின் இன்னொரு செயல்பாடாக, இந்த அப்ளிகேஷன் உருவாக்கப்பட்டு தரப்பட இருக்கிறது. இந்த அப்ளிகேஷன், மொபைல் போன்களில் இயங்கும், ஒன்றுக்கொன்று
Friday, May 27, 2016
ஆண்ட்ராய்ட் போனில் பாதுகாப்பு
ஸ்மார்ட் போனை இயக்கும் ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், 'லாக் ஸ்கிரீன்' என நாம் அழைக்கும் ஸ்கிரீன் மிக முக்கியமான ஒன்றாகும். அத்துடன் அதனைப் பாதுகாப்பாக வைப்பதும் மிக முக்கியமான ஒன்றாகும். ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில், லாலிபாப் பதிப்பு வந்த பின்னர், இந்த ஸ்கிரீனைப் பாதுகாப்பது மிகவும் எளிமையான ஒன்றாக மாறிவிட்டது. இந்த வகையில் ஏற்கனவே இருந்த சில வழிமுறைகள் எல்லாம் எடுக்கப்பட்டுவிட்டன; அல்லது வேறு இடங்களில் வைக்கப்பட்டுவிட்டன. எடுத்துக் காட்டாக, லாக்
Friday, March 25, 2016
மொபைல் போனில் "ட்ரூ காலர்”
நம் ஸ்மார்ட் போனில், அழைப்பு ஒன்று வருகிறது. அழைக்கும் எண் நம் போனில் பெயருடன் பதியப்படாமல் இருந்தால், அழைப்பது யாரென்று தெரியாது. யாரென்று தெரிந்தால், அவர் தவிர்க்கப்பட வேண்டிய நபர் என்றால் தவிர்க்கலாம். ஆனால், எப்படி புதிய, பதியாத எண் யாருடையது என்று தெரிந்து கொள்வது? இவர்களுக்கு உதவும் வகையில், ஸ்மார்ட் போனில் இயங்கும் செயலியாக இருப்பது, “ட்ரூ
Tuesday, December 29, 2015
ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனுக்கான அறியப்படாத குறிப்புகள்
ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தில் இயங்கும் ஸ்மார்ட் போன் வாங்கியவுடன், நாம் விரும்பும் செட்டிங்ஸ் வகைகளை அமைத்து உடன் இயக்கத் தொடங்குகிறோம். சில வசதிகளுக்கு, நண்பர்களை நாடுகிறோம். ஆனால், பெரும்பாலானவர்கள், போனுடன் வரும் 'மேனுவல்' என்னும் இயக்கக் குறிப்புகள் அடங்கிய சிறு நூலைப் படிப்பதில்லை. எளிதாகப் படிக்கும் வகையில், அவை பெரிய எழுத்துக்களில் இல்லாமல், பக்கங்களைக் குறைத்துத் தர வேண்டும் என்ற இலக்குடன் சிறிய எழுத்துகளில், ஏதோ பெயருக்குத் தரப்படுவதாக இருப்பதுவும் ஒரு வழக்கமாக உள்ளது.
இங்கு அத்தகைய குறிப்பு நூல்களில் கூடத் தரப்படாத, நமக்கு அதிகம் பயன்தரக் கூடிய சில அமைப்பு குறிப்புகளைப் பார்ப்போம்.
அறிவிப்புகளை உடனே அறிய :-
Thursday, December 3, 2015
அடக்க முடியாத ஆண்ட்ராய்ட் மால்வேர்
ஆண்ட்ராய்ட் சாதனங்களின் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் வல்லுநர்கள், அண்மையில், புதிய வகை மால்வேர் புரோகிராம் ஒன்று வேகமாகப் பரவி வருவதனைக் கண்டறிந்துள்ளனர். இதன் வழிகளைச் சரியாகக் கண்டறிந்து, கட்டுப்படுத்தும் புரோகிராம்களை உருவாக்க முடியவில்லை என்று, இதனை உணர்ந்த Ars Technica என்னும் ஆய்வு மைய நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இந்த மால்வேர் புரோகிராம், பிரபலமான ஓர் அப்ளிகேஷன் புரோகிராம் போலத் தன்னைக் காட்டிக் கொள்கிறது. இதனை, ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், தரவிறக்கம் செய்து, பதிந்தவுடன், போனுடைய அடிப்படைக் கட்டமைப்பினையே மாற்றி, இன்னும் பல கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்கு வழியை ஏற்படுத்தித் தருகிறது. இதனை, நீக்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை தோல்வியில் முடிந்துள்ளன.
