சிலரால் சிரிப்பதை நிறுத்த முடியாது, சிலரால் அழுகையை கட்டுப்படுத்த முடியாது. சிலருக்கு படுத்தால் உறக்கம் வராது, சிலருக்கு வேலை செய்யும் போதெல்லாம் உறக்கம் வரும். இப்படி பல விஷயங்களை பலர் எப்படி கட்டுப்படுத்துவது என தெரியாமல் திண்டாடுவார்கள்.
நான் பார்த்த,படித்த எனக்கு பிடித்த செய்திகள், கட்டுரைகள்,துணுக்குகள்,வீடியோ,போட்டோக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இடம்
Thursday, October 6, 2016
Friday, September 23, 2016
புதுசா... இளசா... அழகா... - ரிலாக்ஸ் ப்ளீஸ்
``அதிகாலை குட்டி தூக்கம், முகப்பருவை விரட்ட ஹெல்த்தி டயட், தோழிகளுடன் அவுட்டிங் என தனக்கான நேரங்களை திருமணத்துக்குப் பிறகு தொலைத்துவிட்டு, கணவர், குழந்தை என தங்களது முழு நேரத்தையும் குடும்பத்துக்காகவே செலவழிக்கும் பெண்கள், தங்களுக்கே தங்களுக்கான நேரத்தை ரசித்துச் செலவழித்தால்,
Friday, April 8, 2016
கோடையை வெல்ல... `கூல் கூல்’ குறிப்புகள்!
வெயில்... அனைவரையும் தலை கிறுகிறுக்க வைத்துக்கொண்டிருக்கிறது!
கத்தரி வெயிலுக்கும் நம் உடலுக்கும் உள்ள ஹாட் கெமிஸ்ட்ரி பற்றி அறிவோம், முதலில்! உடலின் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் (98 - 99 டிகிரி ஃபாரன்ஹீட்). வெயிலால் அது அதிகரிக்கும்போது, உடலின் தற்காப்பு மண்டலம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சருமத்துக்குச் செல்லும் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். இதனால் வெப்பம் கடத்தப்பட்டு, வியர்வை வெளியேறும். வியர்வை ஆவியாவதன் மூலம் உடல் குளிர்ச்சியடையும்.
Friday, March 25, 2016
கோடைக்கு சர்பத் ரெடி
கோடை வெயில் முன்கூட்டியே கொளுத்தத் துவங்கி விட்டதால், நாமும் அதை எதிர்கொள்ள தயாராகலாம். தண்ணீர் நிறைய குடிக்க வேண்டும் என்று, நாமாகவே ஒரு நாளைக்கு, 2 முதல், 3 லிட்டர் என்று அளவை நிர்ணயித்து குடிக்கிறோம். இது தவறான பழக்கம். உடம்பிற்கு எப்போது தண்ணீர் தேவையோ, அப்போது உடம்பு தானாகவே, சில அறிகுறிகளை காட்டும். அந்த சமயங்களில், தாகம் தீரும் வரை தண்ணீர் குடித்தால் போதுமானது. பாட்டில்களில் அடைக்கப்பட்ட,
Wednesday, March 23, 2016
உங்களுக்கு முடி வேகமாக வளர வேண்டுமா? அப்ப இதெல்லாம் ட்ரை பண்ணுங்க.
உங்களுக்கு முடி வளரமாட்டீங்குதா? எத்தனையோ எண்ணெய்களை வாங்கி பயன்படுத்தியும் எந்த பலனும் கிடைக்கவில்லையா? அப்படியெனில், நீங்கள் உங்கள் முடிக்கு சரியான பராமரிப்புக்களைக் கொடுப்பதில்லை என்று தான் அர்த்தம்.
Tuesday, March 22, 2016
கோடையில் உளுந்து வேண்டாமே!
