Showing posts with label குழந்தை பராமரிப்பு. Show all posts
Showing posts with label குழந்தை பராமரிப்பு. Show all posts

Thursday, October 20, 2016

குழந்தையின் கையெழுத்தை அழகாக்கலாம்!

ங்கள் குழந்தையின் கையெழுத்து அழகாக இல்லை என்ற மனக்குறை உள்ள பெற்றோரா நீங்கள்? அவர்களுக்கு நீங்களே சிறு சிறு பயிற்சிகள் அளித்து அவர்களின் கையெழுத்தை  நேர்த்தியாக மாற்றியமைக்க இயலும் என்கிறார் சென்னையைச் சேர்ந்த

Saturday, October 15, 2016

வீடியோ கேம் வில்லன்! பெற்றோர்களே உஷார்...

உங்கள் குழந்தை எப்போது பார்த்தாலும், வீடியோ கேம்ஸ் விளையாடிக் கொண்டே இருக்கிறார்களா? யார்கிட்டயும் அதிகம் பேசாமல் தனி உலகத்தில் இருப்பதைப் போல இருக்கிறார்களா? அப்படியென்றால், அவர்களுக்கு வரக்கூடிய பின் விளைவுகளைப் பற்றி தெரிந்துகொள்வது மிகவும் அவசியம். இதுபற்றி குழந்தைகள் நல

Wednesday, October 5, 2016

உங்கள் குழந்தையோடு விளையாடுவது எவ்வளவு முக்கியம் தெரியமா?

சோர்வாக இருக்கும்போது உங்கள் மனதை புத்துணர்வாக்க பல்வேறு வழிகள் உள்ளன. சரி உங்கள் மனதை ஊக்குவிக்க என்ன செய்யலாம்? உண்மை என்னவென்றால் உங்கள் குழந்தைகளுடன் செலவிடுவதை விட மகிழ்ச்சியான ஒன்று என்று எதுவும் கிடையாது. அது உங்கள் குழந்தைகளோ அல்லது அக்கம் பக்கத்துக்கு குழந்தைகளோ, உங்களை மகிழ்விப்பதில் அவர்கள் தவறுவதே இல்லை.

முதல் புன்னகை... முதல் மழலை... முதல் நடை!

குழந்தைகள் நலம்

குழந்தைகளை, ஒரு நந்தவனத்தில் இருக்கும் செடிகளில் உள்ள பூக்களுடன் ஒப்பிடலாம். எத்தனை விதமான செடிகள் இருந்தாலும், பூக்கள் இல்லையென்றால் அந்த நந்தவனம் அழகு பெறாது, வெறும் வனமாகத்தானே இருக்கும்! குழந்தை இருக்கும் வீட்டின் குதூகலத்தை வார்த்தைகளில் வர்ணிக்க முடியாது. அதன் முதல் அழுகை, முதல் புன்னகை, முதல் மழலை, முதல் நடை என ஒவ்வொன்றும் நம்மைப் பரவசத்தில் ஆழ்த்துபவை!

Sunday, October 2, 2016

குழந்தைகளுக்கு வாங்கித்தரக் கூடாத பொருட்கள்!

விளையாட்டுப் பொருட்கள் குழந்தைப் பருவத்தின் மிகப்பெரிய புதையல். அது பாதுகாப்பற்றதாக இருந்தால் உடல்நலத்துக்கே பாதிப்பை ஏற்படுத்திவிடும். விளையாட்டுப் பொருட்கள் என்பது விளையாட்டுக்கானது மட்டும் அல்ல... குழந்தையின் புத்திக்கூர்மை, இணைந்து செயல்படும் இயல்பு, அவற்றைப் பத்திரமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற பொறுப்புஉணர்வு என்று பலவகைகளிலும் குழந்தையின் வளர்ச்சிக்குத் துணைபுரிபவை விளையாட்டுப் பொருட்கள்.