அடக்க முடியாத ஆண்ட்ராய்ட் மால்வேர்
ஆண்ட்ராய்ட் சாதனங்களின் பாதுகாப்பு தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் வல்லுநர்கள், அண்மையில், புதிய வகை மால்வேர் புரோகிராம் ஒன்று வேகமாகப் பரவி வருவதனைக் கண்டறிந்துள்ளனர். இதன் வழிகளைச் சரியாகக் கண்டறிந்து, கட்டுப்படுத்தும் புரோகிராம்களை உருவாக்க முடியவில்லை என்று, இதனை உணர்ந்த Ars Technica என்னும் ஆய்வு மைய நிர்வாகிகள் அறிவித்துள்ளனர். இந்த மால்வேர் புரோகிராம், பிரபலமான ஓர் அப்ளிகேஷன் புரோகிராம் போலத் தன்னைக் காட்டிக் கொள்கிறது. இதனை, ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், தரவிறக்கம் செய்து, பதிந்தவுடன், போனுடைய அடிப்படைக் கட்டமைப்பினையே மாற்றி, இன்னும் பல கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களுக்கு வழியை ஏற்படுத்தித் தருகிறது. இதனை, நீக்குவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் இதுவரை தோல்வியில் முடிந்துள்ளன.
Monday, November 23, 2015
மோசமாக எஸ்.எம்.எஸ். தரும் எண்களைத் தடை செய்திட
நம்மில் பலரின் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போனில், மிக மோசமான சொற்கள் அடங்கிய, பாலியல் தொந்தரவு தரும் வகையிலான குறுஞ் செய்திகள் எனப்படும் எஸ்.எம்.எஸ். தகவல்கள் வந்திருக்கும். இவற்றை அனுப்பிய எண்களும் இருக்கும். ஆனால், இந்த எண்களை அழைத்து ஏன் இவ்வாறு மோசமான செய்திகளை அனுப்பியுள்ளீர்கள் எனக் கேட்டால், “அனுப்பவே இல்லை” என்றும், தொடர்ந்து பேசினால், மிக மோசமான சொற்களால் திட்டுக்களும் கிடைக்கும். பலர், இந்த அவமானத்தை வெளியில் சொல்ல தயங்கி, அது பற்றி மேல் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள். காவல் துறைக்குச் சென்றால், பலருக்கு இது தெரிந்துவிடும் என்ற பயமும் இருக்கும். நீங்களாகவே, இதனைத் தடுத்துவிடும் வழிகள் உள்ளன. அதனை இங்கு காணலாம்.
Sunday, November 22, 2015
இனி இண்டர்நெட் இல்லாமலே கூகுளிடம் வழி கேட்கலாம்!
எல்லாருடைய கைகளிலும் ஸ்மார்ட்ஃபோன் தவழும் இன்றைய தேதியில், கிட்டத்தட்ட எல்லா ஆப்ஸ்களுமே இணைய வசதி இருந்தால் மட்டுமே இயங்கக்கூடியதாக இருக்கின்றன.