வழக்கத்தை விட சீக்கிரமாகவே, இந்த ஆண்டு கோடை காலம் துவங்கி விட்டது. ஒரு பருவம் முடிந்து, இன்னொரு பருவம் ஆரம்பிக்கும்போது, காய்ச்சல், சளி, இருமல் போன்ற உடல் பிரச்னைகளின் பாதிப்பு இருக்கும். அதிலும் கோடை ஆரம்பித்தால், காரம், மசாலாவை தவிர்க்க வேண்டும் என்று நினைத்து ஆரோக்கியமான உணவு என்று இட்லி, தோசை, வடை இவற்றை தினசரி உணவாக சாப்பிடுகின்றனர். ஆனால் உளுந்து, கோடை காலத்திற்கு ஏற்ற உணவு இல்லை. உளுத்தம்பருப்பு அஜீரணத்தை அதிகரிப்பதோடு, பித்தத்தையும் அதிகப்படுத்தும். அதனால், இந்த கோடை காலத்தில் இட்லி, தோசைக்கு மாற்றாக, கொள்ளு, பார்லி, துவரம் பருப்பு, பாசிப் பருப்பு, கொண்டைக் கடலை, கொஞ்சம் அரிசி, துளசி இலை, மிளகு சேர்த்து கஞ்சியாகக் காய்ச்சி, வடிகட்டி ஆறிய பின், ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து சாப்பிடுவது நல்லது.
Tuesday, March 15, 2016
பற்களில் மஞ்சள் கறை நீக்க வழி
ஒருவரின் அழகை அதிகரித்து காட்டுவது சிரிப்புதான். இப்படி சிரிக்கும்போது பற்கள் மஞ்சள் நிறமாக இருந்தால், நமது தன்சுத்தம் கேள்விக்குறியாகி விடும். பொதுவாக பற்கள் மஞ்சளாக காணப்படுவதற்கு வயது, பாரம்பரிய காரணிகள், முறையற்ற பல் பராமரிப்பு, அதிகளவு டீ மற்றும் காபி குடிப்பது, புகைப்பிடிப்பது ஆகியவற்றை கூறலாம்.
Sunday, March 13, 2016
இரவில் காபி குடிக்கலாமா?
# தினமும் ஒரே நேரத்திற்கு உறங்கச் செல்வதை பழக்கப்படுத்துங்கள்
# உறங்குவதற்கு முன் வெது வெதுப்பான பாலும், ஒரு வாழைப்பழமும் சாப்பிட்டு விட்டு உறங்கச் செல்லுங்கள். இவற்றின் மூலம் உறக்கத்திற்கான ஹார்மோன் மெலடோனின் சிறந்து செயல்படுகிறது
Wednesday, March 9, 2016
சமைத்த உணவை சூடுபடுத்தலாமா?
கணவன், மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் வீடுகளில், காலையில் சமைத்த உணவையே, இரவும் எடுத்துக்கொள்வது அல்லது இரவு சமைப்பதை அடுத்த நாளைக்குச் சூடுபடுத்தி எடுத்துக்கொள்வது தவிர்க்க முடியாததாகிவிட்டது. பல வீடுகளில், பாலை வாங்கிக் காய்ச்சுவதும், பின்னர் தேவைக்கு ஏற்ப அதை மீண்டும் சூடுபடுத்திக்கொள்வதும் உண்டு.
Thursday, March 3, 2016
கொழுப்பை குறைக்கும் உணவு இவைதான்!
இன்று இளைஞர்கள் முதல் முதியோர் வரை, வயது வித்தியாசமின்றி பலர் இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருந்து, மாத்திரைகளுக்கு எக்கச்சக்கமாக செலவிடுகின்றனர். உணவு வாயிலாக மட்டும் கொழுப்பை கட்டுப்படுத்த முடியும். பூண்டுதான் அந்த எளிய உணவு.
கொழுப்பை குறைப்பதில், பூண்டுக்கு இணை பூண்டேதான். கொழுப்பில் கொழுப்பு கரையும் என்பது போல, பூண்டில் உள்ள கொழுப்பில் நமது உடம்பில் உள்ள, கெட்ட கொழுப்பு கரைக்கப்பட்டு, நல்ல கொழுப்பு அதிகமாகும். இஞ்சி, உடம்பின் கெட்ட கொழுப்பை கரைக்க பயன்படுகிறது. உணவில் அதிகமாக இஞ்சியை சேர்க்க வேண்டும். வெங்காயம், குறிப்பாக சின்ன வெங்காயம் கொழுப்பை கரைப்பதில் எக்ஸ்பர்ட்.