Saturday, September 24, 2016

படிக்க அடம்பிடிக்கும் குழந்தைகள்! - பெற்றோருக்கு ஆலோசனைகள்

கேஜி' முதல் இரண்டாம் வகுப்பு வரையிலான குழந்தைகளை வீட்டுப்பாடம் செய்யவைக்க அன்றாடம் அம்மாக்கள்  படும்பாடு சொல்லி மாளாது.  ஹோம் வொர்க் நேரத்தில் அந்தக் குட்டி

Tuesday, September 20, 2016

ஆரம்பம் தான் அடித்தளம்

குழந்தைகளுக்கு ஏற்படும் பிரச்னைகள், அவ்வளவாக வெளியே தெரிவதில்லை. தெரிந்துக் கொள்ளவும், பெற்றோர் பலர், கவனம் செலுத்துவதில்லை. ஏதாவது ஒரு பொருளை கேட்டு அடம் பிடிக்கிறது என்றால், இரண்டு அடி கொடுத்து, குழந்தைகளை உட்கார வைத்து விடுவது, பலரின் இயல்பு.

Sunday, August 14, 2016

தாய்ப்பால்... உயிர்ப்பால்... குழந்தைக்கு மட்டுமல்ல!

விழிப்பு உணர்வு

தாய்ப்பால்... ஒவ்வொரு குழந்தைக்கும் முதல் உணவு. இணையற்ற சிறப்பு உணவு. தாய்ப்பாலின் சிறப்புகளை தாய்மார்கள் அறியச்செய்யும் விதமாகவும், அவர்களை குழந்தைகளுக்கு அதிக நாட்கள் தாய்ப்பால்

Thursday, July 14, 2016

குழந்தை வளர வளர எவ்வளவு பாலூட்ட வேண்டும்?

பிறந்த குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமான உணவு பால். அதிலும், முதல் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடம் வரை தாய்பால் ஊட்ட வேண்டியது அத்தியாவசியமாகும். எனவே, அழகு, வடிவம் என்பதை தாண்டி குழந்தையின் ஆரோக்கியத்தை மனதில் வைத்து, பாலூட்டுங்கள்.

Wednesday, April 27, 2016

குழந்தைகளின் முடி வளர்ச்சிக்கு..!

குழந்தைப் பருவத்தின்போது வியர்வை அதிகம் சுரப்பதால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும். பச்சைப்பயறு, கடலைப்பருப்பு, பூலாங்கிழங்கு, ரோஜா இதழ், ஆவாரம்பூ போன்றவற்றால் ஆன பொடியைக்கொண்டு குழந்தைகளைக் குளிப்பாட்டி வந்தால் பிரச்னைகளில் இருந்து விடுதலை கிடைக்கும். பிறந்து 45 நாட்களுக்கு மேல் ஆன குழந்தைகளுக்கு தலையில் ஒரு சொட்டு விளக்கெண்ணெய் விடுவது, 60 நாட்களுக்கு மேல் ஆன குழந்தைகளுக்கு தேங்காய் எண்ணெய் தடவி தலை வாருவது போன்றவற்றின்மூலம் செதில்கள்

Monday, January 11, 2016

கைக்குழந்தையின் திடீர் அழுகைக்கு காரணம்!

பால் கொடுக்கும் தாய்மார்கள், எதை தின்றாலும், குழந்தைகளின் ஆரோக்கியத்தை கருத்தில் கொள்ள வேண்டும். அதிக எண்ணெய் பலகாரங்கள், புளித்த, பழைய உணவு பொருட்கள், பாக்கெட் உணவுகளை சாப்பிட்டால், குழந்தைக்கு உணவு ஒவ்வாமையால், அடிக்கடி வாந்தி வர வாய்ப்புள்ளது. பொதுவாக, கிராமங்களில் பிறந்தது முதல் ஒரு வயதாகும் வரை, குழந்தைகளை அடிக்கடி மருத்துவமனைக்கு அழைத்து செல்ல மாட்டார்கள்.