ஆனால் தங்கு தடையற்ற இணைய இணைப்பு, அதன் வேகம் போன்றவை இடத்துக்கு இடம் மாறுபடுவதால் ‘ஆஃப்லைன் ஃபர்ஸ்ட் மொபைல் டெவெலப்மெண்ட்’ உலகளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. இதன் ஒரு பகுதியாக கூகுள் தன் மேப்ஸ் சேவையை, மொபைல் இணையத்துடன் இணைக்கப்படாமல் இருக்கும்போதும் பயன்படுத்த ஏதுவாக மாறுதல்கள் செய்துள்ளதாக, கடந்த வாரம் அறிவித்தது. தற்போது ஆன்ட்ராய்ட் பயனர்களுக்கும், கூடிய விரைவில் ஐஃபோன் பயனர்களுக்கும் இச்சேவை கிடைக்கும்.
Monday, November 2, 2015
ஸ்மார்ட் போன் குறித்த தவறான கருத்துக்கள்!
ஸ்மார்ட் போன் பயன்பாடு மிக வேகமாக அதிகரித்து வரும் நிலையில், போட்டிகள் நிறைந்த இந்த விற்பனைச் சந்தையில், நிறுவனங்கள் வெளியிடும் விளம்பரங்களால், பலர் ஸ்மார்ட் போன்கள் குறித்துத் தவறான கருத்துகளை வளர்த்துத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவற்றில் சிலவற்றை இங்கு பார்க்கலாம்.
mAH குறியீடு எண்: ஸ்மார்ட் போனில் நிச்சயமாய், இறுதியாகக் காணப்படும் குறிப்பு, அதில் உள்ள பேட்டரியின் திறன் குறித்ததாக இருக்கும். பேட்டரியின் திறனை mAH எனக் குறிக்கின்றனர். இது A milliampere hour (mAh) எனப்படும். (Milliamp Hours.) ஓர் ஆம்பியர் ஹவர் (Ah) என்பதில் 1000ல் ஒரு பங்கு. பேட்டரி ஒன்று, தான் கொள்ளும் சக்தியின் நிலையை இது குறிக்கிறது. அந்த பேட்டரி, மீண்டும் ரீசார்ஜ் செய்யப்படும் நிலைக்குத் தள்ளப்படும் முன், எவ்வளவு மணி நேரம் சக்தியினைக் கொண்டிருக்கும் என்பதனை இது குறிக்கிறது. இந்த எண் உயர்ந்த எண்ணாக இருந்தால், அந்த பேட்டரியின் திறன் அதிகமாக இருக்கும் என்று அனைவரும் எண்ணுகின்றனர். இது தவறு. இதனை வேறு ஒரு எடுத்துக் காட்டுடன் பார்க்கலாம்.
Sunday, October 18, 2015
ஆண்ட்ராய்ட் போனின் வசதிகளை முழுமையாகப் பயன்படுத்த
நம்மில் பலரும் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தி வருகிறோம். இதில் பெரும்பாலானவர்கள் பயன்படுத்துவது ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டமே. ஏனென்றால், ஆண்ட்ராய்ட் சிஸ்டம் நமக்குப் பல வசதிகளைத் தருகிறது. நம்முடைய இதயத் துடிப்பினை ஓர் ஆண்ட்ராய்ட் போன் மூலம் அளக்கலாம். நம் படுக்கை அறையில் உள்ள விளக்கினை, மெத்தையில் படுத்த பின்னர், போனை ரிமோட் கண்ட்ரோலர் போலப் பயன்படுத்தி விளக்கை அணைக்கலாம். கேமரா ஒன்றை போகஸ் செய்து வைத்துவிட்டு, நீங்களும் அதன் முன் நின்று, கேமராவினை போன் வழியாக ஷூட் செய்திடலாம். ஏன், கேமராவில் எடுத்த படங்களை, உங்கள் போனின் வழியாகக் காணலாம். இதெல்லாம் சற்று உயர்நிலை வசதிகள். சற்று தொழில் நுட்பத் திறன் தேவைப்படுபவை.
ஆண்ட்ராய்ட் சிஸ்டம் சில எளிய செயலிகளிலும் பல வசதிகளைத் தருகிறது. இங்கு எளிய வசதிகள் என்று குறிப்பிடப்படுவது அனைத்து தரப்பினருக்கும் சிறப்பான பயனைத் தரும் வசதிகளாகும். அவற்றை இங்கு காணலாம்.