Monday, February 29, 2016
அம்மை, பரு தழும்புக்கு தீர்வு
பெரிய அம்மை ஏற்பட்டு, கொப்புளங்கள் பெரிதானால், குணமான பின்னரும் வடுக்களாக மாறிவிடும். முகத்தில் தழும்புகள் இருந்தால், அழகையே மாற்றி ஒருவித தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். அம்மைத் தழும்புகள் ஏற்பட்டவர்கள், இயற்கையாக கிடைக்கும் பொருட்களைப் பயன்படுத்தி, இழந்த அழகை திரும்பவும் பெற முடியும். இரண்டு ஸ்பூன் கசகசா எடுத்து, தண்ணீரில் ஊற வைக்கவும். சிறிதளவு மஞ்சள் துண்டு, கறிவேப்பிலை எடுத்து மூன்றையும் மை பதத்திற்கு அரைக்கவும்.
Wednesday, January 13, 2016
சங்கடங்களை போக்க சம்மணங்கள்!
Tuesday, September 22, 2015
எடையை குறைக்கலாம்
எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக, வித்தியாசமான பெல்ட் அணிந்து, உடலை வருத்தி கொள்ள வேண்டியதில்லை. சில எளிய வழிமுறைகளால், விரைவில் உடல் எடையை, கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
Saturday, April 11, 2015
கோடை வெயிலை சமாளிக்க வழி
கோடை வெயிலை சமாளிக்க தினமும், 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். வெள்ளரிப்பிஞ்சு, திராட்சை பழங்களை சாப்பிடலாம். மோர், இளநீர் பருகலாம். உடல் சூட்டை தணிக்க இளநீர், தண்ணீர் சத்து அதிகமுள்ள காய், பழங்கள் அதிகமாக சாப்பிடலாம். தர்பூசணி, தக்காளி, எலுமிச்சை பழச்சாறுகளை குடிக்கலாம். வெய்யிலில் போக வேண்டுமென்றால், அரை மணி நேரம் முன்பு சன்ஸ்கிரீன் லோஷன்களை தடவி செல்லலாம்.
Monday, April 6, 2015
இயற்கையான முறையில் வெப்ப காலத்தை எப்படி எதிர்கொள்வது?
வெயிலால் உடலில் இருக்கும் எலக்ட்ரோலைட் (Electrolyte) சமன் இல்லாமல் போகிறது. அதை ஈடுசெய்ய இளநீர் அதிகம் குடிக்கலாம். இளநீரில் உள்ள எலக்ட்ரோலைட், உடனடியாக உடலின் நீர்ச்சத்தை சமன்செய்யும். கூடவே, மூன்று நான்கு லிட்டர் தண்ணீர், நீர்மோர், பழங்கஞ்சி, உப்பும் சர்க்கரையும் சேர்த்த நீர் ஆகாரங்களைச் சாப்பிடலாம். சாதாரணமாக நம் உடலின் வெப்ப நிலை 98.6 டிகிரி இருக்கும். இது, அந்தந்தப் பருவ காலத்திற்கு ஏற்றவாறு சிறிது மாறும். எதிர்ப்புத் திறனைப் பொறுத்துப் பிரச்னைகளை ஏற்படுத்தும். இது, பொதுவாகக் காணப்படும் வெப்ப காலப் பிரச்னை என்றாலும் சிலருக்கு உள்ளுறுப்புப் பாதிப்புகள், பிடிப்புகள், சருமப் பாதிப்புகள், பருக்கள், மயக்கம், குமட்டல் போன்றவற்றை ஏற்படுத்தலாம்.
Saturday, April 4, 2015
கோடை கால குறிப்புகள்
உணவை மாற்றுங்கள்
மூன்று வேளையும் திட உணவு எடுத்துக் கொள்வதைவிட கஞ்சி, கூழ், மோர், இளநீர் என திரவ உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். அலுவலகங்களுக்கு கொண்டு போகும் லஞ்ச் பாக்ஸ்களில் சோறு, சாம்பார், ரசம், பொரியல் என வழக்கமான உணவுகளுக்குப் பதிலாக நீர்ச்சத்துள்ள காய், பழங்களின் சாலட்கள், மோர் ஆகியவை
பிறரை வசப்படுத்துவது எப்படி?
பிறரை வசப்படுத்தும் கலை மட்டும் கை வரப்பெற்று விட்டால், வாழ்வின் பாதி சவால்களுக்கு விடை கண்டு விடலாம். 'பிறரை வசப்படுத்தி என்ன ஆகப் போகிறது... இதெல்லாம் அனாவசியம்; தேவையில்லாத வேலை. எவன் தயவும் எனக்கு தேவையில்ல...' என்று வாதிடும் வறட்டுவாதிகளையும் கூட, இக்கட்டுரை சிறு மன மாற்றத்திற்கு வித்திடும் என்ற நம்பிக்கை, எனக்கு உள்ளது.