Saturday, November 28, 2015

குழந்தை வளர்ப்பு பாட்டி வைத்தியம்!

குழந்தை வளர்ப்பு என்பது, மிகப்பெரிய கலை. வாய் திறந்து பேசும் வரை, எதற்காக குழந்தை அழுகிறது என தெரியாமல், இளம் தாய்மார்கள் படும் அவஸ்தையை விளக்க வார்த்தைகள் இல்லை. இதற்கு தீர்வாக, நாட்டு மருத்துவர்கள் கூறும் சில ஆலோசனைகள்:
காலையில் குழந்தைகள் கண் விழித்தவுடன், ஒரு சொட்டு தேனை நாக்கில் தடவவும். தேன் உடல் வளர்ச்சிக்கு இயற்கை அளித்த, அற்புதமான வரப்பிரசாதம். பொதுவாகவே வசம்பு போடுவதால், குழந்தைக்கு நாக்கு தடித்து சீக்கிரம் பேச்சு வராமல் இருக்கும் என்பார்கள். தேன் தடவுவதால், நாக்கு புரண்டு விரைவில் பேச்சு வரும்.

Saturday, October 24, 2015

குழந்தைக்கு மலச்சிக்கல் இதோ எளிய தீர்வுகள்

குழந்தைகளுக்கான மலச்சிக்கலை, உடனே கவனிப்பது நல்லது. இல்லையெனில், வயிற்று வலியால் அலற ஆரம்பித்து விடுவார்கள். மலச்சிக்கலுக்கு தீர்வு காண, எளிய மருத்துவ குறிப்புகள் இதோ:
பசலைக் கீரையை எடுத்து, பொடிப் பொடியாக அரிந்து, வேக வைத்து சாதத்துடன், தினமும் கொடுக்கலாம். வளரும் குழந்தைகளுக்கு, தேங்காயை வில்லைகளாகச் செய்து, கடித்துச் சாப்பிடக் கொடுக்க வேண்டும். பசும்பாலை விட, அதிகச் சத்துக்கள் தேங்காய்ப்பாலில் நிறைந்துள்ளன. சிறு குழந்தைகள் அருகில் இருக்கும் போது, வீட்டை சுத்தப்படுத்தக் கூடாது. ஏனெனில் தூசியால், குழந்தைகளைத் தும்மல், இழுப்பு, ஆஸ்துமா போன்ற நோய்கள் தாக்கக் கூடும்.

Sunday, October 11, 2015

பிறந்தது முதல் மூன்று வயது வரை... பாப்பாக்களை வளர்க்க பக்குவமான வழிகாட்டி!

குழந்தை வளர்ப்பை எளிதாகக் கடந்து போனார்கள் சென்ற தலைமுறை அம்மாக்கள். ஆனால், இன்றைய ‘நியூக்ளியர் ஃபேமிலி மம்மி’களுக்கு, குழந்தையைக் குளிப்பாட்டுவதில் இருந்து, சோறூட்டுவது வரை அனைத்திலும் தடுமாற்றங்கள்; இதற்கு என்ன செய்ய வேண்டும், இதை எப்படிச் சமாளிக்க வேண்டும் என பல கேள்விகள். பிறந்தது முதல் மூன்று வயது வரை, குழந்தை வளர்ப்பில் அவசியம் செய்ய வேண்டியது, செய்யக் கூடாதது பற்றி ஆலோசனைகள் வழங்குகிறார்கள், சென்னையைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் ரமா மற்றும் நாமக்கல்லைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் சுகுமார்.