வர்த்தகம் மற்றும் அலுவலகத்தில் பணியாற்றுபவர்களுக்கு, மூன்று விஷயங்கள் மிக முக்கியமானவை. அவை: போகிற போக்கில் நமக்கு வந்திருக்கும் மின் அஞ்சல் கடிதங்களைப் பார்த்து, அஞ்சல் அனுப்பியவர்களுக்குப் பதில் அளிப்பது. அடுத்ததாக, காலண்டர். இதனைப் பயன்படுத்தி, முக்கிய நிகழ்வுகளை நமக்கு போன் நினைவு படுத்தும் வகையில் அமைப்பது. இறுதியாக, நம் தொடர்புகள். நாம் தொடர்பு கொள்ள விரும்பும் நபர்களைத் தொடர்பு கொள்வது.
மற்ற வசதிகளை நாம் போனைப் பயன்படுத்திப் பெறுகிறோமோ இல்லையோ, மேலே சொல்லப்பட்ட மூன்று பிரிவுகளில் நாம் பெறும் வசதிகளே, அனைவருக்கும் அடிப்படைத் தேவைகளாய் உள்ளவை. எனவே, இந்த மூன்று பிரிவுகளில் நாம் எப்படி செயல்பட்டு அவற்றைச் சிறப்பானதாக, முழுமையாகப் பெறலாம் என்பதனை இங்கு காணலாம்.
குறிப்பு 1:
Tuesday, June 9, 2015
ஆக்டா கோர் / குவாட் கோர் சொல்வது என்ன?
மொபைல் போன் ஒன்றை வாங்கும் முன் அதன் பல கட்டமைப்பு வசதிகள் குறித்து மற்ற போன்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் பழக்கம் பரவி வருகிறது. இதில் முக்கியமாக போனில் உள்ள ப்ராசசரின் இயக்க தன்மைகள் குறித்து நாம் அறிந்து கொள்ள விரும்புகிறோம். அந்த வகையில், மொபைல் போன் நிறுவனங்களும், தங்கள் போனில் உள்ள ப்ராசசர் குவாட் கோர் அல்லது ஆக்டா கோர் (நான்கு கோர் மற்றும் எட்டு கோர்) வேகத்தன்மை உடையது என்று அறிவிக்கின்றனர். நாம், உடனே, நான்கைக் காட்டிலும், எட்டுதானே அதிக மதிப்புடையது என்ற எண்ணத்தில், ஆக்டா கோர் ப்ராசசரே சிறந்தது என்ற முடிவிற்கு வருகிறோம். இது அனைத்து போன்களுக்கும் பொருந்தாது. இதன் அடிப்படையில் ப்ராசசரின் இயக்க தன்மை குறித்து முடிவெடுப்பது தவறாகும். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
Tuesday, December 16, 2014
மொபைல் சாதனங்களில் தடம் அமையாத இணையம்
நாம் இணையத்தில் பார்த்துச் செல்லும் தளங்கள் குறித்த தகவல்கள், நாம் பயன்படுத்தும் பிரவுசர் தொகுப்புகளால் பதியப்படுகின்றன. இது குறித்து முன்பு வாடிக்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போது, இந்த பிரவுசர்கள், இந்த தடங்கள் எதுவும் இல்லாத தனிநபர் பயன்பாட்டினைக் (Private browsing) கொண்டு வந்தன. இந்த வகையில் இணையத்தில் உலா வருகையில், நாம் பார்த்த தளங்கள், தரவிறக்கம் செய்த கோப்புகள் குறித்த குக்கி பைல்கள் எதுவும் உருவாக்கப்படாமல் இருக்கும்.