மனிதனின் மிகப் பெரிய பலவீனம் அன்பிற்கு ஏங்குவது! இப்படி ஏங்குவதை கூட ஏனோ சிலர் வெளிக்காட்டிக் கொள்வதில்லை. ஒரு பாலைவன பயணிக்கு நீர் கொடுப்பதை விடவும் தேவையான விஷயம் இது. அன்பின் முதல் அடையாளம், புன்னகை; பின், கனிவான சொற்கள், மரியாதை மிகுந்த உடல்மொழிகள். நிறைவாக, மனிதநேயத்தை வெளிப்படுத்தும் அணுகுமுறைகள்.
'என்னை எவனும் மதிப்பதில்லை; யாரும் பொருட்படுத்துவதில்லை; ஒரு உதவி கூட ஒருத்தனும் செய்றதில்லை. மோசமான உலகமிது...' என்று ஒருவர் புலம்பினால், கோளாறு இவரிடம் தான் உள்ளது என்பது மிகத் தெளிவு.
Thursday, April 2, 2015
கூல் சம்மர் கோடையை சமாளிப்பது எளிது !
பாலைவனத்தைப் பார்க்க சுற்றுலா செல்லத் தேவை இல்லாத அளவுக்கு, வெயில் வெளுத்து வாங்கத் தொடங்கிவிட்டது. கோடையின் தொடக்கமே இப்படி என்றால், அக்னி வெயிலை எப்படிச் சமாளிப்பது என்கிற பதற்றம் வரும். அதிக வியர்வை, வியர்க்குரு, கட்டிகள், அம்மை, சோர்வு, மயக்கம் என வெயில் தரும் தொல்லைகள் அநேகம். கூடவே, வெயில் காலத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் முதல் அலுவலகத்தில் சக ஊழியர்கள் வரை எரிந்துவிழுவார்கள். வெயில், நம் மனதின் ஈரத்தையும் உறிஞ்சி, நம்மைச் சிடுசிடுப்பாக்கிவிடுவதே இதற்குக் காரணம். கொஞ்சம் முன்னெச்சரிக்கையாக, தயாராக இருந்தால் சம்மரை கூலாக எதிர்கொள்ளலாம்.
நீர் வறட்சி
எடை அதிகரிக்க என்ன சாப்பிடலாம்?
விரும்பிய உணவையெல்லாம் விரும்பிய நேரங்களில், விரும்பிய அளவுகளில் சாப்பிட்டு, சாப்பிட்டு இன்று பலர் உடல் எடையுடன் காணப்படுகின்றனர். இதனால் பல்வேறு நோய்கள் தாக்குவதால், ஆண், பெண் இருவருக்கும் இன்று உடல் எடையை குறைப்பதுதான் சவால் ஆக உள்ளது.
ஆனால் வேறு சிலர், எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருக்கிறோமே, எப்படி குண்டாவது என புலம்பியபடி இருக்கின்றனர். உணவு பழக்க வழக்கங்களால் மட்டுமே, உடல் எடையை அதிகரிக்க முடியும். கீழே குறிப்பிட்டுள்ள உணவுகளை சாப்பிடுவதன் வாயிலாக, கட்டாயம் உடல் எடையை அதிகரிக்க முடியும். வேர்க்கடலை வெண்ணெயை கோதுமை பிரட்டுடன் தடவி, தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால், அதில் உள்ள அதிகப்படியான, 192 கலோரிகள் உடலுக்கு கிடைத்து, விரைவில் உடல் எடை அதிகரிக்கும்.
Sunday, March 29, 2015
கரித்துணி சுத்தம் ரொம்ப முக்கியம்!
சமையலறை என்றதுமே, தீர்ந்துபோன காஸ் சிலிண்டருக்கு, முன்கூட்டியே புக் செய்வதும், விலைவாசி உயர்வால் வாங்க மறுக்கும் காய்கறிகள் குறித்தும்தான், எல்லோருக்கும் நினைவிற்கு வரும். நாள் முழுவதும் பெண்கள் கையிடுக்கில் பற்றிக்கொண்டேயிருக்கும் டவல்களை பற்றி, யாரும் பெரிதாக கவலைப்படுவதாய் தெரியவில்லை.