Saturday, October 10, 2015

பச்சிளம் குழந்தை பராமரிப்பு

குழந்தை பிறந்தவுடன் எடையை அறிந்து கொள்வது கட்டாயம். நிறை மாத குழந்தை குறைந்தது, 2.5 கிலோ எடை இருக்க வேண்டும்; அதிக எடையாக, 4 முதல் 4.5 கிலோ இருக்கலாம்.
குழந்தை பிறந்தவுடன், முதலில் நன்கு வீறிட்டு அழ வேண்டும். அப்போது தான், நுரையீரல் நன்கு சுருங்கி, விரிந்து மூச்சு விடுதலும், மூளைக்குத் தேவையான ரத்த ஓட்டமும் சீராகும்.
குளிர் காலத்தில், 5 முதல் 6 அடுக்குத் துணி கொண்டு பாதுகாக்கலாம். வெளிர் நிறத்தில், வேலைப்பாடுகள் எதுவும் இல்லாத, பருத்தி சட்டையை முதலில் போட்டு, அதன் மேல் ஸ்வெட்டர் அல்லது கெட்டியான பனியனை போட்டு விடலாம். தலைக்கு பருத்தி குல்லா, கை, கால்களுக்கு உறை போடலாம். குழந்தையின் சட்டையில் பட்டன், கொக்கி, ஜிப் இருக்கக் கூடாது. நாடா அல்லது வெல்க்ரோ நல்லது. கடைகளில் விற்கப்படும், 'நாப்கின், டயாபர்'களைத் தவிர்க்கலாம். ஏனெனில் குழந்தையின் மலம், சிறுநீர் அதிலேயே ஊறி, பிறப்பு உறுப்பில் கிருமித் தொற்று, புண் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உண்டு.
பிறந்த குழந்தைக்கு நீர், மலம், இரண்டுமே அதிகம் வெளியேறும் என்பதால், புண்ணாகும் வாய்ப்பு அதிகம். பெண் குழந்தைக்கு இன்னும் அதிகமாக நோய் தொற்று ஏற்படக் கூடும். சுத்தமான வெள்ளை அல்லது வெளிர் நிற பருத்தி துணிகளை முக்கோணமாக மடித்து, தளர்வாக இடுப்பில் கட்டிவிடலாம்.

ஜெ.குமுதா, பச்சிளம் குழந்தை நிபுணர், பேராசிரியர்.
அரசு குழந்தைகள் நல மருத்துவமனை, ஓய்வு பெற்ற கண்காணிப்பாளர்.

Wednesday, October 7, 2015

குழந்தைகளுக்கு தேன் கொடுக்கலாமா?

குளுக்கோஸ், நீர், என்சைம்கள், புரக்டோஸ் ஆகியவை அடங்கியதுதான் தேன். தேனீ மலரில் இருந்து கொண்டு வரும் குளுக்கோஸ் 40 சதவீதம் முதல் 80 சதவீதம் வரை நீர் நிறைந்ததாக இருக்கும். ஆனால் தேனீக்கள் உற்பத்தி செய்யும் தேனில் 16 முதல் 18 சதவீதமே நீர் இருக்கும். தேனின் நிறம் மற்றும் சுவை தேனீக்களின் வயது மற்றும் அப்பகுதியில் உள்ள தாவர வகைகளைப் பொறுத்து மாறுபட்டு இருக்கும். பொதுவாக தேன் மஞ்சள் நிறத்துடன் இருக்கும். வெளிர் மஞ்சள் நிறத்தேன் தரம் வாய்ந்ததாக இருக்கும்.
தேன் கலோரி ஆற்றல் மிகுந்த ஒரு உணவாகும். மருத்துவ குணமுடையது. நீர்ம

Saturday, October 3, 2015

விளையாட்டா... விபரீதமா? விஷமாகும் பொம்மைகள்! குழந்தைகளைக் காப்பது எப்படி?

குழந்தைகளின் முதல்  நண்பன் பொம்மை.  குழந்தைகளுக்குப் பொம்மைகளோடு விளையாடுவதும்  உறவாடுவதும் அலாதியான ஆனந்தம். பார்க்கும் ஒவ்வொரு பொம்மையையும் வாங்கித்தரச் சொல்லி அடம்பிடிக்காத குழந்தைகளே இல்லை. தூங்கும்போது, குளிக்கும்போது என நாள் முழுக்க பொம்மைகளை உடன் வைத்திருந்தாலும் அவர்களின் ஆசை தீராது.