பெர்சனல் கம்ப்யூட்டர்களில் இந்த ஏற்பாட்டினை பிரவுசர்கள் தந்துள்ளன. அப்படியானால், மொபைல் சாதனங்களில், நாம் பயன்படுத்தும் மொபைல் போன்கள் மற்றும் டேப்ளட் பி.சி.க்களில் இந்த வசதி கிடையாதா? என்ற கேள்வி நம் மனதில் எழும். மொபைல் சாதனங்களிலும், இந்த பிரைவேட் பிரவுசிங் வசதி சில பிரவுசர்களால் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்ட் சிஸ்டம் பயன்படுத்தப்படும் மொபைல் சாதனங்களில் இந்த வசதி எப்படி நமக்குத் தரப்பட்டுள்ளது என்று இங்கு காணலாம்.
ஆண்ட்ராய்ட் சாதனங்களில் இயங்கும் கூகுள் குரோம், பயர்பாக்ஸ் மற்றும் டால்பின் பிரவுசர்களில் இந்த பிரைவேட் பிரவுசிங் எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.
அத்துடன், மொபைல் சாதனங்களில், பிரைவேட் பிரவுசிங் வழிகளுக்கென வடிவமைக்கப்பட்டு கிடைக்கும் டால்பின் ஸீரோ மற்றும் இன்பிரவுசர்களில் (Dolphin Zero மற்றும் InBrowser) இந்த வசதியை எப்படிப் பயன்படுத்துவது எனப் பார்க்கலாம்.
கூகுள் குரோம்: கூகுள் குரோம் பிரவுசரில், தடம் அறியா இணையப் பயன்பாட்டிற்கு “Incognito” நிலையில் ஒரு டேப் திறக்கப்பட வேண்டும். இதற்கு, நெட்டு
வேலைத்திறனை அதிகரிக்கும் 10 ஆப்ஸ்கள் !
எந்த வேலையை எப்படி செய்து முடிக்கப் போகிறோம் என்பது தெரியாமல் தலையைப் பிய்த்துக்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், நம் அலுவலகம் மற்றும் தனிப்பட்ட வேலைகளை எளிதாக, ஸ்மார்ட்டாக செய்து முடிக்க உதவும்.
10 ஆப்ஸ்கள் இதோ:
ட்ரெல்லோ!
Sunday, December 14, 2014
ஆப்பிள் வாட்ச்: அதிசயமானதா?

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, டிம் குக் அண்மையில் ஆப்பிள் நிறுவனம் வடிவமைத்த ஆப்பிள் வாட்ச் (Apple Watch) சாதனத்தை அறிமுகப்படுத்தினார். தன் பயன்பாட்டு சாதனங்களில், இதுவரை ஆப்பிள் நிறுவனம் இது போன்றதொரு சாதனத்தைத் தந்ததே இல்லை என்று கூறும் அளவிற்கு நவீன தொழில் நுட்பத்தில் உருவானது என்று குறிப்பிட்டார். கடிகாரம் ஒன்றில் என்னவெல்லாம் எதிர்பார்க்கலாம் என்று மக்கள் எண்ணக் கூடியதைக் காட்டிலும், முற்றிலும் புதிய வசதிகளுடனும் செயல்பாடுகளுடனும் இது உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். ஆண்ட்ராய்ட் தொழில் நுட்பத்தில் இதே போன்ற சாதனத்தை உருவாக்கும் முயற்சிகளுக்கு முன்னாலேயே, ஆப்பிள் வாட்ச் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் எங்கோ சென்றுவிட்டோம் என்றும் கூறியுள்ளார்.
Saturday, December 13, 2014
வைபர் தரும் மொபைல் விடியோ அழைப்பு

உடனடித் தகவல் தொடர்பில் முன்னணி இடத்தைப் பிடித்திருக்கும் வைபர் (Viber), அண்மையில் மொபைல் சாதனங்களில், விடியோ அழைப்பினை மேற்கொள்ளும் வசதியைத் தந்துள்ளது. வைபர் அப்ளிகேஷனைப் பயன்படுத்தி வருபவர்கள், இனி அதன் வழியாகவே, ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களிலும், ஐபோன்களிலும், வீடியோ அழைப்பினையும் மேற்கொள்ளலாம்.
ஏற்கனவே இந்த வசதி பெர்சனல் கம்ப்யூட்டர் மற்றும் மேக் கம்ப்யூட்டர்களில் தரப்பட்டுள்ளது. அவற்றிற்கான புதிய பதிப்பாக வைபர் 5.0 வெளியிடப்பட்டுள்ளது.
இது விண்டோஸ் 8 மற்றும் ஓ.எஸ். எக்ஸ் ஆகிய சிஸ்டங்களுக்காகச் சிறப்பான மேம்படுத்தலுடன் தரப்பட்டுள்ளது.
வைபர் தொகுப்பினைப் பயன்படுத்துபவர்கள், தங்களுடன் தொடர்பில் உள்ளவர்களை, அவர்களுக்குத் தரப்பட்டுள்ள வைபர் பயனாளர் எண்களைக் கொண்டு சீரமைக்கலாம். புதிய பதிப்பு, பயனாளர்களுக்கு புதிய இடைமுகத்தினையும் தந்துள்ளது.
Friday, December 12, 2014
ஆண்ட்ராய்ட் - ஐபோன் 6: ஓர் ஒப்பீடு

இந்த முறை ஐபோன் 6ல் பெரிய திரை தரப்பட்டுள்ளது ஆப்பிள் நிறுவனத்திற்கு வேண்டுமானால், புதிய விஷயமாக இருக்கலாம். ஆனால், பல ஸ்மார்ட் போன்கள் ஏற்கனவே இதனையும் மிஞ்சிய நிலையில் உள்ளன என்பதே உண்மை. ஐபோன் 6 திரை தரும் ரெசல்யூசனும், ஸ்மார்ட் போன்களில் புதிய விஷயமாகக் கருதப்பட வேண்டியதில்லை. அதே போல, ஐபோன் கேமரா 8 எம்.பி. திறன் கொண்டது என்பது ஆண்ட்ராய்ட் போன்களில் முன்பே வந்த முன்னேற்றமாகும்.
வர இருக்கும் ஆப்பிள் வாட்ச் சாதனத்துடன் ஐபோன் 6 இணைக்கப்படும் என்ற அறிவிப்பு, கூகுள் ஏற்கனவே தந்துள்ள Android Wear smartwatch முன்னால் எடுபடுமா என்பதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஐ.ஓ.எஸ். 8 சிஸ்டம் மூலம் ஐ க்ளவ்ட் பைல்களைக் கையாள, இதற்கு மட்டுமேயான அப்ளிகேஷன்கள் உண்டு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கூகுள் இதனை கூகுள் ட்ரைவ் மூலம் ஏற்கனவே தந்து வருகிறது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
ஐபோனில் தரப்படும் வை- பி வகை வேகம் (802.11ac), சாம்சங் கேலக்ஸி எஸ்5 போனில் இயங்கி வருகிறது.
Wednesday, December 3, 2014
கேட்ஜெட் : பிசினஸ் ஆண்ட்ராய்டு ஆப்ஸ்!
தற்போதைய பரபரப்பான தொழில்நுட்ப உலகத்தில் எந்த நேரத்திலும் அலுவலக வேலைகளைச் செய்ய நேரலாம். ஆனால், எல்லா சமயத்திலும் டெஸ்க் டாப், லேப்டாப் போன்றவைகளை உடன் வைத்துக்கொண்டே இருக்க முடியாது. இவற்றுக்கு மாற்றாக தொழில்நுட்ப உலகை ஆக்கிரமித்திருக்கும் ஸ்மார்ட் போனை வைத்து அனைத்து விஷயங்களையும் செய்யும்விதமாக சில அப்ளிகேஷன்கள் இருக்கின்றன. அந்த அப்ளிகேஷன்கள் குறித்து இங்கே பார்க்கலாம்...
கூகுள் டாக்ஸ் (Google Docs)