விலங்குகளை, பறவைகளை, பொருட்களை... மொத்தத்தில் வெளி உலகை குழந்தைகள் தெரிந்துகொள்ள உதவும் முதல் சாதனம் பொம்மைகளே. அந்தக் காலத்தில் மரத்தால் செய்யப்பட்ட பொம்மைகளை குழந்தைகளுக்குக் கொடுத்தார்கள். இப்போதோ, பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி ஆகும் பொம்மைகள்தான் குழந்தைகள் கைகளில் தவழ்கின்றன. இறக்குமதி செய்யப்படும் பொம்மைகளில் அதிக அளவில் காரீயம் உள்ளிட்ட நச்சுக்கள் கலந்திருப்பதாகத் தெரிவிக்கின்றன ஆய்வுகள்.

Tuesday, September 22, 2015

உங்கள் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கிறதா?

குழந்தையின் வளர்ச்சி என்பதைப் பெரும்பாலான பெற்றோர் அதன் உயரம் மற்றும் எடையைவைத்துக் கணக்கிடுகின்றனர். கொழுகொழுவென இருந்தால், ‘ஆரோக்கியமாக இருக்கிறது’ என நினைத்துக்கொள்கின்றனர். இவை மட்டுமே, சரியான வளர்ச்சி எனக் கூறிவிட முடியாது. குழந்தை வளர்ச்சியில், அதன் ஒவ்வொரு காலகட்டமும் ஒவ்வொரு மைல் ஸ்டோன்.

Sunday, September 20, 2015

நோ பிராப்ளம்

குழந்தைகள் என்றாலே, விரல் சூப்புவது என்பது இயல்பு தான். நாம் என்னதான் கையை எடுத்து விட்டாலும், மீண்டும், மீண்டும் பழைய செய்கையே தொடரும். குழந்தைகள் விரல் சூப்புவதற்கு முக்கிய காரணம், தனக்கு முழுமையான பாதுகாப்பு கிடைக்கவில்லை என்று உணர்வதால் தான் என்கின்றனர், உளவியல் அறிஞர்கள்.

Monday, August 31, 2015

உங்கள் குழந்தை சேட்டை பண்ணுகிறதா... சந்தோஷப்படுங்கள்!

ங்கள் குழந்தை பள்ளியில் இருந்து வந்தவுடன் ஷூவைத் தூக்கி எறிகிறதா? கண்ணில் படுவதை எல்லாம் எட்டி உதைக்கிறதா? என்ன கொடுத்தாலும் சாப்பிட மறுத்து அடம்பிடிக்கிறதா? சந்தோஷப்படுங்கள்! ‘இதில் சந்தோஷப்பட என்ன இருக்கிறது?’ என்று எரிச்சலாகிறீர்களா? இதில் எரிச்சலாக என்ன இருக்கிறது... சொல்லுங்கள்! குழந்தை என்றால் அப்படித்தான் சுட்டித்தனம் செய்யும். உங்கள் குழந்தை மட்டுமல்ல... எல்லா குழந்தைகளும் இப்படிச் சேட்டைக்காரர்கள்தான். அதுதான் குழந்தை! ஆனால், 90% மேலான பெற்றோர்கள், அந்தக் குழந்தைத்தனத்தைப் புரிந்துகொள்ளாமல், அவர்களைத் திருத்துவதாக நினைத்து மிரட்டுவது, அடிப்பது, தண்டனை கொடுப்பது என்ற பெயரில், அவர்களின் திறமைகளை, உணர்வுகளை, நல்ல எதிர்காலத்தை முளையிலேயே கிள்ளிவிடுகிறார்கள்.